Saturday, September 18, 2010

சாட் ரூம் (chat room) வழியாக ஷஹாதா கலிமா மொழிந்து இஸ்லாத்தை ஏற்ற பிரிட்டனின் கிறிஸ்தவ சகோதரி சோஃபி ஜென்கின்ஸ்!

நான் ஒரு ஆங்கில கீழ்-நடுத்தர குடும்பத்தில் பிறந்தேன். என் தாய் ஒரு குடும்பத்தலைவி. என் தந்தை மின்னனுவியல் துரையில் ஒரு விரிவுரையாளராக இருக்கிறார். என் தந்தை கத்தோலிக்க பின்னனியில் இருந்தும் என் தாய் புராட்டஸ்டண்ட் பின்னனியில்  இருந்தும் வந்தவர்கள். அவர்கள் 1970 ஆரம்பத்தில் திருமணம் முடித்தனர். நான் வளர்ந்த வந்த போது அவர்கள் கடவுளை நம்பாதவர்களாகவும் மதம் என்பது பெயருக்கு கூட வீட்டில் இல்லாமல் இருந்து. நான் வளர்ந்து கொண்டிருக்கும் போது மத அடிப்படையில் வாழ விரும்பினால் என் பெற்றோர்கள் எனக்கு ஆதரவு தர முடிவு செய்தனர்.

சிறு வயதில் இருந்தே மதம் சார்ந்த அடிப்படையில் நான் வளர்க்கப்படவில்லை என்றாலும் கூட நான் கடவுளை நம்பினேன். ஆயினும் நான் பயின்று வந்த கிறிஸ்தவ பாட சாலையில் போதித்தவைகள் ஏதோ ஒரு வகையில் தவறானவை என்று எனக்குத் தோன்றியது. இயேசுவின் மீதோ அல்லது பரிசுத்த ஆவியின் மீதோ எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இவை அனைத்தும் தவறாக எனக்கு தோன்றின. ஆனால் பள்ளிக்கூடத்தில் இவைகள் தான் சரியான வழி என்றும் மற்ற மதங்கள் அனைத்தும் தவறானவை என்றும் எனக்கு போதிக்கப்பட்டது. ஆகையால் நான் மிகவும் குழப்பமடைந்தேன்.

நீங்கள் சிறுவர்களாக இருக்கும் போது, பெரியவர்கள் சொல்வதை, செய்வதை எல்லாம் எவ்வித தவறும் இல்லாமல் சரியானதவைகளாகத் தான் இருக்கும் என்று நினைப்பீர்கள். இப்போது கூட அப்படித் தான் நினைக்கத் தோன்றும். ஆனால் நான் அவ்வாறு நினைக்கவில்லை. விவேகமாக ‘ஒரு கடவுள் தான் இருக்கிறார்’ என்று தீர்மானித்து தனிப்பட்ட முறையில் நம்பி வந்தேன். அதற்கு முன்னர் தவறானவைகளின் மீது நம்பிக்கை வைத்திருந்ததற்காக வருத்தப்பட்டேன். கிறிஸ்தமத கோட்பாடுகளுக்கு மாற்றாமான நம்பிக்கைகளுடன் தொடர்ந்து இருக்க வெட்கப்பட்டு அதிலிருந்து விடுபட வேண்டுமென கடவுளிடம் பிரார்த்தித்து வந்தேன்.

நான் சிறுமியாக இருந்தபோது “இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பதைப் பற்றி அதிகமாகப் பயம் காட்டப்பட்டேன்”. பொதுவாக நான் முஸ்லிம்களைப் பற்றி அதிகமாக பயந்தேன். குறிப்பாக அன்றைய காலக்கட்டத்தில் மக்கள் மனிதில் நின்ற சல்மான் ருஷ்டி விவகாரத்தைக் கூறலாம். பொதுவாக முஸ்லிம்கள் என்றாலே எனக்கு மிகவும் பயமாக இருந்தது. என்னுடைய ஆரம்ப பள்ளியில் இரண்டு முஸ்லிம் சிறுவர்கள் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்மிக்கையை அவர்களுக்குள் வைத்திருந்தனர். அவர்களில் சிறியவர் அலி, கூட்டாக (ஜமாத்தாக) தொழுவதை மறுத்து வந்தார்.

நான் எப்போதும் கடவுளிடம் சரியான வழியைக் காட்டுமாறு வேண்டிக் கொள்வேன்.  உதவிக்காக எப்போதும் கடவுளையே வேண்டினேன். நான் 11-12 வயதிருக்கும் போதே இறைவன் ஒருவன் மட்டும் தான் இருக்கிறான் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் நம்பினேன். நான் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும்போது நான் வைத்திருந்த ஒரு கடவுள் நம்பிக்கை என்பது தவறில்லை என்று உணர ஆரம்பித்தேன்.

அந்த சமயத்தில் இஸ்லாத்தைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்கவில்லை. இருப்பினும் நான் தெரிந்து வைத்திருந்தது எல்லாம் “இஸ்லாம் என்பது ஒரு கொடுமையான மதம்” என்றும் “அது பெண்களை துச்சமாக மதிக்கிறது” என்பது மட்டும் தான். மேலும் எங்களுக்கு பள்ளிக்கூடங்களிலே “இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது” என்று  பயிற்றுவிக்ககப்பட்டது.

மேலும் “இஸ்லாத்தில் பெண்கள் என்பவர்கள், ஆடைகள் மூலம் அடையாளப்படுத்தக் கூடிய ஒரு போகப் பொருள்” என்றும், “முஸ்லிம்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களை வணங்குகிறார்கள்” என்றும் கற்றுக் கொடுக்கப்பட்டது. மான்செஸ்டர் நகரில் ஏதாவது ஒரு முஸ்லிம் பெண்மணி (எங்கள் ஊரில் சில முஸ்லிம்கள் இருந்தார்கள்) அங்காடியில் பொருட்களை வாங்கும் போது, நான் எனக்குள் ‘நீங்களாகவே எப்படி இதைச் செய்கிறீர்கள்’ என்று கேட்டுக் கொள்வேன். உண்மையில் அந்த அளவிற்கு முஸ்லிம்களின் மேல் அதிக ஆத்திரமும் வெறுப்பும் எனக்கு ஏற்பட்டது.

அதனால் இஸ்லாத்தைப் பற்றி மிகவும் நான் வெறுப்படைந்தேன். ஆனால் முஸ்லிம்கள் ஒரே இறைவனை மட்டும் நம்பிக்கை வைக்கிறார்கள் என்ற ஒரே ஒரு உண்மையை மட்டும் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் உண்மையில் இது இதற்கு முன்பு நான் அறியாமல் இருந்த ஒன்றாகும்.

நான் யூத, ஹிந்து மற்றும் புத்த மதங்களைப்பற்றி ஆராய்ந்தேன். ஆனால் அவைகள் அனைத்தும் மனிதனால் கற்பனை செய்யப்பட்டு மற்றும் முரண்பாடுகளோடு கூடிய மதங்களாக எனக்கு தோன்றின. ஒரு நாள், எது என்னை துண்டியது என்று தெரியவில்லை,  மதங்களைப் பற்றி எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்டவைகள் அனைத்தும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்க என் மனம் நாடியது. மேலும் எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது போல உண்மையில் முஸ்லிம்கள் ஒரே இறைவனை தான் நம்புகிறார்களா? என்பதையும் சரிபார்க்க நான் விரும்பினேன். ஒரு நாள் இங்கே உள்ள நூலகத்தில் “இஸ்லாத்தின் அடிப்படைகள்” (Elements of Islam) என்ற புத்தகத்தை ரகசியமாக வெளியே எடுத்து ‘இஸ்லாமிய பெண்கள்’ என்ற பாகத்தை படித்த போது நான் மிகவும் வியந்து போனேன். அது, இஸ்லாம் மற்றும் முஸ்லிம் பெண்கள் குறித்து எனக்கு போதிக்கப்பட்டதற்கு முரண்பட்டதாகவும் நான் இதுவரை கேள்விப்பட்டதை எல்லாம் விட மிகவும் மேலானதாகவும் இருந்தது. அந்த நூலில் நான் படித்தவை அனைத்தும் சந்தேகமில்லாமல் உண்மை என உணர்ந்தேன். என்னுடைய அனைத்து வகையான தேடல்களுக்கும் விடை கிடைத்து விட்டதன் மூலம் என்னுடைய எல்லா பிராத்த்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டதை என் மனதில் ஆழமாக உணர்ந்தேன். என் வாழ்க்கையில் தேடிக் கொண்டிருந்த உண்மையான மார்க்கம் ‘இஸ்லாம் ஒன்று தான்’ என உணர்ந்தேன். ஆயினும் ஆரம்ப பள்ளி நாட்களில் என் மனதில் ஆழமாக பதிந்திருந்த இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்கள் என் மனதில் உருண்டோடி, தவறான இந்த மதத்தை எப்படி நம்புவது? என்ற ஊசலாட்டங்கள் என் மனதில் தோன்றியதை நினைத்து இப்பவும் வருத்தப்படுகின்றேன்.  

இஸ்லாம் என்பது ஒரு தவறான மார்க்கம் என்று எனக்கு நானே நிருபிப்பதற்கு ஆதாரங்களை தேடினேன். ஆனால் அதற்கான ஒன்றுமே கிடைக்கவில்லை. இஸ்லாத்தைப் பற்றி தவறாக சித்தரித்த புத்தகங்கள் எல்லாம் பொய்களை புனைந்துரைக்கிறது என்று அறிந்து கொண்டேன். இஸ்லாம் பற்றி சிலாகித்துக் கூறும் புத்தகங்கள் உண்மையையே கூறுகின்றன என்பதையும் அறிந்தேன்.

நான் முஸ்லிமாக ஆகவேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆயினும் அதைப்பற்றி யாரிடமும் சொல்லவில்லை. எனக்கு கிடைத்த எல்லா புத்தகங்களையும் படித்தேன். ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட திரு குர்ஆனை நூலகத்தில் இருந்து எடுத்து படித்தேன். நடுத்தரமான ஆங்கில மொழிபெயர்ப்பாக இருந்ததால் என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆயினும் இது என்னை தடுத்து நிறுத்தவில்லை. இது மொழி பெயர்ப்பு என்று அறிந்திருந்தேன். ஆயினும் அதிலிருந்து படித்தவைகள் எனக்கு மிகவும் விருப்பமானவைகளாக இருந்தது. இஸ்லாம் வாழ்க்கை முழுமைக்குமான ஒரு மார்க்கம் என்பதையும் அதிலிருந்து திரும்புதல் என்பது இல்லை என்பதையும் உணர்ந்தேன். எனவே நான் உண்மையில் எதையும் தீர்மானிப்பதற்கு முன் மிகவும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்தேன்.

இரண்டரை வருட படிப்பின் முடிவில் 1997 ஜனவரியில் சாட் ரூம் (chat room) என்பது  என் வாழ்க்கையை மாற்றியது.  இஸ்லாமிய இனைய தளத்தின் விவாத மேடையில் (chat room) மக்கள் எனக்கு மிகவும் உதவி புரிந்தார்கள். இரண்டாவது தடவை அங்கே சென்ற போது உலக மக்கள் எல்லோர் முன்னிலையில் நான் “வணக்கத்திற்கு தகுதியானவன் இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதராவார்கள்” என்ற சாட்சியைச் சொல்லி முஸ்லிமாக மாறினேன்.

நன்றி:www.suvanathendral.com/

நான் ஏன் முஸ்லீம் ஆனேன்? – ஜெர்மன் விஞ்ஞானி!- Video

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கருவியல் நிபுனர் ஒருவர் தாம் இஸ்லாத்தில் இணைந்ததற்கான காரணத்தை நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். அவர் ஆங்கிலத்தில் கூறியவற்றை சுருக்கமாக தமிழில் இங்கே தருகிறோம்.

முதலில் தாம் இஸ்லாத்தில் இணைவதற்கு இறைவன் வழிகாட்டியதாக கூறுகிறார்.

தான் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்னர் தன் வாழ்க்கையின் முதல் 35 ஆண்டுகளில் இறை மறுப்பாளராக இருந்ததாகவும், கடவுள் என்பது தேவையற்ற ஒன்று என்றும் கடவுள் இருப்பதற்கு எவ்வித சான்றுகளுமில்லை என்றும் நம்பிவந்ததாகக் கூறினார். தன் சிறு வயது முதல் அறிவியலில் ஆர்வமாக இருந்ததாக கூறும் இவர் அறிவியல் குறித்து ஓரளவு அறிவு ஞானம் பெற்ற பின்னர் இந்த பிரபஞ்சம் குறித்து ஆராய்ந்த அவர் அதில் எந்தவித பிளவுகளுமின்றி மிகத் துல்லியமாகப் இருப்பதைக்கண்டு, இந்த பிரபஞ்சம் தாமாகத் தோன்றியிருக்க முடியாது, இந்த பிரபஞ்சத்தைக் கடவுள் தான் படைத்திருக்க வேண்டும் என்றும் அதுவும் ஒரு கடவுள் தான் இருக்க முடியும் என்ற முடிவில் ஓரு கடவுள் நம்பிக்கையாளராக மாறியதாகக் கூறுகிறார்.

ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டிருந்தாலும் எந்தவொரு மதத்தையும் தான் பின்பற்ற வில்லையென்றும் எல்லா மதங்களும் தவறானவை என்றும் கருதி வந்ததாகக் கூறுகிறார். இதற்கு காரணமாக அவர் கூறுகையில்,

தன்னடைய வலது கையின் ‘மூன்று’ விரல்களைக் காட்டி அவைகளை கிறிஸ்தவர்கள் ‘ஒன்று’ என்று கூறுவதாகவும்,

யூதர்களைப் பொறுத்தவரையில், யூதர்கள் மட்டுமே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும், யூதர்களல்லாத மற்றவர்கள் அனைவரும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் என்றும் அவர்கள் கூறுவதாகவும்,

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் அவர் அதைப்பற்றிய தவறான கருத்துக்களையும், எதிர்மறையான கருத்துக்களையே கொண்டிருந்ததாகக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், தாம் மதங்களைப் பற்றிய அறியாமையில் நிலைத்திருக்க விரும்பவில்லை என்றும் அதனால் வேத நூல்களைப் படிக்கத்துவங்கியதாகவும் அதற்காக முதலில் கிறிஸ்தவ பைபிளைப் படித்தாகக் கூறுகிறார்.

பைபிளைப் படிக்கும் போது சில இடங்களில் அவைகள் கடவுளிடமிருந்து வந்ததைப் போன்ற உணர்வைத் தோற்றுவித்ததாகவும் பின்னர் மேலும் சில இடங்களில் வசனங்களைப் படிக்கும் போது அவை நிச்சயமாக கடவுளின் வார்த்தைகளாக இருக்க முடியாது, மனிதனால் உருவாக்கப்பட்டவை என்ற உணர்வைத் தோற்றுவித்ததாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் கூறுகையில், பைபிளைப் படிக்கும் போது முதலில் படித்த கருத்துக்களுக்கு முரணான கருத்துக்கள் அடுத்த சில பக்கங்களிலே வருவதாகக் கூறுகிறார். அதனால் அவர் நிச்சயமாக பைபிள் இறைத் தூதருக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னால் மனிதர்களால் எழுதப்பட்டது என்று அறிந்ததாகக் கூறுகிறார்.

பின்னர் திருக்குர்ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றை வாங்கி அதை படிக்கத் துவங்கியிருக்கிறார். திருக் குர்ஆனைப் படிக்கும் போது இதுவும் பைபிளைப் போல ஒரு மனிதனால் எழுதப்பட்ட ஒரு நூல் என்ற நம்பிக்கையிலேயே தாம் படிக்கத் துவங்கியதாகக் கூறுகிறார். ஆனால் குர்ஆனைப் பொறுத்தவரையில் அதன் ஆசிரியர் முஹம்மது என்று திட்டவட்டமாக தாம் நம்பியதாக் கூறும் இவர் குர்ஆனில் மூன்றில் ஒரு பாகத்தை படித்து முடித்துவிட்ட நிலையில் தம் மனைவியிடம், “நிச்சயமாக முஹம்மது ஒரு சிறந்த அறிவாற்றல் உடையவராக இருந்திருக்க வேண்டும்! ஏனென்றால் இதுவரை படித்தவற்றில் முரண்பாடான கருத்து ஒன்று கூட குர்ஆனில் இல்லை, மேலும் இது குறைகள் அறவே இல்லாததாகவும், மிக எளிதாக பின்பற்றக் கூடியதாகவும் இருக்கிறது’ என்று கூறிய இவர் குர்ஆனை தொடர்ந்து படித்து வந்திருக்கிறார்.

குர்ஆனைத் தொடர்ந்து படித்து வந்த அவர் சமீபத்தில் இருபதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மை ஒன்றை திருமறை வசனம் கூறுவதைக் கண்டதாகக் கூறுகிறார். உடனே அவர் நிச்சயமாக முஹம்மது இந்தக் குர்ஆனின் ஆசிரியராக இருக்க முடியாது என்றும் இது இறைவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும் என்றும் நம்பியதாக் கூறும் இவர் நிச்சயமாக முஹம்மது இறைவனால் மனிதகுலத்திற்கு குர்ஆனை வழங்க அனுப்பப்பட்ட தூதராகத் தான் இருக்க முடியும் என்று நம்பியதாகக் கூறுகிறார்.
ஒரு இறைவன் தான் இருக்க முடியும் என்று ஏற்கனவே உறுதி பூண்ட இவர் முஹம்மது (ஸல்) அவர்களை இறைவனின் தூதர் என ஏற்றுக் கொண்டதன் மூலம் தாம் ஒரு முஸ்லிம் ஆனதாக் கூறுகிறார்.

மேலும் இவர் கூறுகையில், பலர் தம்மிடம் ‘இஸ்லாத்தைப் பற்றி ஒன்றுமே அறியாதவராகவும் மேலும் இஸ்லாத்தைப் பற்றிய எதிர் மறையான கருத்துக்களையே கொண்டிருந்த நீங்கள் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்று அறிந்தவுடன் எப்படி செயல்பட்டீர்கள்? உடனே முஸ்லிம் ஆக விரும்புனீர்களா? அல்லது வேறு ஏதாவது எண்ணினீர்களா? என கேட்டனர். அதற்கு நான் கூறினேன், எனக்கு இஸ்லாத்தை விட்டால் வேறு மாற்று வழி இல்லை. ஏனென்றால், நான் பிறந்த போது குழந்தையாக இருந்தேன்!. அதனால் அப்போது நான் என் தாயிலிருந்து வேறுபட்டவனாக உணரமுடியவில்லை! கொஞ்சம் நாள் கழித்த பிறகு நான் உணர்ந்தேன் “நான் ஒரு சிறுவன் என்பதை!. ஆனால் அப்போது யாரும் என்னிடம் கேட்கவில்லை நீ சிறுவனாக விரும்பினாயா? என்று! ஏனென்றால் இது கடவுளின் விருப்பம், நமக்கு வேறு வழியில்லை என்பது தெரியும்.

மேலும் இவர் கூறுகையில், இறைவனின் அருளால் எனக்கு சிறந்த மனைவி, மக்கள் இருக்கிறார்கள்! ஆனால் இவைகள் அனைத்தையும் விட இறைவனின் மிக மிக சிறந்த அருளாக நான் கருதுவது அவன் எனக்கு காட்டிய இஸ்லாம் என்னும் நேர்வழியே ஆகும். மேலும் இவர் கூறுகையில், நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது ‘என்னை இறை நம்பிக்கையாளனாகவே மரணிக்கச் செய், மீண்டும் நான் இறை நிராகரிப்பாளனாக மாற விடாதே!’ என பிரார்த்தனை செய்வதாக கூறுகிறார்

மேலும் இவர் கூறுகையில், சிறிது நேரத்திற்கு முன்னால் என்னிடம் சிலர் ‘குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறப்படும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் சில நேரங்களில் தவறாகக் கூட போகலாம்! எனவே நாம் மிக ஜாக்கிரதையாக அந்த அறிவியல் அத்தாட்சி உண்மையானது தானா என ஆராய்ச்சி செய்ய வேண்டும்’ என கூறினர். இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகிறான், “ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம். (அல்-குர்ஆன் 2:118). எனவே என்னிடம் கேட்டவர்களுக்கு நான் கூறும் பதில் என்னவெனில், நீங்கள் ஈமானில் மிக்க உறுதியுடையவராகவும், அறிவியலில் தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தால், குர்ஆனில் அறிவியல் வசனம் ஒன்றைப் பார்க்கும் போது இது சரியா அல்லது தவறான என கவலைப் படத் தேவையில்லை! ஏனென்றால் அவை உடனே உங்களுக்கு உணர்த்தும் இவைகள் நிச்சயமாக அறிவியல் உண்மைகள்! அதனால் இறைவனுக்கு நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு சஜ்தா செய்ய முற்படுவீர்கள்! ஏனென்றால் இது (குர்ஆன்) மிக உண்மையானது! இதில் எவ்வித தவறும் இல்லை! தவறான எந்தவித அறிவியலும் இதில் இல்லை! இந்த புத்தகம் இறைவனிடமிருந்து வந்தது. எனவே இறைவன் தவறு செய்ய மாட்டான்!

இவ்வாறு அந்த ஜெர்மன் நாட்டு அறிவியல் ஆராய்ச்சியாளர் கூறினார்.


 நன்றி:www.suvanathendral.com/

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? – பிரிட்டனின் முன்னாள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதகுரு!


 ஒரு முன்னால் பிரிட்டன் கத்தோலிக்க மதகுரு, குர்ஆனை படித்து விட்டு பிறகு இஸ்லாத்தை ஏற்கிறார்!

“நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர் ‘நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர் ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர்; மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை. இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் ‘எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம் எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்” (அல்-குர்ஆன் 5:82-83)

பிரிட்டனின் முன்னால் கத்தோலிக்க கிறிஸ்தவ மதகுரு தன்னுடைய மாணவர்களுக்கு புனித குர்ஆனின் மேற்கூறிய வசனத்தை ஓதிக்காட்டியபோது நடந்ததும் இது தான். மேலும் இதுதான் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ளும் தன்னுடைய பயணத்தின் முக்கியமான படிகல்லாகவும் அமைந்தது.

இவர் கெய்ரோவில் உள்ள பிரிட்ஷ் கவுன்சிலில் சமீபத்தில் உரையாற்றிய போது, தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றி நான் வருத்தப்படவில்லை என்று கூறினார். மேலும் வாடிகனில் பணியாற்றிய 5 வருட காலத்தின் போது கிறிஸ்தவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் செய்ததைப் பற்றித் தாம் கலைப்படவில்லை என்றார்.

கிறிஸ்தவ மதகுருவாக இருந்து ஒருசில வருடங்கள் மக்களுக்கு சேவை செய்ததை நான் மகிழ்ந்தேன். இருந்த போதிலும் உள் மனதில் சந்தோஷமில்லாமலும் ஏதோ சரியாக இல்லாததையும் உணர்ந்தேன். இறைவனின் அருளால், அதிர்ஷ்டவசமாக, என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சில நிகழ்வுகள் மற்றும் தற்செயலாக நடந்த சில செயல்களால் நான் இஸ்லாத்துக்கு வர நேர்ந்தது.

தவ்ஃபீக்கின் வாழ்க்கையில் நடந்த மற்றொரு தற்செயலான நிகழ்ச்சி என்னவெனில் எகிப்துக்குச் சென்று வந்த பிறகு வாடிகனில் தன்னுடைய வேலையை இராஜினாமா செய்ய அவர் எடுத்த முடிவாகும்.

எகிப்து என்றாலே பிரமிட், ஒட்டகங்ள், மணல் வெளிகள் மற்றும் பனை மரங்கள் தான் என் நினைவுக்கு வந்தது. ஆகையால் விமானத்தில் Hurghada என்ற ஊருக்குப் பறந்தேன்.  ஆனால் அது ஐரோப்பாவின் கடற்கரையைப் போல இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். முதல் பேருந்தைப் பிடித்து கெய்ரோவிக்குச் சென்று, என் வாழ்க்கையின் உன்னதமான ஒரு வாரத்தை செலவு செய்தேன்.

இதுதான் என்னுடைய முதல் இஸ்லாம் மற்றும் முஸ்லிமைப் பற்றிய அறிமுகமாக இருந்தது . எகிப்தியர் மிகவும் மென்மையான, இனிமையான அதே சயத்தில் மிகவும் வலிமையான மனிதர்களாக இருந்ததை கனித்தேன்.
மேற்கத்திய ஊடகங்கள் சித்தரிப்பது போலவும் அதை நம்பிக் கொண்டிருக்கும் பெரும்பாலான பிரிட்டிஷ் மக்கள் நினைப்பது போலவும் ்முஸ்லிம்கள்் என்றாலே அவர்கள் தற்கொலை படையினராகவும், போராளிகளாகவும் தான் இருப்பார்கள் என்று நானும் நினைத்திருந்தேன். ஆனால் எகிப்துக்கு சென்ற பிறகு இஸ்லாம் எவ்வளவு அழகான மார்க்கம் என்று கண்டு கொண்டேன். வீதியிலே பொருளை விற்பவர்கள், தொழுகைக்காக அழைப்பைக் கேட்டவுடன், தன்னுடைய வியாபாரத்தை விட்டு விட்டு பள்ளிவாசலுக்கு விரைந்து செல்வதை பார்க்க முடிகிறது. இறைவன் இருக்கிறான் என்பதையும் அவன் விருப்பப்படி தான் எல்லாம் நடக்கிறது என்றும் உறுதியாக நம்புகிறார்கள் .

அவர்கள் தொழுது, நேன்பு வைத்து, மறுமையில் சொர்க்கத்தில் வாழ்வதற்காக தன் வாழ்நாளில் மக்காவுக்கு ஒரு முறைசெல்வதற்கு கணவு காண்கிறார்கள் என்றும் விவரித்தார். நான் எகிப்தில் இருந்து திரும்பியதும், மதங்களைக் கற்பிக்கும் என் வேலையை தொடர்ந்தேன். பிரிட்டனின் கல்வித் திட்டத்தில் மார்க்கம் சம்பந்தமான படிப்பு ஒன்று தான் கட்டாய பாடமாக இருக்கிறது. நான் கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத, மற்றும் புத்த மதங்களைப் பற்றி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தேன். நான் ஒவ்வொரு நாளும் மதங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக இந்த மதங்களைப் பற்றிப் படிக்க வேண்டியதாக இருந்தது. மாணவர்களில் பெரும்பாலோர் அரேபிய முஸ்லிம் அகதிகளாக இருந்தனர். சரியாக சொல்ல வேண்டும் எனில் இஸ்லாத்தைப் பற்றி கற்றுக் கொடுப்பது எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தது .
பிரச்சனைகளை உண்டு பண்ணக் கூடிய மற்ற பருவ வயதினரைப் போல் அல்லாமல், ஒரு முஸ்லிம் எப்படி இருக்க வேண்டும் என்று இந்த மாணவர்கள் ஒரு முன் உதாரணமாக திகழ்ந்தார்கள். அவர்கள் அன்பாகவும் அமைதியாகவும் இருந்தார்கள். எங்களிடையே ஒரு நல்ல நட்புணர்வு வளர்ந்த போது, நோன்பு வைக்கக் கூடிய ரமலான் மாதத்தில், அந்த மாணவர்கள் என்னுடைய வகுப்பறையில் தொழுது கொள்ளலாமா என்று என்று என்னிடம் கேட்டார்கள்.
அதிர்ஷ்டவசமாக, என்னுடைய வகுப்பறை ஒன்றுதான்  தரை விரிப்புடன் கூடியதாக இருந்தது. ஆகையால் அவர்கள் தொழும்போது நான் பின்னால் இருந்து பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். நான் ஒரு முஸ்லிமாக இல்லாதபோதும், அவர்களுடன் நானும் நோன்பு வைத்து அவர்களை ரமலான் மாதத்தில் நோன்பு வைக்குமாறு ஆர்வ முரட்டினேன்.

ஒரு முறை வகுப்பறையில் திருக்குர்ஆனின் வசனங்களைப் படித்த போது இந்த வசனத்தை அடைந்தேன்.

“இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் ‘எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம் எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்” (அல்-குர்ஆன் 5:83)

நான் ஆச்சரியப்படும் அளவிற்கு என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அதை மாணவர்களிடமிருந்து மறைப்பதற்கு முயற்சி செய்தேன்.

மிகப் பெரும் நிகழ்ச்சி: -

செப்டம்பர் 11- 2001 அன்று நடந்த அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்ப்புக்குப் பிறகு தான் என் வாழ்க்கையின் திருப்பு முனை அமைந்தது.

அடுத்த நாள், பாதுகாப்பாக நான் கீழ்தளத்தில் இருந்தேன். மேலும் மக்கள் எவ்வளவு பயந்தவர்களாக உள்ளனர் என்பதையும் கனித்தேன். இது போன்ற ஒரு நிகழ்வு பிரிட்டனிலும் நடக்கலாம் என்று நானும் பயந்தேன். அந்த சமயத்தில், மேற்கத்தியர்கள் தங்களால் பயங்கரவாத மார்க்கம் என்று குற்றம் சுமத்தப்படுகின்ற இஸ்லாத்தைப் பார்த்து பயப்பட ஆரம்பித்தனர்.

இருந்த போதிலும், முஸ்லிம்களிடத்தில் எனக்குள்ள முந்தய அனுபவம் என்னை வேறெரு கோணத்தில் அனுகச் செய்தது.  கிறிஸ்தவர்கள் இது போன்ற செயலை செய்கின்ற போது,  பயங்கரவாத கிறிஸ்தவ மதம் என்று குற்றம் சுமத்தாதவர்கள், முஸ்லிம்களாக இருக்கின்ற ஒரு சிலர் செய்கின்ற தீவிரவாத செயல்களின் போது மட்டும் ஏன் தீவிரவாதத்தை இஸ்லாமிய மதத்தோடு சேர்த்து இஸ்லாத்தை குற்றம் சுமத்துகிறார்கள்? ஏன் இஸ்லாம் (மட்டும் குறி வைக்கப்படுகின்றது)? என்று ஆச்சரியப்படத் துவங்கினேன்.

ஒரு நாள் இஸ்லாம் மதத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்காக, லண்டனில் உள்ள மிகப் பெரும் பள்ளி வாசலை நேக்கிச் சென்றேன்.  அங்கே முன்னால் பாப் பாடகர் யூசுப் இஸ்லாம் வட்டமாக உட்கார்ந்து கொண்டு சிலரிடையே இஸ்லாத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் சென்ற பிறகு அவரிடம், நீங்கள் முஸ்லீமாக மாறுவதற்கு என்ன செய்தீர்கள்? என்று வினவினேன்.

“ஒரு முஸ்லீம் ஒரே இறைவனை வணங்கவேண்டும், 5 நேரம் தொழ வேண்டும், ரமலான் மாதத்தில் நேன்பு வைக்க வேண்டும்” என்று பதிலளித்தார். நான் அவரை இடைமறித்து, நான் எல்லாவற்றையும் நம்பினேன், ரமலான் மாதத்தில் நேன்பும் வைத்தேன் என்றேன். பிறகு எதற்காக காத்துக் கொண்டிருக்கிறாய்? என்று அவர் என்னிடம் கேட்டார். நான் மதம் மாறுவதற்கு நினைக்கவில்லை என்றேன்.

அந்த சமயத்தில் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் தயாராகி தொழுவதற்காக வரிசையில் நின்றனர். நான் பின்னால் அமர்ந்தேன். நான் கதறி அழுது, யாரை முட்டாளாக்க முயற்சிக்கிறேன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். அவர்கள் தொழுகையை முடித்த பிறகு, யூசுப் இஸ்லாமிடம் சென்று நான் இஸ்லாம் மதத்துக்கு மாறுவதற்கு என்ன சொல்ல வேண்டும் என்று கற்றுக் கொடுக்கச் சொன்னேன்.

ஆங்கிலத்தில் அதற்குரிய விளக்கத்தை விளக்கிய பிறகு, நான் அரபியில், வணங்குவதற்கு தகுதியானவன் இறைவனைத் தவிர யாரும் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருக்கிறார் என்றும் ஓதினேன்” என்று கண்ணீரைத் துடைத்தபடி நினைவு கூர்ந்தார். தவ்பீக் அவர்கள்.

இஸ்லாத்தின் தோட்டங்கள்: -

இவ்வாறு இவருடைய வாழ்க்கை ஒரு மாறுபட்ட கோணத்தை அடைந்து எகிப்திலே வாழ்ந்து கொண்டு இஸ்லாமிய கொள்கைகள் பற்றிய புத்தகத்தை எழுதினார்.

தன்னுடைய புத்தகத்துக்கு ஏன் “சந்தோஷத்தின் தோட்டங்கள்” என்று பெயரிட்டார் என்று விளக்கும்போது “இது இஸ்லாத்தைப் பற்றிய ஒரு எளிமையான சுய விமர்சனம். இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம் அல்ல என்றும்  மேலும் அது வெறுப்பை உண்டு பண்ணக் கூடிய மதமாக இல்லை என்றும் ஒவ்வொருவரும்  சொல்கின்றனர். ஆனால் உண்மையில் இஸ்லாம் என்றால் என்ன? என்று யாரும் விளக்குவதற்கு முயற்சி செய்யவில்லை”

ஆகையால், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை விளக்குவதற்காக இந்த புத்தகத்தை எழுதுவதற்கு முடிவு எடுத்தேன். இஸ்லாம் ஒரு அழகான மார்க்கம் என்றும், அது எண்ணிலடங்கா பொக்கிஷங்களை கொண்டுள்ளது என்றும், முஸ்லிமாக இருந்து ஒருவர் மற்றவரை அன்பு செலுத்துவது என்றும் சொல்வதற்கு முயற்சி செய்தேன்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் “உன் சகோதரனை பார்த்து புன்முறுவல் செய்வதும் தர்மம்” எனக் கூறினார்கள் என்று தஃபீக் கூறினார்.

மேலும் தவ்ஃபீக் அவர்கள், முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று கூறினார்கள். அந்த புத்தகம், இதுவரை வெளிவந்த புத்தகங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும் என்றார்.

இஸ்லாத்தின் உண்மையான தோற்றத்தை, இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்ட வேகமான மற்றும் மிகச் சிறந்த வழி இந்த உலகத்தில் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நடந்து காட்டுவது தான் என்று தவ்ஃபீக் நினைக்கிறார் .

நன்றி: www.suvanathendral.com 

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? – முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி!



கட்டுரைப் பற்றிய சிறு குறிப்பு: – இது முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் என்று விளக்கிய வீடியோ தொகுப்பிலிருந்து எழுத்தாக்கம் செய்யப்பட்டதாகும்.

வீடியோ வெளியீட்டாளர் : Truth Vision World wide

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? – ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono

நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.

பின்னர் பருவ வயதில் தேவாலயத்தைச் சேர்ந்த “Liaision Maria” என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். Maria என்பது ஈஸா (அலை) அவர்களின் தாயார் மர்யம் (அலை) அவர்களைக் குறிக்கும். இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் “Stray Sheeps” என்று சொல்லப்படக் கூடிய “காணாமல் போன ஆடுகளை” தேடுவதாகும். “காணாமல் போன ஆடுகள்” என்று அவர்கள் குறிப்பிடுவது, நம்முடைய உணவுக்காகவும் ஈதுல்-அல்ஹா பெருநாள் குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆடுகளை அல்ல. மாறாக “காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, “கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களை”. அதாவது இந்த பள்ளி வாசலில் குழுமியிருக்கும் நம்மைப் போன்ற முஸ்லிம்களை அவர்கள் “காணாமல் போன ஆடுகள் என்று குறிப்பிடுகிறார்கள். நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக்கும் ஒரு மிகப்பெரும் செயல் திட்டம் அவர்களிடம் இருந்துக் கொண்டிருக்கிறது.

ஒரு வருடம் கழித்த பிறகு நான், இந்தோனேசியாவில் மிக அதிக அளவில் றுப்பினர்களையுடைய ஒரு கிறிஸ்தவ அமைப்பின் தலைவியானேன். பின்னர் கன்னியாஸ்திரி ஆவதற்காக ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் சேர்ந்தேன்.

சகோதர சகோதரிகளே! நான் ஒரு முஸ்லிம் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. நான் கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியது. கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியதிலிருந்து, அல்லாஹ் அவனுடைய அடிமையாகிய எனக்கு நேர்வழி காட்டத் துவங்கினான்.

பின்னர் கிறிஸ்தவ பாதிரியார்கள் படிக்கும் மேற்படிப்பாகிய மதங்கள் மற்றும் தத்துவங்களைப் பற்றிய (Theology & Philosophy) உயர்ந்த படிப்பைப் படிப்பதற்காக நான் அனுப்பப்பட்டேன்.  அங்கு நான் மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு (Comparative Religion) பாடங்களைப் படித்தேன். இஸ்லாத்தைப் பற்றி பயிற்றுவிக்கப்பட்டேன். ஆனால் உண்மையான இஸ்லாத்தைப் பற்றி அல்ல! இஸ்லாம் என்பது மிக மோசமான மதம் என்று பயிற்றுவிக்கப்பட்டேன்.

“இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் இந்தோனேசியாவிலுள்ள முஸ்லிம்களைப் பாருங்கள்” என்று எங்களுக்கு விளக்கினார்கள்.

இந்தோனேசியாவில்,

- ஏழைகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? – இஸ்லாம்
- முட்டாள்களாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? – இஸ்லாம்

- வெள்ளிக் கிழமை தொழுகையின் போது தங்களின் காலனிகளை தொலைக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? – இஸ்லாம்

- ஒற்றுமையாக இருப்பதற்கு மறுக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? – இஸ்லாம்

- தீவிரவாதிகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? – இஸ்லாம்
இவர்களுடைய இத்தகைய தவறான போதனையினால் என்னுடைய நன்பர்கள் அனைவரும் “இஸ்லாம் என்பது ஒரு மிக மோசமான மதம்” என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். ஆனால் அதே சமயத்தில் நான் அவர்கள் எடுத்திருக்கின்ற முடிவு உண்மைக்கு புறம்பானது என்றும் தவறானது என்றும் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களிடம், “நாம் இந்தோனேசியாவை மட்டும் பார்க்கக் கூடாது, மற்ற நாடுகளில் உள்ள நிலவரங்களையும் நாம் பார்க்க வேண்டும்” என்று கூறினேன்.

உதாரணமாக,

பிலிப்பைன்ஸ் நாட்டில், ஏழைகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களுடைய மதம் இஸ்லாம் அல்ல!.அவர்களெல்லாம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

மெக்ஸிகோ ஒரு ஏழை நாடு. அந்நாட்டில், குற்றவாளிகளாகவும், திருடர்களாகவும், குடிகாரர்களாகவும், கற்பழிப்பு செய்பவர்களாகவும், சூதாட்டக்காரர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்!

அயர்லாந்து குடியரசு நாடு. இந்த நாடு வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கிடையே தீர்க்க இயலாத உள் நாட்டு பிரச்சனையில், சச்சரவில் சக்கித் தவிக்கும் ஒரு நாடு. இந்தப் சச்சரவில் ஒரு முஸ்லிம் கூட  இல்லை. இந்தப் சச்சரவு நடப்பது கத்தோலிக்க மற்றும் புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களுக்கிடையில் தான். அவர்கள் தமக்குள்ளாகவே சன்டையிட்டுக் கொண்டு கொலை செய்கின்றார்கள். ஐரோப்பிய சமூகம் அவர்களை “அயர்லாந்தின் தீவிரவாதிகள்” என்று கருதுகிறது. அவர்கள் “ஐரோப்பிய தீவிரவாதிகள்” என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள்.

இத்தாலியைப் பாருங்கள்! போதைப் பொருள் கடத்துபவர்கள், சூதாட்டக்காரர்கள் – இவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அனைத்து மாஃபிய்யாக் கும்பல்களும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

அப்போது நான் என்னுடைய மேலதிகாரியான பாதிரியாரிடம், “இஸ்லாம் ஒரு மோசமான மதம் என்று நிரூபிக்கப்படவில்லையே” கூறினேன். அப்போது நான், இஸ்லாத்தை, இஸ்லாமியர்களிடமிருந்தே படிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்தேன். அதற்கு, “நான் இஸ்லாத்தின் பலவீனங்களைப் பற்றி மட்டும் படிக்க வேண்டும்” என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்பட்டென்.

நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக “இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான்” என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற “திரித்துவக் கடவுள் கொள்கைக்கு” (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. ஆனால் இரவில் நான் குர்ஆனைப் படித்தபோது (சூரா இக்லாஸ்), இறைவன் ஒருவனே! என்றிருக்கிறது. ஆனால் அன்று காலையிலோ தேவாலயத்தில்  மதங்களைப் பற்றிய பாடத்தை ரெவ. பாதிரியார் அவர்கள் போதித்த போது “கடவுள் ஒருவரே! ஆனால் மூவரில் இருக்கிறார் (திரித்துவம் – Trinity) என்று போதித்தார். அதனால் அந்த இரவில் ஒரு சக்தி என்னை மேலும் குர்ஆனைப் படிக்க உந்தியது. என் ஆழமான உள் மனது “இறைவன் ஒருவனே! என்றும் மேலும் இது (குர்ஆன்) உண்மையானது தான்” என்றும் கூறிற்று.

மறு நாள் காலையில் தேவாலயத்தில் நான் என்னுடைய பாதிரியாரிடம், விவாதித்தேன்.

“கடவுளின் திரித்துவக் கொள்கை” (Trinity of God) என்பது பற்றி எனக்கு சரியாக விளங்கவில்லை என்று அவரிடம் நான் கூறினேன்.

கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாகிய நான் இதுவரைக்கும் கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி எப்படி விளக்கம் பெறாமல் இருக்கமுடியும் என்பதைப் பற்றி அந்த பாதிரியார் மிகவும் ஆச்சரியமடைந்தார்.
அந்தப் பாதிரியார் முன் வந்து ஒரு முக்கோனத்தை வரைந்தார். பின்னர் அவர், ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் (three corners) இருப்பதைப் போல, ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறினார்.

அதற்கு நான், உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும். எனவே கடவுள் மூவரை வைத்து சமாளிப்பது என்பது கடினம். எனவே கடவுள் மற்றொருவருக்கு தேவையுடைவராக இருக்க சாத்தியக்கூறு இருக்கிறதல்லவா? இது சாத்தியம் தானே? என்று கேட்டேன்

அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார் ”இதற்கு சாத்தியமே இல்லை” என்று கூறினார். அதற்கு நான், இது சாத்தியமானதே! கூறி முன்னாள் வந்து, ஒரு சதுரத்தை வரைந்தேன்.  முக்கோனத்திற்கு மூன்று கோணங்கள் இருப்பதைப் போன்று சதுரத்திற்கு நான்கு மூலைகள் (Four corners) இருக்கின்றனவே என்று கூறினேன்.

அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார், ‘முடியாது’ என்று கூறினார். முன்பு  ‘இதற்கு சாத்தியமே இல்லை’ என்று கூறிய அவர், தற்போது ‘முடியாது’ என்று மட்டும் கூறினார்.
நான் கேட்டேன், ஏன்?

அதற்கு பாதியார், ‘இது நம்பிக்கை’. நீ புரிந்துக் கொண்டாயோ இல்லையோ அப்படியே ஏற்றுக்கொள், அப்படியே இதை விழுங்கிவிடு. இதைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! இதைப் பற்றி சந்தேகப்பட்டு கேள்வி கேட்டால் நீ பாவம் செய்தவளாகி விடுவாய்! என்று கூறினார்.

இந்த மாதிரியான பதில் எனக்கு கிடைக்கப் பெற்றும் அன்று இரவு குர்ஆனை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற உறுதியான ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. ஏகத்துவம் குறித்த கடவுள் கொள்கையைக் குறித்து கற்றறிந்த என்னுடைய பாதிரியாருடன் விவாதம் செய்ய விரும்பினேன்.

ஒரு சமயம் நான் என்னுடைய பாதிரியாரிடம், ‘இந்த மேசைகளை உருவாக்கியது யார் என்று கேட்டேன். அதற்கு பாதிரியார் பதிலளிக்க விரும்பாமல் என்னையே பதிலளிக்குமாறு கூறினார்.

அதற்கு நான் ‘ இந்த மேசைகளை உருவாக்கியது “தச்சர்கள்” (Carpenters) என்றேன்.

ஏன்? – பாதிரியார் கேட்டார்.

அதற்கு நான் இந்த மேசைகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவோ அல்லது நூறு வருடத்திற்கு முன்பாகவோ உருவாக்கப்பட்டவைகள். இவைகள் இன்னமும் மேசைகளாகவே இருக்கின்றன.  இந்த மேசைகள் எப்போதும் “தச்சார்களாக” (Carpenters) மாறமுடியாது. மேலும் ஒரே ஒரு மேசை கூட தச்சராக (Carpenter) மாறுவதற்கு ஒருபோதும் முடியாது.

நீ என்ன சொல்ல வருகிறாய்? – பாதிரியார் கேட்டார்.

அதற்கு நான், இந்த பிரபஞ்சத்திலே உள்ள மனிதன் உட்பட உயிருள்ள மற்றும் உயிரற்ற ஒவ்வொன்றையும் கடவுளே படைத்தார். ஒரு வருடத்திற்கு முன்னாள் ஒரு மனிதன் பிறந்தால் அடுத்து வரக் கூடிய நூறு வருடங்களாயினும் அவன் மனிதனாகவே இருப்பான். உலக முடிவு நாள் வரைக்கும் கூட அவன் மனிதனாகவே தான் இருப்பான். ஒரே ஒரு மனிதன் கூட கடவுளாக அவதாரம் எடுக்க முடியாது! மேலும் கடவுளை மனிதனோடு ஒப்பிட முடியாது.

அதற்கு நான் ஒரு உதாரணமும் கூறினேன். ஒரு இராணுவத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களில் ஒருவரை தேர்தெடுத்து அவரை தங்களின் “ஜெனரலாக” தேர்தெடுத்தால் அந்த தேர்வு செல்லாததாகிவிடும். ஏன் அவர்களில் 99 சதவிகிதத்தினர் அவரை தேர்வு செய்திருப்பினும் சரியே!
நீ என்ன சொல்ல வருகியாய்? – பாதிரியார்

அதற்கு நான், “மனிதன் உட்பட இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் கடவுள் படைத்தார். மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை கடவுளாக ஆக்கினால் அந்த தேர்வு செல்லாதது” என்று நான் அந்த பாதிரியாரிடம் விளக்கினேன்.

பின்னர் நான் தொடர்ந்து படித்து வந்தேன். ஒருநாள் நான் என்னுடைய பாதிரியாரிடம், “என்னுடைய ஆராய்ச்சிகளின் படியும், மதங்களைப் பற்றிப் வகுப்புகளில் படித்ததிலிருந்தும் கி.பி. 325 ஆம் ஆண்டில் தான் முதன் முதலாக இயேசு கடவுளாக கருதப்பட்டார்” என்று கூறினேன்.

இவ்வாறு இந்த கன்னிகாஸ்திரி அவர்கள் பலவிதங்களில் அந்த பாதிரியாரிடம் விவாதம் புரிந்ததாகக் கூறினார்கள்.

பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தாம் இஸ்லாமே ஏகத்துவத்தை வலியுத்தும் உண்மையான மார்க்கம் என்றறிந்து இஸ்லாத்தை தழுவிய இந்த முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச்  சேர்ந்த கன்னிகாஸ்திரி Irena Handono அவர்கள் தற்போது இந்தோனேசியாவில் இருக்கும் Central Muslim Women Movement என்ற அமைப்பின் தலைவியாக இருந்துக் கொண்டு இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செய்து கொண்டுவருகிறார்.
அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாகவும்.


நன்றி: www.suvanathendral.com 


நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? – முன்னாள் பெந்தகொஸ்தே மினிஸ்டர் கென்னத் L.ஜெர்கின்ஸ்!


 முன்னுரை: -
ஒரு முன்னாள் மினிஸ்டர் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களின் மூத்த உறுப்பினர் என்ற முறையில் இருள்களில் நடந்து செல்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது என் மீது கடமையாக இருக்கிறது. நான் இஸ்லாத்தைத் தழுவிய பிறகு சத்திய இஸ்லாத்தின் ஒளியை அனுபவிப்பதற்கு பாக்கியம் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டிய அத்தியாவசிய தேவையிருப்பதை உணர்ந்தேன்.

முஹம்மது (ஸல்) அவர்களும் மற்றும் நேர்வழி பெற்ற அவருடைய வழிவந்தவர்களான சத்திய சஹாபாக்கள் போதித்தவாறும் அழகிய மார்க்கமான இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்கும் என் மீது கருனை புரிந்த வல்ல இறைவனுக்கு நான் நன்றி கூற மிகவும் கடமைப்பட்டுள்ளேன். நாம் உண்மையான நேர்வழியை அடைவதும், இம்மை மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும் அந்த நேர்வழியைப் பின்பற்றுவதற்குரிய ஆற்றலை அடைவதும் இறைவனின் கருனையினாலேயன்றி வேறில்லை.

நான் இஸ்லாத்தை தழுவும் போது அஷ்செய்க் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் பாஸ் அவர்கள் என் மீது அன்புகாட்டியதற்காக நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஒவ்வொரு தடவையும் அவரை சந்திக்கும் போது நான் அவரிடமிருந்து கற்ற கல்வியை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்வதில் ஆசைப்படுகிறேன். இவர் தவிர இன்னும் அநேகர் எனக்கு ஆர்வமுட்டி மார்க்க அறிவைப் பெறுவதில் உதவினார்கள். அவர்களின் பெயர்களில் யாரையேனும் நான் விட்டுவேனோ என்ற அச்சத்தின் காரணமாக அவர்களின் பெயரை நான் பட்டியலிடவில்லை. எனவே நான் ஒரு உண்மையான முஸ்லிமாக மாறுவதற்காக ஒவ்வொரு சகோதர, சகோதரிகளையும் எனக்கு எல்லாவகையிலும் உதவி செய்ய வைத்த அல்லாஹ்விற்கு நான் நன்றி செலுத்தினால் போதும் என எண்ணுகிறேன்.

இந்த சிறிய முயற்சி அனைவருக்கும் பயனளிக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன். கிறிஸ்தவ உலகில் பெருவாரியாகக் காணப்படும் மனம் போன போக்கில் வாழும் வாழ்க்கைக்கு ஒருவிடிவு காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையை கிறிஸ்தவர்கள் பெறுவார்கள் என்று நம்புகிறேன். கிறிஸ்தவர்களின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வு கிறிஸ்தவர்களிடம் கிடையாது. ஏனென்றால் அந்தப் பிரச்சனைகளுக்கு மூலகாரணமாக விளங்குவதே அவர்கள் தான். மாறாக, கிறிஸ்தவ உலகை செல்லரித்துக் கொண்டிருக்கின்ற பிரச்சனைகளுக்கும் மற்றும் உலகில் காணப்படும் மற்ற எல்லா மார்க்கங்களிலும் உள்ள பிரச்சனைகளுக்குமான ஒரே தீர்வு இஸ்லாம் தான். இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டி நமது எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் எற்ற சிறந்த நற்கூலியை வழங்குவானாகவும்.

அப்துல்லாஹ் முஹம்மது அல்-ஃபாரூக்கீ அத்தாயிஃப், சவுதி அரேபியா.

அறிமுகம்!

சிறு வயது முதலே கடவுள் பக்தி உள்ளவனாக வளர்கப்பட்டேன். என்னுடைய பாதி வாழ்க்கையை தீவிர பெந்தகோஸ்தே கிறிஸ்தவதத்தைப் பின்பற்றுகின்ற என் பாட்டியிடம் நான் வளர்ந்ததால் சிறுவயது முதலே கிறிஸ்தவ தேவாலயம் எனது வாழ்க்கையின் முக்கிய அம்சமாகி விட்டது. நான் ஆறு வயதை அடைந்தபோது, “ஒரு நல்ல சிறுவனாக இருப்பதற்காக பரலோகத்தில் எனக்காக நல்ல வெகுமதிகள் காத்திருக்கின்றது; அடம்பிடிக்கும் மற்ற சிறுவர்களுக்காக தண்டனைகள் காத்திருக்கிறது” எனவும் நம்பினேன். “பொய்யர்கள் அனைவரும் இழிவுபடுத்தப்பட்டு நரகத்திற்கு செல்வார்கள்; அங்கே அவர்கள் நிரந்தரமாக உரிக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார்கள்” என்றும் எனது பாட்டி எனக்கு போதித்து வந்தார்கள்.

என்னுடைய தாயார் இரண்டு முழு நேரப் பணிகள் செய்து வந்தார். மேலும் அவர் தன்னுடைய தாயார் (எனது பாட்டி) எனக்கு போதித்தவற்றையும் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார். என்னுடைய பாட்டியின் பரலோகத்தைப் பற்றிய எச்சரிக்கைகளைப் பற்றி நான் சிரத்தை எடுத்துக் கொண்டது போல என்னுடைய இளைய சகோதரரும் மூத்த சகோதரியும் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, சிறு வயதில் முழு நிலவை செந்நிறத்தில் காணும் போது நான் அழ ஆரம்பித்து விடுவேன். காரணம் என்னவெனில் உலக அழிவு நாளின் அடையாளங்களில் ஒன்று தான் நிலவு இரத்தத்தைப் போன்று சிவப்பு நிறமாகிவிடுவது என்று போதிக்கப்பட்டிருந்தேன்.

எனக்கு எட்டு வயதாகும் போது இவ்வுலகிலும் ஆகாயத்திலும் காணப்படும் உலக அழிவு நாளுக்கான அடையாளங்களாக நான் நினைத்தவற்றின் காரணமாக எனக்குள் பயம் வளரத் தொடங்கியது. அதன் காரணமாக நியாயத் தீர்ப்பு நாள் இப்படித்தான் இருக்கும் என்று எனக்கு கணவுகள் தோன்றியது. என்னுடைய வீடு இரயில் தண்டவாளத்திற்கு அருகில் இருந்தது. அந்த தண்டவாளத்தின் வழியே அடிக்கடி இரயில் சென்று கொண்டிருந்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, இரயில் எஞ்சினின் ஊதல் சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டு விழித்து, ‘நான் இறந்து விட்டேன்; இப்போது சூர் ஊதல் மூலமாக மீண்டும் உயிர்பிக்கப்படுகின்றோம்’ என்று எண்ணிக் கொள்வேன். சிறுவர் சிறுமியர்களுக்கான பைபிளின் கதைகள் மற்றும் வாய்மொழி போதனைகளின் காரணமாக இத்தகைய எண்ணங்கள் என் பிஞ்சு மனதிலே ஆழமாக பதிந்திருந்தன.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நல்ல உடைகளை உடுத்திக் கொண்டு தேவாலயங்களுக்குச் செல்வோம். என்னுடைய தாத்தா தான் எங்களை எல்லாம் அழைத்துச் செல்வார். நாங்கள் காலை பதினோரு மணிக்கு தேவாலயத்திற்குச் சென்றால் மதியம் மூன்று மணி வரை அங்கேயே இருப்போம். பல நேரங்களில் என் பாட்டியின் காலில் படுத்து உறங்கிய நினைவிருக்கிறது. சில நேரங்களில் நானும் என்னுடைய சகோதரரும் ஞாயிறு வகுப்பு மற்றும் காலை நேர பிரார்த்தனைக்கு இடைப்பட்ட வேளையில் தேவாலயத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதுண்டு. அப்பொழுது எங்கள் தாத்தாவுடன் இரயிலடியில் அமர்ந்துக் கொண்டு போகின்ற வருகின்ற இரயில்களை வேடிக்கைப் பார்ப்பதுண்டு. என் தாத்தா தேவாலயத்திற்குச் செல்வதில்லை. சிறிது காலத்திற்குப் பிறகு என் தாத்தா வாத நோயால் பாதிக்கப்பட்டு பகுதியாக செயலிழந்தார். அதன் காரணமாக நாங்கள் தொடர்ந்தார் போல் தேவாலயத்திற்கு செல்ல இயலாமல் போனது. இந்தக் காலக் கட்டம் என்னுடைய வாழ்க்கையின் மிக முக்கியமானதாக இருந்தது.

தேவாலயத்திற்கு செல்ல இயலாததால் நிம்மதியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது நானாகவே செல்ல வேண்டிய அவசியம் உணர்ந்தேன். எனக்கு பதினாறு வயதாக இருக்கும் போது என்னுடைய நன்பரின் தந்தை பாதிரியாராக இருக்கும் தேவாலயத்திற்கு செல்ல ஆரம்பித்தேன். அது மிகச் சிறிய கட்டிடமாக இருந்தது. அதில் என்னுடைய நன்பரின் குடும்பத்தினர், நான் மற்றும் என்னுடைய மற்றொரு பள்ளி நன்பன் ஆகியோர் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தோம். இது அந்த தேவாலயம் மூடப்படும் வரை பல மாதங்கள் நீடித்தது. பிறகு நான் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பல்கலைகழகத்தில் சேர்ந்த போது நான் என்னுடைய மார்க்கத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகளை மீண்டும் உணர ஆரம்பித்தேன். ஆகவே பெந்தகோஸ்தே போதனைகளின் பால் நான் என்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டேன். எனக்கு “ஞானஸ்நானம்” செய்விக்கப்பட்டு “பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டதாக” கூறப்பட்டேன். ஒரு கல்லூரி மானவன் என்ற முறையில் தேவாலயத்தைக் கொண்டு பெருமிதம் அடைந்தேன். ஒவ்வொருவரிடமும் என்னிடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது. எனவே நான் “பாவமீட்சிக்கான பாதையில்” இருப்பதாக உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தேன்.

நான் தேவாலயத்திற்குச் செல்லும் போதெல்லாம் அதன் கதவுகள் எனக்காகத் திறக்கப்பட்டது. நான் நாள் கணக்காக, வாரக்கணக்காக பைபிளை இடைவிடாது படித்துக் கொண்டிருப்பேன். அப்போது கிறிஸ்தவ அறிஞர்களின் பேச்சுக்களைக் கேட்டு என்னுடைய 20 வயதில் மினிஸ்ட்ரியோடு என்னை இணைத்துக் கொண்டேன். அதன் பிறகு நான் மார்க்க பிரசங்கம் செய்ய ஆரம்பித்து அதன் மூலம் மக்களிடைய நன்றாக அறிமுகம் ஆனேன். நான் இருக்கும் தேவாலயத்தைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தவிர மற்ற எவரும் பாவமீட்சி அடையமுடியாது என்று நான் உறுதியாக நம்பினேன். நான் கடவுளை எப்படி நம்பினேனோ அவ்வாறு கடவுளை நம்பாதவர்களை எல்லாம் கடுமையாக விமர்சித்தேன்.

மேலும் ‘இயேசு நாதரும் இறைவனும் ஒன்று தான்’ என்று நினைத்திருந்தேன். நம்முடைய தேவாலயம் திரித்துவத்தில் நம்பிக்கையில்லாதது என்றும், ஆனால் இயேசு நாதரே (அலை) பிதாவும், மகனும் பரிசுத்த ஆவியுமாவார் என்றும் நான் பயிற்றுவிக்கப்பட்டேன். நான் எனக்குள் அவற்றைப் புரிந்துக் கொள்வதற்கு முயற்சி செய்தேன். ஆனால் நான் உண்மையைக் கூற வேண்டும், என்னால் அதை முழுவதுமாக புரிந்துக் கொள்ள இயலவில்லை. என்னைப் பொறுத்தவரை அதன் சித்தாந்தம் எனக்கு அறிவுப்பூர்வமாகப்பட்டது. பெண்களின் புனித ஆடைகளுக்கும் ஆண்களின் இறை பக்திக்கும் நான் மரியாதை அளித்தேன். தங்களை முழுமையாக மறைத்துக் கொண்டு, முகங்களில் மேக்அப் சாதனங்களை போடாமல், தங்களை இயேசு கிறிஸ்துவின் தூதர்களாக கருதுகின்ற பெண்களையுடைய கிறிஸ்த சித்தாந்தத்தை நான் போதிக்கிறேன் என்று எனக்குள் மகிழ்ந்து பெருமிதம் அடைந்தேன். பரலோக வெற்றிக்கான உண்மையான வழியை நான் கண்டு கொண்டாதாக சிறிது கூட சந்தேக நிழலில்லாமல் என்னில் நானே திருப்தியடைந்துக் கொண்டேன். மற்ற தேவாலயங்களில் இருப்பவர்களுடனும் மற்ற கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களுடனும் எனக்கிருக்கும் பைபிளின் அறிவைக் கொண்டு விவாதம் செய்து அவர்களை மௌனமாக்குவேன். நூற்றுக் கணக்கான பைபிளின் வசனங்களை மனனம் செய்திருந்தேன். இதுவே என்னுடைய மத போதனைகளுக்கு ஒரு முக்கிய விளம்பரமாக இருந்தது. ஆயினும், நான் சரியான பாதையில் இருப்பதாக எனக்குள் உணர்ந்தாலும் என்னுடைய மற்றொரு பகுதி உண்மையைத் தேடிக் கொண்டிருந்தது. இதைத் தவிர உயர்வான உண்மை வேறெங்காவது இருக்க வேண்டும் என நான் உணர்ந்தேன்.

நான் தனிமையில் இருக்கும் போது தியானத்தில் ஈடுபட்டு, ‘நான் தவறான செயல்களைச் செய்து கொண்டிருந்தால் என்னை மன்னித்து எனக்கு சரியான பாதையைக் காட்டுமாறு இறைவனிடம் வேண்டிக் கொண்டிருப்பேன். அந்த சமயங்களில் நான் ஒரு முஸ்லிமைக் கூட சந்தித்ததில்லை. நான் அறிந்தவரையில், எலிஜா முஹம்மது என்பவரைப் பின்பற்றுபவர்கள் தான் “நாங்கள் இஸ்லாமியர்கள்” என்று கூறிக்கொண்டிருந்தனர். அவர்கள் “கறுப்பு முஸ்லிம்கள்” என்றும் அழைக்கப்படுவதுண்டு. எழுபதுகளின் பிற்பகுதியில் அமைச்சர் லூயிஸ் ஃபராக்கான் ‘நேசன் ஆஃப் இஸ்லாம்’ என்ற அமைப்பிற்குப் புத்துயிர் அளித்து புதுப்பித்துக் கொண்டிருக்கின்ற வேளை அது! ஒருமுறை நான் என்னுடைய சக ஊழியரின் அழைப்பின் பேரில் அமைச்சர் ஃபராக்கானின் பேச்சைக் கேட்பதற்காக சென்றேன். அந்தப் பேச்சு என் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவல்ல ஒரு அனுபவமாக உணர்ந்தேன். இதற்கு முன்பு வேறு எந்த கறுப்பு இன மனிதரும் இவர் பேசியது போன்று பேசி நான் கேட்டதில்லை. உடனே அவருடனான ஒரு சந்திப்பை ஏற்படுத்தி அவரை என்னுடைய மத நம்பிக்கைக்கு மாற்றலாம் என விரும்பினேன். வழிதவறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பைபிளை போதித்து மதமாற்றம் செய்வதில் மிகுந்த ஆர்வமுடன் இருந்தேன்.


கல்லூரி படிப்பை முடித்த பிறகு நான் முழு நேரப் பணியில் ஈடுபட்டேன். நான் மினிஸ்ட்ரிக்கு தகுதியான பொழுது எலிஜா முஹம்மதுவை பின்பற்றுபவர்களின் தொடர்பு எனக்கு அதிகமானது. கறுப்பு இனத்தவர்களின் தீமைகளைக் களைவதற்குப் பாடுபடும் அவர்களுடைய முயற்சியை நான் பாராட்டினேன். அவர்களுடைய ஆக்கங்களை நான் வாங்குவது அவர்களுடனான கலந்துரையாடல் போன்றவற்றின் மூலம் அவர்களுக்கு நான் ஆதரவு அளித்தேன். அவர்கள் எதைத் தான் நம்புகிறார்கள் என்று அறிந்துக் கொள்வதற்காக அவர்கள் கல்வி கற்கும் இடங்களுக்கே சென்று பயில ஆரம்பித்தேன். அவர்களுடைய சில கொள்கைகளை நிலை நிறுத்துவதற்காக பைபிளின் ஆதாரங்களை பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. நான் பைபிளைப் பற்றி நன்றாக அறிந்திருந்ததால் அவர்கள் பைபிளை தவறாக புரிந்து அதற்கு வேறு அர்த்தம் கொடுக்கிறார்கள் என்பது என்னை வருத்தத்திற்குள்ளாக்கியது. மேலும் நான் அங்கேயுள்ள பைபிளின் போதனை வகுப்புகளுக்குச் சென்று பைபிளின் பாடம் பயின்று பைபிளின் பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்றேன்.

அதற்குப் பிறகு ஆறு வருடங்கள் கழித்து நான் டெக்ஸாஸ் என்ற பகுதிக்குச் சென்று அங்கேயுள்ள இரண்டு தேவாலயங்களில் என்னை இணைத்துக் கொண்டேன். முதலாவது தேவாலயத்தின் மிக இளமையான தலைவர் பைபிளின் கல்வியறிவிலும் அனுபத்திலும் குறைவானவராக இருந்தார். இந்த நேரத்தில் என்னுடைய பைபிளின் அறிவு சராசரியை விட அதிகமாக இருந்தது. பைபிளைப் போதிப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. நான் வேதாகமங்களை மிக ஆழமாக உற்று நோக்கினேன். அதன் காரணமாக தற்போதைய தேவாலயத்தின் தற்போதைய தலைவரை விட நான் அதிகமாக அறிந்திருப்பதாக உணர்ந்தேன். ஆனால் மரியாதையின் நிமித்தமாக நான் அந்த தேவாலயத்திலிருந்து விடுபட்டு மற்றொரு நகரத்திலுள்ள தேவாலயத்தில் சேர்ந்தேன். அங்கு இன்னும் நிறைய கற்றுக் கொள்ளலாம் என எனக்குத் தோன்றியது. அந்த தேவாலயத்தின் தலைமைப் பாதிரியார் நன்கு கற்றறிந்த அறிஞராக இருந்தார். அவர் ஒரு சிறந்த மத போதகராக இருந்தார். ஆனால் அவருடைய சில எண்ணங்கள், செயல்பாடுகள் தேவாலயத்தின் விதிமுறைகளுக்கு மாற்றமானதாக இருந்தது. அவர் சற்று சுதந்திரமான கருத்துக்களையுடையவராக இருந்தார். இருப்பினும் அவருடைய போதனைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போது என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்கியமான பாடம் ஒன்றைக் கற்கும் வாய்ப்புக் கிட்டியது. அதாவது ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்ற பாடமாகும். வெளிப்பார்வைக்கு வேறு விதமாகத் தோன்றினாலும் நான் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தேவாலயத்தினுள் நிறைய தீமைகள் நடந்தது. தேவாலயத்தினுள் நடைபெற்றுக் கொண்டிருந்த இத்தகைய தீமைகள் என்னுள் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நான் மிகத் தீவிரமாக போதித்து வந்த கொள்கைகளைப் பற்றி எனக்குள் கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன்.

கிறிஸ்த மினிஸ்ட்டிரியின் உயர் மட்டத்தல் மிகுந்த போட்டியும் பொறாமையும் நிலவுவதை நான் குறுகிய காலத்தில் உணர்ந்தேன். எனக்கு நன்கு பரிச்சயமாகியிருந்த பழக்க வழக்கங்களில் இருந்து நிறைய மாற்றங்கள் தென்பட்டது. நான் அநாகரிகமானது என்று கருதியிருந்த ஆடைகளை பெண்கள் அணிந்தார்கள். அநேக மக்கள் எதிர்பாலரைக் கவரக் கூடிய வகையில் ஆடைகளை அணிந்தார்கள். மேலும் பேராசையும் பணமும் தேவலாயத்தின் நிர்வாகத்தில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் கண்டு கொண்டேன். சிறிய அளவிலான தேவாலயங்கள் மிகுந்த பொருளாதாரச் சிக்கலில் தவித்துக் கொண்டிருந்தது. அவர்கள் எங்களிடம் போதனைக் கூட்டங்களை நடத்தி அதன் மூலம் அந்த தேவாலயங்களுக்கு வருமானம் தேடித்தருமாறு வேண்டிக் கொண்டிருந்தார்கள். அந்த சிறிய தேவாலயங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு குறைவானதாக இருப்பின் என்னுடைய நேரத்தை அவர்களுக்கு போதனை செய்வதில் வீணாக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டேன். ஏனென்றால், அந்த தேவாலயங்களின் மூலம் எனக்கு அதிகமாக வருமானம் கிடைக்காது என்பதாகும். அப்போது நான் அவர்களிடம், நான் பொருளாதாரத்தைப் பெருக்குவதின் பின்னால் இல்லை என்றும் அந்த சிறிய தேவாலயங்கள் ஒரே ஒரு உறுப்பினரைக் கொண்டதாக இருப்பினும் அங்கே சென்று போதனை செய்வேன் என்றும் மேலும் அதை நான் இலவசமாகவும் செய்வேன் என்றும் கூறினேன். இது அங்கே மிகுந்த சஞ்சலப்பை ஏற்படுத்தியது. யாரை நான் சிறந்த அறிஞர் என்று கருதியிருந்தேனோ அவர்களிடமே “அவர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்களா என்பதை அறிவதற்காக” கேள்விகள் கேட்கத் துவங்கினேன்.

பைபிளைப் பற்றிய உண்மைகளைப் பற்றி போதிப்பதை விட பணம், பதவி, அதிகாரம் இவற்றுக்குத் தான் மிக முக்கியத்துவம் அங்கு இருப்பதை அறிந்துக் கொண்டேன். பைபிளைப் படிப்பவன் என்ற முறையில் அதில் நிறைய தவறுகளும், முரண்பாடுகளும், பொய்யான கற்பனை ஊடுருவல்களும் இருப்பதை நான் அறிவேன். பைபிளைப் பற்றிய உண்மையான தகவல்களை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என எண்ணினேன். ஆனால் பைபிளின் உண்மைகளை மக்களின் வெளிச்சத்திற்கு எடுத்துச் செல்வதை சாத்தானின் செயலாகக் கருதினர். ஆனால், நான் பைபிளின் போதனை வகுப்புகளின் போது வெளிப்படையாகவே போதகர்களிடம் கேள்விகள் கேட்கத் துவங்கினேன். ஆனால் ஒருவரால் கூட பதில் அளிக்க இயலவில்லை.’இயேசு நாதர் என்பர் எப்படி கடவுளாகவும் அதே நேரத்தில் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரையும் உள்ளடக்கிய ஒருவராகவும் இருக்கிறார்? ஆனால் எப்படி அவர் திரித்துவக் கொள்கைக்கு மாற்றமாகவும் இருக்கிறார்?’ என்ற என்னுடைய கேள்விக்கு ஒருவர் கூட பதில் அளிக்க முடியவில்லை. பல மதபோதகர்கள் “இவை பற்றி எங்களுக்குப் புரியவில்லை! ஆனால் நாங்கள் இவைகளை நம்புகிறோம்! அவ்வளவுதான்” என்று கூறுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை!

திருமணத்திற்கு முன்பே கற்பை இழப்பதும், விபச்சாரமும் தண்டணைகளுக்குரிய குற்றமாக கருதப்படவில்லை! சில மத போதகர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையை அழித்துக் கொண்டதோடல்லாமல் தங்களின்
குடும்பங்களையும் சீரழித்தார்கள். சில தேவாலயங்களின் தலைவர்கள் ஓரிணச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களாக இருந்தார்கள். மேலும் சில பேராயர்கள் மற்ற தேவலாயத்தின் உறுப்பினர்களுடைய மகள்களுடன் விபச்சாரம் செய்த குற்றமுடையவர்களாக இருந்தார்கள். இவைகள் அனைத்தும் மற்றும் நான் நியாயமான கேள்விகள் என்று கருதி கேட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்காதமையும் என்னை வேறு ஒரு மாற்றத்தை தேட வைத்தது. நான் சவூதி அரேபியாவில் ஒரு வேலையை ஏற்றுக் கொண்ட போது அந்த மாற்றம் வந்தது
.

புதிய ஆரம்பம்!

நான் சவூதி அரேபியா வந்தவுடனே முஸ்லிம்களின் ஒரு வித்தியாசமான புதிய வாழ்க்கை முறையை பார்த்தேன். சவூதி ஆரெபியாவில் உள்ளவர்கள், நான் பார்த்திருந்த எலிஜா முஹம்மது மற்றும் லூயிஸ் ஃபராக்கான் ஆகியோர்களைப் பின்பற்றுபவர்களை விட வித்தியாசமானவர்களாக இருந்ததார்கள். இங்கு, அனைத்து நாடுகள், நிறங்கள் மற்றும் மொழிகளையுடையவர்களும் இருந்தார்கள். உடனே இந்த வித்தியாசமான புதிய மதத்தைப் பற்றிப் படிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள் தோன்றியது. தீர்க்கதரிசி முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது. அதனால் நான் மேலும் அறிந்து கொள்ள ஆர்வமானேன். இஸ்லாத்தின் பால் அழைத்துக் கொண்டிருக்கும் ஒரு முஸ்லிம் சகோதரரிடமிருந்து நான் சில புத்தகங்களைக் கேட்டேன். அவர் எனக்குத் தேவையான அனைத்துப் புத்தகங்களையும் கொண்டு வந்துக் கொடுத்தார். அவைகள் ஒவ்வொன்றையும் நான் மிக கவனமாகப் படித்தேன். அதன் பிறகு எனக்கு புனித குர்ஆன் கொடுக்கப்பட்டது. அதை நான் நான்கு மாதங்களுக்குள் பலமுறை படித்துவிட்டேன். நான் கேள்வி மேல் கேள்விகளாக அவர்களிடம் கேட்டேன். நான் கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் எனக்கு திருப்தியளிக்கின்ற வகையில் பதில்களும் கிடைத்தது.

அந்த முஸ்லிம் சகோதரர்கள் என்னை சமாதான படுத்துவதற்காக தங்களுக்குத் தெரிந்த அறிவை வைத்து முயற்சிக்காதது என்னை மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது. ஒரு சகோதரருக்கு நான் கேட்ட கேள்விக்கான பதில் தெரியவில்லை என்றால் அவர்கள் ‘எனக்கு அதற்கான விடை தெரியவில்லை என்றும் தெரிந்தவரிடம் கேட்க வேண்டும்’ என்று கூறிவிடுவார். மறுநாள், நான் கேட்ட கேள்விக்கான விடையோடு அவர் வருவார். மத்திய கிழக்கில் வாழும் இந்த அற்புதமான மனிதர்களின் பணிவை நான் உணர்ந்து வியந்தேன்.

பெண்கள் முகம் முதல் கால் வரை முழுவதுமாக மறைத்திருப்பது கண்டு மிகவும் வியந்துப் போனேன். மத தலைவர் என்று குறிப்பிட்ட எவரும் காணப்படவில்லை. மத தலைமைப் பதவியை அடைவதற்காக எவரும் போட்டி போடுவதில்லை!

இவைகள் அனைத்தும் மிக அற்புதமானவைகளாக எனக்குத் தென்பட்டது. ஆனால் நான் சிறு வயது முதல் பின்பற்றி வந்த போதனைகளை கைவிடுவது பற்றிய சிந்தனைகளை நான் எப்படி என்னுள் அனுமதிக்க முடியும்? பைபிளின் போதனைகளை கைவிடுவதா? பைபிள் எண்ணற்ற முறைகள் மாற்றத்திற்கு உள்ளாகி புதுப்பிக்கப்பட்டிருப்பினும் அதில் சில உண்மைகள் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். அப்போது எனக்கு அஷ்ஷெயக் அஹமது தீதாத் மற்றும் ரெவரென்ட் ஜிம்மி ஸ்வா(g)க்கத் ஆகியோர்களுக்கிடையே நடைபெற்ற ஒரு விவாத வீடியோ கேசட் ஒன்று வழங்கப்பட்டது. அந்த விவாதத்தைப் பார்த்த உடஃனேயே நான் முஸ்லிமாகி விட்டேன்.

நான் முறையாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கான அறிவிப்பு செய்வதற்காக ஷெய்க் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் பாஸ் அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கே நான் இனிவரும் காலங்களில் கடந்து செல்ல வேண்டிய பாதைகளைப் பற்றியும் அதற்காக நான் என்னை எவ்வாறு தயார் படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டேன். நிச்சயமாக இது இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்த ஒரு பிறப்பாகும்.அப்போது நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது குறித்து என்னுடைய தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் அறிந்துக் கொண்டால் அவர்கள் என்ன பற்றி நினைப்பார்கள் என்று சிந்திக்கலானேன். அதற்கு நீண்ட காலம் படிக்கவில்லை. விடுமுறையில் அமெரிக்காவுக்குத் திரும்பியவுடன், ‘நான் நம்பிக்கையில் குறைவனானவன்’ என்று மகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். துரோகி, முட்டாள் போன்ற பல பெயர்கள் எனக்குச் சூட்டப்பட்டது. தேவாலயங்களின் தலைவர்கள் என்று கூறப்படக் கூடியவர்கள் மக்களிடம் ‘அவர்களின் பிரார்த்தனைகளின் போது என்னை நினைவு கூறவேண்டாம்’ என்று கூறினார்கள். ஆனால் விந்தையானது என்னவென்றால் நான் அவைகளைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தவில்லை. அல்லாஹ் என்னைத் தேர்ந்தெடுத்து நேர்வழி காட்டியதற்காக நான் மிகுந்த சந்தோசமாக இருந்தேன். அதனால் அவர்களின் இந்த செயல்கள் எனக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

முன்பு நான் கிறிஸ்தவனாக இருந்தபோது எந்த அளவிற்கு ஒரு பற்றுள்ள கிறிஸ்தவனாக இருந்தேனோ அதே மாதிரி இப்போது ஒரு மிகப் பற்றுள்ள முஸ்லிமாக இருக்க விரும்பினேன். நிச்சயமாக இதற்கு நிறைய படிக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் அறிவை வளர்த்துக் கொண்டே போகலாம் என்பதை உணர்ந்துக் கொண்டேன். இஸ்லாத்தில் கல்வி கற்பது என்பது ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் சொந்தமானது அன்று! யார் வேண்டுமானாலும் கல்வி கற்பதற்குரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு கல்வியை கற்பதற்கு முழு சுதந்திரம் இருக்கிறது. என்னுடைய குர்ஆன் போதகர் ஸஹீஹ் முஸ்லிம் (ஹதீது கிரந்தம்) தொகுப்பு ஒன்றை எனக்கு பரிசாக வழங்கினார். அப்போது தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகள், அவர்களின் சொல், செயல்கள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். நான் ஆங்கிலத்தில் இருக்கும் பெருவாரியான ஹதீது நூல்களை வாங்கிப் படித்தேன். இவற்றைப் படிக்கும் போது என்னுடைய பைபிள் ஞானம் கிறிஸ்தவ பின்னணியில் உள்ள நிகழ்வுகளைப் பற்றி அறிந்துக் கொள்வதற்கு எனக்கு பேருதவியாக இருந்தது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு எனக்கு என்னுடைய வாழ்க்கையே ஒரு முற்றிலும் புதிய வாழ்க்கையாக மாறியது. குறிப்பிடத்தக்க ஒரு பெரிய மாற்றம் என்னவெனில், மறுவுலக வாழ்க்கைக்கு தேவையானவற்றை தயார் செய்வதிலேயே தான் நாம் இந்த உலக வாழ்க்கையை செலவிட வேண்டும் என்பதை அறிந்த போது எனக்குள் ஏற்பட்ட மாற்றத்தைக் கூறலாம்.

மேலும் இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் நம்முடைய நல்ல எண்ணங்களுக்குக் கூட நற்கூலி வழங்கப்படுவோம் என்பதை அறியும் போது புதிய அனுபவமாக இருந்தது. நீங்கள் ஒரு நற்காரியத்தைச் செய்ய விரும்பினாலேயே அதற்கும் நற்கூலி கிடைக்கும். இது தேவாலயங்களின் போதனைகளுக்கு சற்று வித்தியாசமானது. அதாவது ‘நல்ல எண்ணங்கள் நரகத்திற்கான பாதையை வழிவகுக்கிறது’ என்பதாகும். வெற்றி பெறுவதற்கு வழியே இல்லை. நீங்கள் விபச்சாரம் போன்ற பெரிய தவறிழைத்திருந்தால் பாதியாருக்கு முன்னிலையில் பாவ மன்னிப்பு கோரவேண்டும். உங்கள் செயல்களைப் போறுத்தே நீங்கள் நீதி வழங்கப்படுவீர்கள்.

தற்போதைய மற்றும் எதிர்கால் செயல்கள்!

அல்-மதீனா பத்திரிக்கையின் நேர் முக காணலுக்குப் பிறகு என்னுடைய தற்போதைய மற்றும் எதிர்கால் செயல்கள் குறித்து என்னிடம் கேட்கப்பட்டது. என்னுடைய தற்போதைய குறிக்கோள் என்னவெனில் அரபியைக் கற்றுணர்ந்து இஸ்லாத்தைப் பற்றி மென்மேலும் படித்து இஸ்லாமிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். மேலும் தற்போது நான் இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். கிறிஸ்தவ பின்னணியில் இருந்து வருவபவர்களிடம் உரை நிகழ்த்துவதற்கு அழைக்கப்படுகின்றேன். இறைவன் எனக்கு ஆயுளை நீட்டித்தால் மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு நூல்களை எழுத வேண்டும் என விரும்புகிறேன். உலகில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாத்தை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். பைபிளை நீண்ட நாட்களாக போதித்து வந்த ஆசான் என்ற முறையில் பல மில்லியன் மக்களால் நம்பப்படுகின்ற பைபிளில் காணப்படும் தவறுகளையும், முரண்பாடுகளையும் கற்பனையில் புனையப்பட்டு அதில் புகுத்தப்பட்டவைகளையும் எடுத்துக் கூறி அவர்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டுமென்பது என்னுடைய தலையாய கடமை என்பதை உணர்கிறேன்.

சந்தோசமான விசயம் என்னவென்றால் கிறிஸ்தவர்களிடையே நான் மிகப்பெரிய வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டிய அவசியம் ஏதுமில்லை. ஏனென்றால் நான், அவர்கள் பயன்படுத்துகின்ற வாக்குவாத் திறமையை போதித்த ஆசானாவேன். மேலும் நான் எப்படி பைபிளைக் கொண்டு திறமையாக வாதிட்டு கிறிஸ்தவத்தைப் பாதுகாப்பது என்று கற்றறிந்திருந்தேன். மேலும் அதே நேரத்தல் மினிஸ்டர்களாகிய எங்களுக்கு தேவலாயத்தின் தலைவர்களால் வெளிப்படையாக பேசுவதற்கோ அல்லது விவாதிப்பதற்கோ தடைவிதிக்கப்பட்டிருந்த ஒவ்வொரு வாதத்திற்கும் உரிய எதிர்வாதங்களைப் பற்றியும் நான் அறிந்து வைத்திருந்தேன்.

இறைவன் நம் அனைவருடைய அறியாமையை மன்னித்து சுவர்கத்திற்கு இட்டுச் செல்கின்ற நேரான வழியைக் காட்டுமாறு நான் பிரார்த்திக்கின்றேன். அனைத்துப் புகழும் இறைவனுக்கே உரித்தானது. இறைவன் அவனது இறுதித் துதர் முஹம்மது (ஸல்) அவர்கள், அவருடைய குடும்பத்தார்கள், அவரைப் பின்பற்றிய தோழர்கள் மற்றும் அவரைப் பின்பற்றியவர்களுக்கு அருள் புரிவானாகவும்.

நன்றி: www.suvanathendral.com 

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? – Sue Watson, முன்னாள் கிறிஸ்தவ மத போதகர் மற்றும் மிசனரி.



உனக்கு என்ன ஆயிற்று? – இது தான் நான் இஸ்லாத்தை தழுவிய பிறகு என்னுடைய முன்னாள் நன்பர்களையோ அல்லது வகுப்பு தோழிகளையோ, அல்லது என்னுடன் பணி செய்த சக பாதிரியார்களையோ சந்திக்கும் போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்வியாகும். நான் அவர்களைக் குறை கூற முடியாது. ஏன் என்றால் நான் கூட மதமாறுவதை விரும்பாதவளாக இருந்தேன். முன்னதாக நான் ஒரு பேராசிரியையாகவும், கிறிஸ்தவ மதத்தைப் போதனை செய்பளாகவும், கிறிஸ்தவத்தைப் பரப்புகின்ற மிஷனரியாகவும் இருந்தேன். சுருங்கக் கூறவேண்டுமெனில், மத அடிப்படைவாதி என்று யாரையாவது கூறவேண்டுமானால் என்னைக் கூறலாம்.

நான் அப்போது ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் கத்தோலிக்க மத குருமார்கள் பயிற்சி பெறும் ஒரு உன்னதமான பயிற்சி நிறுவனத்திலிருந்து கடவுளைப் பற்றிய படிப்பிற்கான என்னுடைய முதுகலைப் பட்டப் படிப்பை முடித்திருந்தேன். அதற்குப் பிறகு தான் சவூதி அரேபியாவில் வேலை செய்து பின்னர் இஸ்லாத்தை தழுவியிருந்த ஒரு பெண்மணியைச் சந்திக்க நேர்ந்தது. எல்லோரையும் போல் நானும் அந்தப் பெண்ணிடம் இஸ்லாத்தில் பெண்கள் நடத்தப்படும் விதம் பற்றிக் கேட்டேன்.

அவர் கூறிய பதிலைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். ஆமாம் அவர் கூறியது நான் எதிர்பார்த்திருந்தவாறு இல்லை! ஆகையால் நான் தொடர்ந்து இறைவனைப் பற்றியும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் அவரிடம் வினாக்கள் எழுப்பினேன். அதற்கு அந்தப் பெண்மணி, என்னை ஒரு இஸ்லாமிய நிறுவனத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் அங்கிருப்பிருப்பவர்கள் என்னுடைய அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவான பதிலளிப்பார்கள் என்றும் கூறினார்.

தீய சக்தியிடமிருந்து பாதுகாப்பு வேண்டி இயேசுவிடம் பிரார்த்தித்தவளாக நான் அங்கு சென்றேன். ஏன் என்றால் இஸ்லாம் என்பது தீய சக்தியுடையதும் சாத்தானுடையதுமான மதம் என்று எங்களுக்கு போதிக்கப்பட்டிருந்தது. நாங்களும் அவ்வாறே நம்பியிருந்தோம். நான் அங்கு சென்ற பிறகு அங்கிருப்பவர்களின் ஒளிவு மறைவு இல்லாத நேரடியான அனுகுமுறைகள் கிறிஸ்தவ மதத்தைப் போதித்துக் கொண்டிருந்த என்னை மிகவும் ஆச்சர்யத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. எவ்வித
பயமுறுத்தல்களோ அல்லது வற்புறுத்தல்களோ அல்லது மூளைச் சலவை செய்தலோ அல்லது மனரீதியாக மாற்றத்தை ஏற்படுத்துதலோ அங்கு காணப்படவில்லை. நிச்சயமாக அவைகளில் ஒன்றைக் கூட காணமுடியவில்லை! 

“நீங்கள் பைபிளைப் படிப்பது போல ‘உங்கள் வீட்டிலேயே குர்ஆனைப் படிக்கலாம்!”

என்னால் நம்பவே முடியவில்லை! அவர்கள் என்னிடம் சில புத்தகங்களைக் கொடுத்து, உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் நாங்கள் உங்களுக்கு பதில் தருவதற்கு எங்கள் அலுவலகத்தில் காத்திருக்கிறோம் என்று கூறினார்கள். அன்று இரவே அவர்கள் எனக்கு கொடுத்த அனைத்து புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டேன். அது தான் நான் முதன் முறையாக இஸ்லாத்தைப் பற்றி முஸ்லிம்களால் எழுதப்பட்ட நூல்களை வாசித்தது ஆகும். இதற்கு முன்னர் இஸ்லாத்தைப் பற்றி கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட (விமர்சன) நூல்களையே படித்திருக்கிறோம். மறுநாள் நான் அவர்களின் அலுவலகத்திற்குச் சென்று மூன்று மணி நேரங்கள் அங்கு அமர்ந்து அமர்ந்து அவர்களிடம் கேள்விகள் பல கேட்டேன். இவ்வாறு நான் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அங்கு சென்று வந்தேன். ஒரு வாரத்தில் நான் பன்னிரண்டு புத்தகங்களைப் படித்து விட்டேன். உலகத்திலுள்ள மக்களிலேயே முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாக்குவது மட்டும் ஏன் மிகுந்த சிரமத்திற்குரியதாக இருக்கிறது என்று அப்போது தான் நான் உணர்ந்துக் கொண்டேன். ஏன்? ஏனென்றால் இஸ்லாத்தை விடுவதற்கான காரணம் அங்கு ஏதுமில்லை! இஸ்லாத்தில் இறைவனுடனான நேரடித் தொடர்பு இருக்கிறது. பாவங்களுக்கான மன்னிப்பும், நரக மீட்சியும் பரலோக நிரந்தர வாழ்விற்கான இறைவனின் வாக்குருதியும் இருக்கின்றது.

இயற்கையாகவே என்னுடைய முதல் கேள்வி கடவுளை மையமாக வைத்தே இருந்தது. முஸ்லிம்கள் வழிபடும் இந்தக் கடவுள் யார்? “இது வேறோரு கடவுள்”, “பொய்யான கடவுள்” என்று கிறிஸ்தவர்களாகிய எங்களுக்கு போதனை செய்யப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் அவன், சர்வ ஞானமும் நிறைந்த, சர்வ சக்தியும் உடைய, தன்னுடைய ஞானத்தால் எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கின்ற எவ்வித இணை துணைகளே இல்லாத ஒரே ஒரு இறைவன் ஆவான். மேலும் கிறிஸ்துவிற்குப் பிறகு முதல் மூன்று நூற்றாண்டுகள் கிறிஸ்தவ பாதிரியார்கள், இயேசு நாதர் ஒரு இறைத் தூதரும் இறைவனின் தூதுச செய்தியை போதித்த மத போதகரும் ஆவார் என்ற முஸ்லிம்களின் நம்பிக்கையின் படியே போதித்து வந்தார்கள் என்று அறியும் போது மிகவும் ஆர்வமாக இருந்தது. கான்ஸ்டன்டைன் என்ற மன்னர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பின்னரே திரித்துவம் என்ற மூன்று கடவுள் கோட்பாட்டைக் கிறிஸ்தவ மதத்தில் தோற்றுவித்தார். கிறிஸ்தவத்தைப் பற்றி ஒன்றுமே அறியாமல் இருந்து புதிதாக கிறிஸ்தவத்தை தழுவிய இந்த மன்னரே பாபிலோனிய காலத்தில் இருந்த அறியாமைக் கடவுள் கொள்கையை திரித்துவம் என்ற பெயரில் கிறிஸ்தமதத்தில் நுழைத்தார். விரிவுக்கு அஞ்சி இந்த தலைப்பில் அதிகமாக விளக்க விரும்பவில்லை. இறைவன் நாடினால் மற்றொரு சமயத்தில் இதைப் பற்றி விளக்குவோம். முக்கியமாக நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். திரித்துவம் என்பது பைபிளின் பல்வேறு மொழிபெயர்ப்புகளில் எந்த ஒன்றிலும் காணப்படவில்லை! மேலும் மூல பாசைகளான ஹீப்ரு மற்றும் கிரேக்க மொழியிலான பைபிளிலும் இந்த திரித்துவம் காணப்படவில்லை.

என்னுடைய மற்றொரு முக்கியமான கேள்வி முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றியதாகும். முஹம்மது என்பவர் யார்? கிறிஸ்தவர்கள் இயேசு நாதரை வழிபடுவது போல் முஸ்லிம்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களை வழிபடுவது இல்லை என்பதை அறிந்துக் கொண்டேன். இறைவனுக்கும் மக்களுக்கும் இடைப்பட்டவராக அவர் இல்லை! மேலும் அவரை வழிபடுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது என்றும் நான் அறிந்துக் கொண்டேன். முஸ்லிம்களின் பிரார்த்தனைகளின் (தொழுகைகளின்) இறுதியில் அவருக்கு (முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு) அருள் புரியுமாறு வேண்டுகிறார்கள். ஆனால் ஆபிரஹாமுக்கு இறைவன் அருள் புரிந்ததைப் போன்று தான் வேண்டுகிறார்கள். அவர் ஒரு நபியும் இறைத் தூதரும் ஆவார்கள். மேலும் இறுதி தூதரும் ஆவார்கள். உண்மையில் 1418 ஆண்டுகளுக்குப் பிறகும் இதுவரை எந்த ஒரு இறைத் தூதரும் அவருக்குப் பிறகு வரவில்லை! இயேசு நாதர் மற்றும் மோஸஸ் ஆகியோர் யூதர்களுக்கு மட்டும் கொண்டு வந்த தூதுச் செய்திகளைப் போல் அல்லாமல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இறைவனின் தூதுச் செய்தி மனித குலம் அனைத்திற்குரியதாகும்.

இஸ்ரவேலர்களே! கேளுங்கள்! – இந்த செய்தி இறைவனின் ஒரே செய்தியாகும். ‘இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்’ (மாற்கு 12:29)

பிரார்த்தனை (வணக்கம்) என்பது என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்கியமான அங்கமாகையால் முஸ்லிம்கள் எதை வணங்குகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்வதில் மிக மிக ஆர்வமாக இருந்தேன். கிறிஸ்தவர்களாகிய நாங்கள் முஸ்லிம்களின் மற்ற நம்பிக்கைகளைப் பற்றி அறிந்திருந்ததை விட முஸ்லிம்கள் எதை வணங்குகிறார்கள் என்பதைப் பற்றி மிக மிக அறியாமையில் இருந்தோம். முஸ்லிம்கள் (மக்காவிலுள்ள) கஃபாவுக்கு குனிந்து வணக்கம் செலுத்துகிறார்கள் என்றும், அது தான் அவர்களுடைய பொய்யான கடவுளின் மையப்பகுதி என்றும் எங்களுக்குப் போதிக்கப்பட்டு வந்தது. அதையே நாங்களும் உண்மை என்றும் நம்பி வந்தோம். எனவே நான் முஸ்லிம்களின் பிரார்த்தனை (வணக்க முறை) என்பது இறைவனாலேயே கற்றுக் கொடுக்கப்பட்டது என்பதை அறிந்த போது மீண்டும் ஆச்சர்யத்திற்குள்ளானேன். மேலும் பிரார்த்தனையின் வார்த்தைகள் இறைவனைப் போற்றிப் புகழ்வதாகும். இறைவனைப் பிரார்த்திக்கச் செல்வதற்கு முன் தூய்மைப் படுத்திக் கொள்வது (உளு) என்பது இறைவனின் கட்டளையயின் பிரகாரம் ஆகும். அவன் மிகவும் பரிசுத்தமான இறைவனாவான். அவன் நமக்கு கற்றுத் தந்த முறைகளிளல்லாது வேறு எந்த முறையிலும் அவனை அணுக கூடாது என்பதையும் அறிந்துக் கொண்டேன்.

மதங்களைப் பற்றிய எட்டு வருடங்கள் எனது ஆரய்ச்சிக்ப் பிறகு, அந்த வார இறுதியில் இஸ்லாம் என்பது ஒரு ஒண்மையான மார்க்கம் என்று நான் அறிந்துக் கொண்டேன். ஆனால் அந்த சமயத்தில் நான் இஸ்லாத்தை தழுவவில்லை. ஏனென்றால் என்னுடைய மனதளவில் இன்னும் நம்பிக்கை வரவில்லை. நான் தொடர்ந்தார் போல் பைபிளைப் படித்துக்கொண்டும், பிரார்த்தனைகள் செய்துக் கொண்டும் மேலும் இஸ்லாமிய சென்டர்களில் நடைபெறும் பிரச்சாரங்களில் கலந்துக் கொண்டும் இருந்தேன். நான் பேராவலுடன் கடவுளிடம் நேர்வழியைக் காட்டுமாறு வேண்டிக் கொண்டிருந்தேன். உங்களுடைய மதத்தை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல! பாவமீட்சி என்று ஒன்றிருந்தால் நான் என்னுடைய பாவமீட்சியை இழக்கவிரும்பவில்லை. இஸ்லாத்தைப் பற்றி தொடர்ந்துப் படிக்கும் போது அதிர்ச்சியாகவும் பேராச்சர்யமாகவும் இருந்துக் கொண்டிருந்தது. ஏனென்றால் இவைகள் எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட இஸ்லாமிய நம்பிக்கைகளிலிருந்து வேறுபட்டிருந்தது.

நான் என்னுடைய முதுகலைப் பட்டப்படிப்பை படிக்கும் போது இஸ்லாத்தைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்ததாக கருதி நான் மதிப்பு அளித்த என்னுடைய பேராசியரின் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தைப் பற்றிய போதனைகள் அனைத்தும் முற்றிலும் தவறானவைகள் என்பதை உணர்ந்தேன். அவரும் இன்னும் அவரைப் போன்ற பல கிறிஸ்தவர்களும் மிகவும் நேர்மையானவர்கள்! ஆனால் நிச்சயமாக அவர்கள் தவறானவற்றில் இருக்கிறார்கள்.

இரண்டு மாதங்கள் கழித்து, மீண்டும் இறைவனிடம் நேர்வழி காட்டுமாறு பிராத்தித்த பொழுது எனக்குள் ஏதோ ஒன்று இறங்கியது போன்று உணர்ந்தேன் அப்பொழுது தரையில் உக்கார்ந்து முதன்முறையாக இறைவனின் பெயரை கொண்டு ‘இறைவா! நீ ஒருவனே! நீயே உண்மையான இறைவன்’ என்று கூறினேன். அப்பொழுது என்மீது ஓர் அமைதி இறங்கியது. நான்கு வருடங்களுக்கு முந்தய அந்த நாளிலிருந்து இதுவரை இஸ்லாத்தை தழுவியதற்காக ஒருபோதும் நான் வருந்தியதில்லை.

இதன் காரணமாக சோதனைகளும் வராமல் இல்லை! நான் ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருந்த இரண்டு பைபிள் கல்லுரிகளிலிருந்தும் பணி நீக்கம் செய்யப் பட்டேன்; என்கூட படித்த முன்னால் வகுப்பு மாணவ மாணவிகளின் கேலியும் கிண்டலுக்கும் உள்ளானேன்; மேலும் என்னுடைய நாட்டு அரசாங்கத்தின் சந்தேகத்திற்கும் உள்ளானேன். சைத்தானின் தீய சக்திகளை எதிர்கொள்கின்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருந்திருக்கா விட்டால் இத்தகைய சவால்களை எதிர்கொள்ள இயலாது இருந்திருக்கும். நான் முஸ்லிமாக இருப்பதற்கும் முஸ்லிமாக வாழ்வதற்கும் முஸ்லிமாகவே மரணிக்க விருபுவதற்கும் நான் என்னுடைய இறைவனுக்கு மிகவும் நன்றி கூற கடமை பட்டுள்ளேன்.

“நீர் கூறும்: ‘மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். ‘அவனுக்கே யாதோர் இணையுமில்லை – இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் – (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் – முஸ்லிம்களில் – நான் முதன்மையானவன் (என்றும் கூறும்)” (அல்-குர்ஆன் 6:162-163)

சகோதரி கதீஜா வாட்சன் தற்போது பெண்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை போதித்து இஸ்லாத்தில் அழைக்கும் ஆசிரியையாக சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள ஒரு இஸ்லாமிய அழைப்பு மையத்தில் பணிபுரிகிறார்.

நன்றி: www.suvanathendral.com

திரித்துவம் பற்றிய கேள்விக்கு ஜாகிர் நாயக்கின் பதில்

இது அமெரிக்காவில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கும் டாக்டர் வில்லியம் கேம்பெல் அவர்களுக்கும் நடந்த விவாத்தின் போது, இறுதியில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் சகோதரி ஒருவர் Dr. ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்ட கேள்வி மற்றும் அதற்கு Dr. ஜாகிர் நாயக் அவர்கள் அளித்த விளக்கத்தின் தமிழாக்கம் ஆகும்.

சகோதரியின் கேள்வி: -

தண்ணீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் பனிக்கட்டியாகவும், தண்ணீராகவும் மற்றும் நீர் ஆவியாகவும் இருப்பது போல் ஒரு கடவுள் பிதா, தேவ குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரில் இருக்கிறார். இது திரித்துவக் கோட்பாட்டுக்கான அறிவியல் விளக்கமாகும். இந்த விளக்கம் சரியானது தானா?

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் விளக்கம்: -
தண்ணீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் பனிக்கட்டியாகவும், தண்ணீராகவும் மற்றும் நீர் ஆவியாகவும் இருப்பது போல் ஒரு கடவுள் பிதா, தேவ குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரில் இருக்கிறார் என்று சில கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். அறிவியல் கோட்பாட்டின் படி தண்ணீர் மூன்று நிலைகளில் இருப்பது உண்மை தான். ஆனால் தண்ணீருக்கான மூலப்பொருள்கள் (components) மாறாமல் அப்படியே இருக்கிறது. அதாவது H2O, ஹைட்ரஜனின் இரண்டு அணுக்களும், ஆக்ஸிஜனின் ஒரு அணுவும் தான் தண்ணீரின் மூலப்பொருள்கள் ஆகும். அந்த மூலப்பொருள்கள் அப்படியே மாறாமல் இருக்கிறது. ஆனால் அதன் நிலை தான் திட, திரவ மற்றும் வாயு நிலைக்கு மாறுகிறது.

அடுத்து இவர்களின் திரித்துவத்தை எடுத்துக் கொண்டால், தண்ணீர் மூன்று நிலைகளில் இருப்பதைப் போல் ஒரே கடவுள் மூவரில் இருக்கிறார் என்கின்றனர். ஆனால் தண்ணீரின் மூலப்பொருள் அதன் மூன்று நிலைகளிலும் ஒன்றாக இருப்பது போல இந்த மூவரின் மூலப்பொருள் ஒன்றாகவா இருக்கிறது? கடவுள் மற்றும் பரிசுத்த ஆவி ஆகியோர் ஆவியினால் (made of sprit) ஆனவர்கள். ஆனால் மனிதராகிய இயேசுவோ சதைத் துண்டுகளாலும், எலும்புகளாலும் உருவாக்கப்பட்டவர். எனவே அவர்கள் மூலப்பொருட்களால் சமமானவர்கள் அல்லர். மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு உணவு அவசியமாகிறது. ஆனால் கடவுள் உயிர் வாழ உணவு உண்ண வேண்டிய அவசியம் இல்லை. அதனால் அவர்கள் எப்படி சமமானவர்களாக முடியும்? மேலும் இதை இயேசு கிறிஸ்துவே பைபிளில் உறுதிப்படுத்துகிறார்.

லூக்கா, 24 வது அதிகாரம், வசனங்கள் 36-40:

இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்(தார்).

இயேசு கிறிஸ்து அவருக்கு தமக்கு சதை உடைய கைகள், கால்கள் இருக்கிறது என்றும் அவருடைய சீடர்கள் கொடுத்த உணவை சாப்பிட்டும் தாம் ஒரு ஆவியல்ல (no sprit) என்றும் நிரூபித்தது எதற்காக? தாம் கடவுள் என்பதற்காகவா? இல்லை! தாம் கடவுள் இல்லை என்பதற்காவே தாம் ஆவி (sprit) இல்லை என்று நிரூபித்தார்! ஏனென்றால் ஆவியானவருக்கு சதை மற்றும் எலும்புகள் இல்லை. எனவே அறிவியல் மூலமாகவும் இயேசு கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியும் கடவுளாக இருக்க முடியாது என்பது நிரூபனமாகின்றது.

மேலும் திரித்துவம் (Concept of Trinity) என்ற தத்துவமோ (மூன்று கடவுள் கொள்கை) அல்லது அந்த வார்த்தையோ பைபிளில் எந்த ஒரு இடத்திலும் காணப்படவில்லை. ஆனால் திருக்குர்ஆனில் திரித்துவம் குறித்துக் கூறப்பட்டிருக்கிறது.

திருக்குர்ஆன் அத்தியாயம் 4,ஸுரத்துந் நிஸா, வசனம் 171 ல் அல்லாஹ் கூறுகிறான்: -

வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் ('குன்' ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். (அல்-குர்ஆன் 4:171)

மேலும் அத்தியாயம் 5, ஸுரத்துல் மாயிதா, வசனம் 17 ல் அல்லாஹ் கூறுகிறான்: -

திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். 'மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்' என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்-குர்ஆன் 5:17)

'நான் கடவுள்' என்று இயேசு கிறிஸ்து சொல்லவே இல்லை. திரித்துவம் பற்றிய கடவுள் தத்துவம் பைபிளில் அறவேயில்லை. பைபிளில் திரித்துவத்தை ஒத்திருக்கிறதாக அவர்கள் கூறும் ஒரே ஒரு வார்த்தை என்னவெனில்,

பையிளின் புதிய ஏற்பாடு, I யோவான், 5 அதிகாரம், வசனம்-7

பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;

ஆனால், மிகச்சிறந்த கிறிஸ்தவ அறிஞர்களால் பைபிளின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பைப் பார்த்தோமேயானால் (Revised Standard Version), அதில் அவர்கள், 'பைபிளின் மேற்கண்ட வசனம் இட்டுக்கட்டப்பட்டு இடை செறுகப்பட்ட வசனம்' என்று கூறி அந்த வசனத்தை பைபிளிலிருந்து நீக்கிவிட்டனர்.
இயேசு கிறிஸ்து நான் கடவுள்' என்று ஒரு போதும் கூறியதே இல்லை. பைபிளின் எந்த ஒரு இடத்திலும் 'நான் கடவுள்' அல்லது 'என்னை வணங்குங்கள்' என்று இயேசு கிறிஸ்து சொன்னதாக முழுமையான ஒரே ஒரு வசனம் கூட கிடையாது.

ஆனால் உண்மையில் நாம் பைபிளைப் படித்தோமேயானால், (இந்த திரித்துவக் கோட்பாட்டுக்கு முரணான ஏராளமான வசனங்கள் இருக்கின்றன.)

யோவான், 14 அதிகாரம், வசனம் 28

நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
யோவான், 10 அதிகாரம், வசனம் 29

அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.

மத்தேயு, 12 அதிகாரம், வசனம் 28

நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.

லூக்கா, 11 அதிகாரம், வசனம் 20

நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.

யோவான், 5 அதிகாரம், வசனம் 30

நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை!

(சுயமாக எதையும் செய்யாமல் பிறரின் சொல்படி செய்கிறவர் எப்படி கடவுளாக முடியும்?)

யார் ஒருவர் தன் சுயவிருப்பப்படி எதையும் செய்யாமல் இறைவனின் விருப்பப்படி செய்கிறாறோ அவர் 'முஸ்லிம்' ஆவார். ஏனென்றால் 'முஸ்லிம்' என்பவர் 'தன் விருப்பங்களை இறைவனின் விருப்பப்படி அமைத்துக் கொள்பவராவார்'. இயேசு கிறிஸ்துவும் தம் விருப்பப்படி தாம் எதையும் செய்யவில்லை என்றும் கடவுளின் விருப்பப்படி செய்கிறேன் என்று கூறியதால் அவரும் ஒரு முஸ்லிம் ஆவார்.

இயேசு கிறிஸ்து இறைவனின் சிறந்த தூதர்களில் ஒருவர் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். மேலும் முஸ்லிம்களாகிய நாங்கள்:
  • ஆண் துணையில்லாமல் பிறந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அற்புதம் வாய்ந்தவை என்று நம்புகிறோம்
  • பைபிள் கூறுவதைப் போல, இறைவனின் அனுமதியுடன் இறந்தவரை உயிர்ப்பித்தார் என்று நம்புகிறோம்
  • பிறவிக் குருடர்களுக்கு பார்வை அளித்தார் என்றும் நம்புகிறோம்
  • குஷ்டரோகிகளைக் குணப்படுத்தினார் என்றும் நம்புகிறோம்
எனவே முஸ்லிம்களாகிய நாங்கள் இயேசு கிறிஸ்து இறைவனின் உண்மையான தூதர் என்று நம்புகிறோம். அவருக்கு மதிப்பளிக்கின்றோம். ஆனால் அவரே இறைவன் என்று நம்புவதில்லை. அவர் மூன்று கடவுள்களில் ஒருவராக இருக்கவில்லை. மேலும் இந்த திரித்துவம் என்பது இல்லவே இல்லை.

திருக்குர்ஆன் கூறுகிறது.

அல்லாஹ் அவன் ஒருவனே (அல்-குர்ஆன் 112:1)


நன்றி:www.suvanathendral.com/

Tuesday, September 7, 2010

பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா?

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...  

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்..  


பரிணாமவியலை நம்புபவர்கள் பின்வரும் கேள்விகளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?  
a) உங்கள் முன் ஒரு கறுப்பின சகோதரர் வந்து நின்றால், நீங்கள் அவரை உங்களை விட ஒரு படி கீழே என்று நினைப்பீர்களா? 
b) அல்லது, நீங்கள் ஒரு ஐரோப்பிய சகோதரர் முன் சென்று நின்றால், அவர் உங்களை விட ஒரு படி மேலே என்று நினைப்பீர்களா? 

உலக மக்கள் அனைவரும் சமமல்லவா, இது என்ன கேள்வி? என்று நீங்கள் நினைத்தால், அதற்கு நான் பொறுப்பல்ல. டார்வினும், அவர் முன்வைத்த கோட்பாடும் தான் பொறுப்பு. 

அப்படியென்றால் டார்வின் ஒரு இன வெறியரா? என்று நீங்கள் கேட்டால், இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. 

என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று ஏன் சொல்கிறேனென்றால், பலர் அவரை இனவெறியர் என்று முத்திரை குத்துவதால் தான். 

என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு மனிதாபிமானமிக்க மனிதர். ஐரோப்பிய வெள்ளையர் என்ற தன் இனத்தின் மீது பற்று கொண்டிருந்தார். ஆனால் அதே சமயம், அடிமைகளாய் நடத்தப்பட்டவர்களை பார்த்து வேதனைப்பட்டிருக்கிறார், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்திருக்கிறார், அவர்களை அப்படி நடத்துவது சரியல்ல என்று சொல்லியிருக்கிறார். 

ஆக, தன்னுடைய இனம் தான் சிறந்தது என்ற எண்ணம் உடையவராக இருந்திருந்தாலும், அதற்காக மற்ற இனத்தவரை அடிமைப்படுத்துவது சரியல்ல என்று நினைத்தவர். 

ஆனால் துரதிஷ்டவசமாக, அவர் முன்வைத்த கோட்பாடு இனவெறிக்கு தூண்டுதலாய் அமைந்து விட்டது. 

குரங்கினத்திற்கும் (APE) ஐரோப்பியர்களுக்கும் இடையே கறுப்பினத்தவர்களையும் (நீக்ரோ), ஆஸ்திரேலியர்களையும் வைத்த அவரது செயல், 
  • ஒருவர் மற்றொருவரை விட சிறந்தவர், 
  • பரிணாம முறைப்படி ஐரோப்பியர்களே கடைசியாய் வந்தவர்கள், 
  • அதனால் அவர்களே மேம்பட்டவர்கள் 
என்பது போன்ற எண்ணங்களை உண்டாக்கிவிட்டது.

இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில், டார்வின் முன்வைத்த கோட்பாட்டின் மற்றொரு பக்கத்தைதான் (The Other Side of "Evolution Theory") பார்க்கப்போகிறோம்.  


டார்வின் இன வெறியரா ?

என்னைப் பொறுத்தவரை, இல்லை. அவருடைய கோட்பாட்டின் படி, அவர் தன்னுடைய  இனம்  தான்  மேம்பட்டது என்று நம்பினார். அதே சமயம், தனக்கு கீழுள்ள இனத்தவர் கஷ்டப்படுவதை பார்த்து வருந்தியவர்.

உதாரணத்துக்கு, 1830 களில், அவருடைய கடற்பயணத்தின் போது, கப்பலில் அடிமைகள் நடத்தப்படும் விதம் குறித்து அந்த கப்பலின் (H.M.S Beagle) கேப்டனான Fitz Roy யுடன் சண்டை போட்டிருக்கிறார் அவர்.

இது குறித்து அவர் எழுதும் போது:
"Those who look tenderly at the slave-owner, and with a cold heart at the slave, never seem to put themselves into the position of the latter;—what a cheerless prospect, with not even a hope of change! picture to yourself the chance, ever hanging over you, of your wife and your little children—those objects which nature urges even the slave to call his own—being torn from you and sold like beasts to the first bidder! And these deeds are done and palliated by men, who profess to love their neighbours as themselves, who believe in God, and pray that his Will be done on earth! It makes one’s blood boil, yet heart tremble, to think that we Englishmen and our American descendants, with their boastful cry of liberty, have been and are so guilty: but it is a consolation to reflect, that we at least have made a greater sacrifice, than ever made by any nation, to expiate our sin" --- Charles Darwin wrote in 1845 journal, "Journal of researches into the natural history and geology of the countries visited during the voyage of H.M.S. Beagle round the world, under the Command of Capt. Fitz Roy", p. 499-500.

ஆக, என்னதான் அந்த அடிமைகளை தாழ்ந்தவர்களாக அவர் நினைத்தாலும், அவர்கள் மோசமாக நடத்தப்படுவதைப் பார்த்து இரத்தம்  கொதிப்பதாக  எழுதியிருக்கிறார்.  இது அவரது மனிதாபிமானத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.


அவரது கோட்பாடு இனவெறிக்கு வித்திட்டதா? 

ஆம். உண்மைதான். 

நிச்சயமாக அவர் இனவெறியை ஊக்கப்படுத்தவில்லை, ஆனால் அவர் முன்வைத்த கொள்கை இன வெறிக்கு காரணமாய் இருந்தது/இருக்கிறது  (Darwin himself didn’t promote racism, But surely his theory of evolution did).

முதலில் மற்ற இனத்தவரை எப்படி அணுகினார் என்று பார்ப்போம். 

தன்னுடைய புத்தகத்தில் இப்படி எழுதுகிறார் அவர்.
"At some future period not very distant as measured by centuries, the civilised races of man will almost certainly exterminate and replace the savage races throughout the world. At the same time the anthropomorphous apes…will no doubt be exterminated. The break between man and his nearest Allies will then be wider, for it will intervene between man in a more civilised state, as we may hope, even than the Caucasian, and some ape as low as the baboon, instead of as now between the Negro or Australian and the gorilla" --- Charles Darwin in his book "The Descent of Man", p-201 

மேலே உள்ள பத்தியின் ஆரம்பத்தில் அவர் ,
"நிச்சயமாக, எதிர்காலத்தில் நாகரிகமுள்ள மனித இனங்கள், நாகரிகமற்ற (காட்டுமிராண்டித்தனமான) மனித இனங்களை முற்றிலும் அழித்து விடும்" என்று கூறுகிறார். 

அவர் யாரை காட்டுமிராண்டிகள் என்று சொன்னாரோ,  அவர்கள்  இன்றளவும் இருக்கிறார்கள். அவர்கள்  அழிந்துவிடவில்லை, அவர்களுடைய  அறியாமை தான்  அழிந்துவிட்டது. இன்று  அவர்கள்  ஐரோப்பியர்களுக்கு  எந்த விதத்திலும் குறைந்தவர்களில்லை. 



அதே பத்தியின் கடைசியில், அவர்,  கறுப்பினத்தவரையும்  ஆஸ்திரேலியர்களையும், மனித குரங்கிற்கும்  மனிதனுக்கும்  இடையில்  வைத்திருக்கிறார்.  அவரைப் பொறுத்தவரை இவர்கள் "Less Evolved" மக்கள். நிச்சயமாக அவரது  நம்பிக்கையின் படி, மனிதன், மனிதகுரங்கிலிருந்து படிப்படியாக ஒவ்வொரு இனமாக மாறி, பின்னர்  கடைசியாக   ஐரோப்பிய இனமாக மாறினான். 

ஆக, இயல்பாகவே, ஒரு இனத்தவர் மற்றொரு இனத்தவருடன் ஒப்பிடும் போது தாழ்ந்தவர் அல்லது உயர்ந்தவர். அவர்களில் எல்லாம் உயர்ந்தவர்கள் ஐரோப்பிய வெள்ளையர்கள்.

இங்கு தான் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். ஐரோப்பியர்களுக்கு பல காலங்களுக்கு முன்னரே எகிப்தியர்கள், இந்தியர்கள், அரேபியர்கள் (பார்க்க நாமென்ன செய்தோம்  இவ்வுலகிற்கு?) மற்றும் சீனர்கள் அறிவியலில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். இவர்கள் ஐரோப்பியர்களுக்கு எந்த விதத்திலும் தாழ்ந்தவர்களில்லை. இன்றும் எந்த இனத்தவரும் மற்ற இனத்தவருக்கு சளைத்தவர்களில்லை

அப்படியிருக்க, மனிதன் பரிணாம முறைப்படி ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனமாக மாறி மாறி தற்போதைய ஐரோப்பிய இனமாக மாறினான் என்றால், ஒரு இனம் மற்றொரு இனத்தை விட சிறந்ததாகத்தான் இருக்க வேண்டும். அதைத்தானே டார்வினும் கூறினார்.
"Their mental characteristics are likewise very distinct; chiefly as it would appear in their emotional, but partly in their intellectual faculties" --- Charles Darwin in his Book, Descent of Man, Chapter Seven: On the Races of Man, p.343

இப்போது நம்முடைய கேள்வியெல்லாம், இன்றைய உலகை வைத்து யாரையும் சிறந்தவர்கள் என்று கூற முடியாதே?, 
 
அதுபோல டார்வினுடைய கருத்துப்படி "less Evolved" இனத்தவர் அழிந்து விட வில்லையே.  இனி அழிவார்களா என்பதும் நிச்சயமில்லையே? 

டார்வினுடைய கோட்பாடு நிச்சயமாக புரியாதப் புதிர் தான்...      
  
டார்வினுடைய, "தாழ்ந்த இனங்கள் சீக்கிரமே அழிந்துவிடும்" என்ற கருத்தை தான் செயல் படுத்த நினைத்தாரோ ஹிட்லர்? 

எது எப்படியோ, ஹிட்லர் தன்னுடைய வெறியாட்டத்திற்கு துணையாகக் கொண்டது இந்த கோட்பாட்டை தான், அதன் "Struggle for Survival" என்ற கருத்தை தான்.

ஹிட்லருடைய புத்தகத்தில் (Mein Kampf) அவர் பலமுறை "EVOLUTION" (ஜெர்மனியில் "Entwicklung") என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்.  நாசி படைகள்  தயாரித்த வீடியோக்களிலும், ஹிட்லருடைய பேச்சிலும் "Survival of the Fittest" என்ற கருத்து அடிக்கடி இடம்பெறும்.
"Those who want to live, let them fight, and those who do not want to fight in this world of eternal struggle do not deserve to live" --- Adolf Hitler, at his third public speech after taking power.
வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் சண்டையிடட்டும். சண்டையிட விருப்பமில்லாதவர்கள் இந்த உலகில் வாழ தகுதியற்றவர்கள் --- (Extract of the Speech of) Adolf Hitler, at his third public speech after taking power  

இயற்கை தங்களை  உயர்  இனத்தவராக  ஆக்கியதாக  நம்பியவர் அவர். இதையே  தான்  டார்வினும் சொன்னார். 

உதாரணத்துக்கு, ஹிட்லருடைய புத்தகத்தில் இருந்து:  
"If Nature does not wish that weaker individuals should mate with the stronger, she wishes even less that a superior race should intermingle with an inferior one; because in such a case all her efforts, throughout hundreds of thousands of years, to establish an evolutionary higher stage of being, may thus be rendered futile" ---Adolf Hitler, Extracted from Mein Kampf, volume 1, chapter 11, Race and People.
இயற்கை, நிச்சயமாக உயர்ந்த இனம் தாழ்ந்த இனத்தோடு சேருவதை விரும்புவதில்லை. அப்படி நடக்குமானால், இயற்கையினுடைய ஆயிரமாயிரம் ஆண்டு கால உழைப்பு வீணாகி விடும் --- (Extract from the original quote of) Adolf Hitler, Extracted from Mein Kampf, volume 1, chapter 11, Race and People.     
  
ஒரு இனம் மற்றொரு இனத்தை விட உயர்ந்தது என்றால் தன்னுடைய செயலில் என்ன தவறு  இருக்கிறதென்று கேட்டவர். தன்னுடைய உயர்ந்த குல இரத்தம்  தனக்கு  முன் வந்த இனத்துடைய இரத்தத்துடன் கலக்கக் கூடாது என்று வாதிட்டவர். தன்னுடைய SUPERIOR இனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியவர்.  

இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை, டார்வினே இப்படி சொன்னவர் தானே, அதாவது Favoured Races பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொன்னவர் அவர். அவருடைய "Origin of Species" புத்தகம் முதலில் வெளியான போது (1859) அதனுடைய முழு தலைப்பு, " The Origin of Species by Means of Natural Selection—or The Preservation of Favoured Races in the Struggle for Life"


பின்னர் சில காலங்களுக்கு பிறகு இந்த தலைப்பு சுருக்கப்பட்டது. 

ஆக, சுமார் 60 லட்சம் மக்கள் கொல்லப்படுவதற்கு ஹிட்லர் காரணமென்றால், அவர் தன்னுடைய செயலை நியாயப்படுத்துவதற்கு அறிவியல் ரீதியான காரணமாய் கொண்டது பரிணாமவியலைத் தான்.
The leader of Germany is an evolutionist not only in theory, but, as millions know to their cost, in the rigor of its practice. For him, the 'national front' of Europe is also the 'evolutionary front” --- Sir Arthur Keith in his book "Evolution and Ethics", 1947, p.230. 
"ஜெர்மனியின் தலைவர் பரிணாமவியலை ஆதரித்தவர். அதனை ஆதரித்தது மட்டுமல்லாமல் அதனை செயல்படுத்துவதில் தீவிரமாய் இருந்தவர், இதற்கு இறந்து போன லட்சக்கணக்கான மக்களே சாட்சி" --- (Extract from the original quote of) Sir Arthur Keith in his book "Evolution and Ethics", 1947, p.230.    

பரிணாமவியலை, அறிவியல் காரணமாகக் (Scientific Racism) கொண்டு தங்களுடைய இனவெறியை நியாயப்படுத்தியவர்கள் பலர். இன்றும் அதை செய்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்றளவும் கறுப்பினத்தவர்களை குரங்குகளாக சித்தரிக்கும் செயல் சில இன வெறியர்களிடமிருந்து போகவில்லை.


இதையெல்லாம் விடுங்கள், இப்போது நான் பரிணாமவியலை நம்புபவர்களை கேட்க விரும்புவதெல்லாம்,

  • ஒரு மனித இனம், மற்றொரு மனித இனத்தை விட மேம்பட்டது என்ற பரிணாமவியலின் வாதத்தையும் நம்புகிறீர்களா? 
  • ஒரு ஐரோப்பியர் வந்து, "நான் உன்னை விட உயர்ந்தவன்" என்று சொன்னால், "ஆமாம், நீ சொல்லுவது சரிதான்" என்று ஆமோதிப்பீர்களா?  

இது என்ன கேள்வி, பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்பித்தானே ஆக வேண்டும்?

அப்படியானால், இனிமேலும் தயவுகூர்ந்து "உலகில் உள்ள அனைத்து மக்களும் சமம்" என்று சொல்லாதீர்கள். அப்படி நீங்கள் சொன்னால் அது உங்கள் கொள்கைக்கு நீங்கள் செய்கிற துரோகம்...

நமது நாட்டில், கடவுளின் வெவ்வேறு உடற்பகுதிகளில் இருந்து வெவ்வேறு பிரிவினர் வந்ததாக சொன்னபோது, "இல்லை மக்கள் அனைவரும் சமம்" என்று அதை எதிர்த்த/எதிர்க்கும் பரிணாமவியலை ஆதரிக்கும் சிலர், அவர்களது நம்பிக்கையும் "மனிதர்களெல்லாம் சமமல்ல" என்று கூறுவதை ஏன் மறந்தார்கள்?,

என்ன, அவர்கள் கடவுளை காரணமாக காட்டுகிறார்கள், இவர்கள் இயற்கையை காரணமாக காட்டுகிறார்கள். அவர்களுக்கு கடவுள் என்றால் இவர்களுக்கு இயற்கை தான் கடவுள்...

"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்" --- அல்குர்ஆன் 49:13

நாத்திகர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள், உங்கள் email id யைத் தாருங்கள். அல்லது என்னுடைய email id க்கு (aashiq.ahamed.14@gmail.com) ஒரு மெயில் அனுப்புங்கள். நான் குரான் soft copy அனுப்புகிறேன். அதை நீங்கள் இறைவனின் வார்த்தைகள் என்றெண்ணி படிக்க வேண்டாம். யாரோ ஒருவர் எழுதியதென்று நினைத்து ஒரு நாவலைப்போல படியுங்கள். திறந்த மனதுடன் படியுங்கள். தயவு கூர்ந்து இந்த முதல் அடியை எடுத்து வையுங்கள். இறைவன் நாடினால், நிச்சயமாக உங்களுக்குள் ஒரு மாற்றத்தை அது தரும். சொல்ல வேண்டியது ஒரு சகோதரன் என்ற முறையில் என் கடமை, ஏற்றுக்கொள்வதும் புறக்கணிப்பதும் உங்கள் இஷ்டம்.


இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


My Sincere Thanks To:
1. British Broadcasting Corporation (BBC)
2. New Scientist Website.

References:
1. The Origin of Species by Means of Natural Selection or The Preservation of Favoured Races in the Struggle for Life  --- Charles Darwin, 1859.
2. The Descent of Man --- Charles Darwin, 1971.
3. Journal of researches into the natural history and geology of the countries visited during the voyage of H.M.S. Beagle round the world, under the Command of Capt. Fitz Roy ---  Charles Darwin, 1845.
4. Was Charles Darwin a Racist? --- BBC, dated 13th February 2009.
5. Hatred of slavery drove Darwin to emancipate all life --- New Scientist, dated 29th January 2009.
6. Race and People, Extracted from Mein Kampf, volume 1, chapter 11 --- Adolf Hitler
7. Scientific Racism - Wikipedia.
8. Evolution and Ethics --- Sir Arthur Keith, 1947.
 


 Source: http://ethirkkural.blogspot.com/