Tuesday, March 23, 2010

தவ்ஹீத் பிரச்சாரத்தில் தனிப் பெரும் தலைவர்

இத்தொடரில் நாம் பார்க்கவிருக்கின்ற தவ்ஹீத்வாதிகளின் தனிப்பெருந் தலைவர், நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான சிலை மற்றும் கப்ர் உடைப்பு பிரச்சாரத்தின் முன்னோடி, ஏகத்துவ ஏந்தல் இமாம் இப்றாஹீம் (அலை) அவர்களாவார்கள்.
அகிலத்தின் இரட்சகன் அருளாளன் அழ்ழாஹ் தனது அருமைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பார்த்து, ஏகத்துவ இமாம் இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு கட்டளையிடுகின்றான்.
”(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக! என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை.” (அல்குர்ஆன் 16:123)
மேலும், அழ்ழாஹ் தனது திருமறைக் குர்ஆனில் இமாம் இப்றாஹீம் (அலை) அவர்களை தனது உற்ற தோழராக்கிக் கொண்டதாகவும் குறிப்பிடுகின்றான்.
“தன் முகத்தை அழ்ழாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அழ்ழாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான்.” (அல்குர்ஆன் 04:125)
இன்னும் இப்றாஹீம் நபி அவர்களை முழுமனித சமுதாயத்திற்கும் தலைவர் என்று உலகப்பொதுமறை திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது. இவ்வாறு அகிலத்தின் இரட்சகன் அழ்ழாஹ் இமாம் இப்றாஹீம் (அலை) அவர்களை மிக அதிகளவில் கண்ணியப்படுத்திப் பேசுவதற்குக் காரணம்தான் என்ன? இதோ திருமறைக் குர்ஆன் பதிலளிக்கின்றது.
“இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். ”உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். ”எனது வழித் தோன்றல்களிலும்” (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். ”என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது” என்று அவன் கூறினான்” (அல்குர்ஆன் 02:124)
தவ்ஹீதின் தனிப்பெருந் தலைவர் இமாம் இப்றாஹீம் (அலை) அவர்கள் சோதனைகள் மலையெனக் குவிந்த போதிலும், சத்தியக் கொள்கையாம் தவ்ஹீதில் தடம் புரண்டுவிடாது, சமரசம் செய்யாது, துவண்டு ஒதுங்கிவிடாது தவ்ஹீதுக்கு நேர் எதிரான இணை வைப்புக் கொள்கைக்கு எரிமலையாய் இருந்ததன் விளைவே இறைவன் தனது திருமறையில் மிக அதிகளவில் சிலாகித்துக் கூறுகின்றான். தியாகச் செம்மல், பகுத்தறிவுப் பகலவன் இமாம் இப்றாஹீம் நபியவர்களின் ஓரிறைக் கொள்கைப் பிரச்சாரம் இதோ!
“இரவு அவரை மூடிக் கொண்ட போது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு ‘இதுவே என் இறைவன்’ எனக் கூறினார். அது மறைந்த போது ‘மறைபவற்றை நான் விரும்பமாட்டேன்’ என்றார். சந்திரன் உதிப்பதை அவர் கண்ட போது ‘இதுவே என் இறைவன்’ என்றார். அது மறைந்த போது ‘என் இறைவன் எனக்கு நேர் வழி காட்டா விட்டால் வழி கெட்ட கூட்டத்தில் ஒருவனாக ஆகி விடுவேன்’ என்றார். சூரியன் உதிப்பதை அவர் கண்ட போது ‘இதுவே என் இறைவன்! இதுவே மிகப் பெரியது’ என்றார். அது மறைந்த போது ‘என் சமுதாயமே! நீங்கள் இணை கற்பிப்பவற்றை விட்டு நான் விலகிக் கொண்டவன்’ எனக் கூறினார்.

‘வானங்களையும், பூமியையும் படைத்தவனை நோக்கி உண்மை வழியில் நின்றவனாக என் முகத்தைத் திருப்பி விட்டேன். நான் இணை கற்பித்தவனல்லன் (என்றும் கூறினார்). அவரது சமுதாயத்தினர் அவரிடம் விவாதித்தனர். ‘அழ்ழாஹ் எனக்கு நேர் வழி காட்டிய நிலையில் அவனைப் பற்றி என்னிடம் விவாதிக்கிறீர்களா? நீங்கள் இணை கற்பித்தவற்றுக்கு அஞ்ச மாட்டேன். என் இறைவன் எதையேனும் நாடினாலன்றி (எனக்கு ஏதும் நேராது.) அவன் அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். உணர மாட்டீர்களா?”

‘அழ்ழாஹ் உங்களுக்கு எந்தச் சான்றையும் வழங்காதவற்றை அவனுக்கு இணையாக்குவதற்கு நீங்கள் அஞ்சாத போது நீங்கள் இணை கற்பித்தவைகளுக்கு எவ்வாறு நான் அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தால் இரு கூட்டத்தினரில் அச்சமற்றிருக்க அதிகத் தகுதி படைத்தவர் யார்?’ (என்றும் அவர் கூறினார்.)” (அல்குர்ஆன் 06:76-81)
இணை வைப்பின் சாயல் கூடபடாத (பார்க்க அல்குர்ஆன் 16:123) ஏகத்துவப் பெருந்தகை இமாம் இப்றாஹீம் (அலை) அவர்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை உதாரணம் காட்டி எவ்வித ஆற்றலுமில்லாத கற்களை, மண்ணை, சமாதியை வணங்கி அகிலங்களின் இரட்சகனின் சாபத்திற்குரிய இணைவைப்பை, மூட நம்பிக்கையை தகர்த்தெரிகின்றர்கள்.
அழ்ழாஹ்வின் சாபத்திற்குரிய சமாதி வழிபாட்டில் ஈடுபடுவோர் பகுத்தறிவுப் பகலவன் இப்றாஹீம் நபியின் அறிவுப்பூர்வமான கேள்விகளை சிந்திக்க கடமைப்பட்டுள்ளார்கள்.
”நீங்கள் அழைக்கும் போது இவை செவியுறுகின்றனவா? அல்லது உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்கின்றனவா?” என்று அவர் கேட்டார்.” (அல்குர்ஆன் 26:72,73)
இவ்வாறாக, இமாம் இப்றாஹீம் (அலை) அவர்கள் இறைக் கொள்கையாம் தவ்ஹீதை வளையாது, நெளியாது எடுத்துச் சொன்னதன் விளைவு எண்ணற்ற சோதனைகளை எதிர்நோக்குகின்றார்கள்.
பயங்கரமான எதிர்ப்பலைகள் பலகோணங்களில் எழுந்தபோதிலும் சத்தியக் கொள்கையாம் தவ்ஹீதில் சமரசம் செய்யவில்லை இமாமவர்கள். இதோ தொடர்கிறது தனிப்பெருந் தலைவரின் தவ்ஹீத் பிரச்சாரம்:
”நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன?” என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்ட போது, ”எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்” என்று அவர்கள் கூறினர்.. ”நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்” என்று அவர் கூறினார். ”நீர் உண்மையைத் தான் கூறுகிறீரா? அல்லது விளையாடுகிறீரா?” என்று அவர்கள் கேட்டனர். ”அவ்வாறில்லை. வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன்” என்று அவர் கூறினார். ”அழ்ழாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் திரும்பிச் சென்ற பின் உங்கள் சிலைகளை உடைப்பேன்” (என்றும் கூறினார்) அவர்கள் பெரிய சிலையிடம் திரும்ப வர வேண்டும் என்பதற்காக, அவற்றில் அதைத் தவிர மற்றவற்றை அவர் துண்டு துண்டாக்கினார். ”நமது கடவுள்களை இவ்வாறு செய்தவன் யார்? அவன் அநீதி இழைத்தவன்” என்று அவர்கள் கூறினர்.

”ஓர் இளைஞர் அவற்றை விமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார்” எனக் கூறினர். ”அவரை மக்கள் மத்தியில் கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறட்டும்” என்றனர். ”இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?” என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர், ”இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!” என்று அவர் கூறினார். உடனே விழிப்படைந்து ”நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்” என்று தமக்குள் பேசிக்கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, ”இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!” என்றனர். ”அழ்ழாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும் தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா?” என்று கேட்டார். ”அழ்ழாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்கமாட்டீர்களா?”  (என்றும் கேட்டார்.)” (அல்குர்ஆன் 21:52-67)
இவ்வாறாக, இமாமவர்கள் ஏகத்துவத்தை அதன் தூய்மையான வடிவில் எடுத்தியம்பியதன் விளைவு வீட்டிலும் எழுகின்றன எதிர்ப்பலைகள்:
”இப்ராஹீமே எனது கடவுள்களையே நீ அலட்சியப்படுத்துகிறாயா? நீ விலகிக் கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். நீண்ட காலம் என்னை விட்டு விலகிவிடு!” என்று (தந்தை) கூறினார்.” (அல்குர்ஆன் 19:46)
சமூகப் பகிஷ்காரத்தால் தவித்துக் கொண்டிருக்கையில் சொந்த வீட்டிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றார்கள் தனிப்பெருந்தலைவர் அவர்கள். இப்போதும் சளைத்துவிடவில்லை சன்மார்க்கப் போதகர் இப்றாஹீம் (அலை) அவர்கள்.
கொடுங்கோல் மன்னனிடம் சென்று தவ்ஹீதை தயவு தாட்சண்யமின்றி எடுத்தியம்புகின்றார்கள். விளைவு நெருப்புக் குண்டத்தில் தூக்கி வீசப்படுகின்றார்கள்.
”நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்!” என்றனர்.” (அல்குர்ஆன் 21:68)
சிலைகளை நிறுத்திவைத்து வழிபடுவதும், சமாதிகளை படுக்கையில் வைத்து வழிபடுவதும் பகிரங்கமான ‘ஷிர்க்’ என்கின்ற தவ்ஹீத் கொள்கையை உரக்கச் சொன்னதன் விளைவு இமாமவர்கள் தமது தாயகத்தையும் துறந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
”நான் இறைவனை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் போகிறேன். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்” என்று (இப்ராஹீம்) கூறினார்.” (அல்குர்ஆன் 29:26)
ஏகத்துவ ஏந்தல் நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் மாத்திரமன்றி அன்னாரின் அருமைத் துணைவியரும் தியாகசீலர்களாகவே திகழ்ந்துள்ளனர்.
“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவி) சாராவுடன் நாடு துறந்தார்கள். மன்னன் ஒருவன் அல்லது கொடுங்கோலன் ஒருவன் ஆட்சி புரிந்த ஓர் ஊருக்குள் இருவரும் நுழைந்தனர். ,அழகான ஒரு பெண்ணுடன் இப்ராஹீம் வந்திருக்கிறார்! என்று (மன்னனிடம்) கூறப்பட்டது. மன்னன் இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்துவரச் செய்து, இப்ராஹீமே! உம்முடன் இருக்கும் இந்தப் பெண் யார்? எனக் கேட்டான். இப்ராஹீம் (அலை), என் சகோதரி, என்று சொன்னார்கள். பிறகு சாராவிடம் திரும்பிய இப்ராஹீம் (அலை) அவர்கள், நீ என் கூற்றைப் பொய்யாக்கி விடாதே! நீ என் சகோதரி என்று நான் அவர்களிடம் கூறியிருக்கிறேன். அழ்ழாஹ்வின் மீதாணையாக! உன்னையும் என்னையும் தவிர இந்தப் பூமியில் ஓரிறை விசுவாசி (மூஃமின்) யாரும் இல்லை, என்று சொன்னார்கள். பிறகு சாராவை மன்னனிடம் அனுப்பினார்கள். அவன், அவரை நோக்கி எழுந்தான். சாரா எழுந்து அங்கசுத்தி (உளூ) செய்து தொழுதுவிட்டு, இறைவா! நான் உன்னையும், உன் தூதரையும் நம்பிக்கைகொண்டிருந்தால், எனது பெண்மையைக் கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே! என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து (வலிப்பினால்) கால்களை உதைத்துக்கொண்டான்.
மன்னனின் நிலையைக் கண்ட சாரா, இறைவா! இவன் செத்து விட்டால் நான்தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர், என்று கூறியவுடன் மன்னன் பழைய நிலைக்கு மீண்டு, மறுபடியும் சாராவை நெருங்கினான். சாரா எழுந்து அங்கசுத்தி செய்து தொழுதுவிட்டு, இறைவா! நான் உன்னையும், உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது பெண்மையைக் கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ளவிடாதே! என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து கால்களால் உதைத்துக்கொண்டான். மன்னனின் நிலையைக் கண்ட சாராஃ, இறைவா! இவன் செத்துவிட்டால் நான்தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர், என்று பிரார்த்தித்தார். இப்படி மன்னன் இரண்டு அல்லது மூன்று முறை வீழ்ந்து எழுந்து, அழ்ழாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஒரு ஷைத்தானைத்தான் அனுப்பியிருக்கிறீர்கள். எனவே, இவரை இப்ராஹீமிடம் அழைத்துச் செல்லுங்கள். இவருக்கு (பணிப் பெண்ணான) ஹாஜரைக் கொடுங்கள் என்று (அவையோரிடம்) சொன்னான். சாரா இப்ராஹீம் (அலை) அவர்களிடம் திரும்பி வந்து, அழ்ழாஹ் இந்த காஃபிரை வீழ்த்தி, நமக்குப் பணிபுரிய ஒரு அடிமைப் பெண்ணையும் தந்துவிட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா, என்று கேட்டார்” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஸஹீஹுல் புஹாரி-2217)

“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றின் இரண்டு அழ்ழாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தைச் சொன்னவையாகும். அவை 1. (அவரை இணை வைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்த போது), நான் நோயுற்றியிருக்கின்றேன் என்று (அதில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியதும், 2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடாரியை மாட்டிவிட்டு மக்கள், இப்படிச் செய்தது யார் என்று கேட்ட போது), ஆயினும், இவர்களில் பெரியதான இந்தச் சிலை தான் இதைச் செய்தது என்று கூறியதுமாகும் 3. (மூன்றாவது முறையாகப் பொய் சொன்ன சூழ்நிலை வருமாறு) ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா (அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள் அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) இங்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார். அவருடன் அவரது அழகான மனைவியும் இருக்கிறாள் என்று கூறப்பட்டது. உடனே, இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் ஆள் அனுப்பினான். (அவர்கள் வந்தவுடன்) அவர்களிடம் சாராவைப் பற்றி, இவர் யார் என்று விசாரித்தான். இப்ராஹீம் (அலை) அவர்கள், என் சகோதரி என்று பதிலளித்தார்கள். பிறகு சாரா (அலை) அவர்களிடம் சென்று, சாராவே! பூமியின் மீது உன்னையும் என்னையும் தவிர இறை நம்பிக்கை உடையவர் (தற்போது) எவரும் இல்லை. இவனோ என்னிடம் உன்னைப் பற்றிக் கேட்டு விட்டான். நான் நீ என் சகோதரி என்று அவனுக்குத் தெரிவித்து விட்டேன். ஆகவே, நீ (உண்மையைச் சொல்லி) என்னைப் பொய்யனாக்கி விடாதே என்று கூறினார்கள். அந்த மன்னன் சாரா (அலை) அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா (அலை) அவர்கள் அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே, அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். அவன் (சாரா (அலை) அவர்களிடம்) அழ்ழாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய்! நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன் என்று சொன்னான். உடனே, சாரா (அலை) அவர்கள் அழ்ழாஹ்விடம் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாவது முறையாக அவர்களை அணைக்க முயன்றான். முன்பு போலவே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதை விடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதும், எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அழ்ழாஹ்விடம் பிரார்த்தனை செய்! நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன் என்று சொன்னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை. ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள் என்று சொன்னான். பிறகு, ஹாஜர் அவர்களை சாரா (அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சாரா (அலை) அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து, என்ன நடந்தது என்று கேட்டார்கள். அவர் அழ்ழாஹ் நிராகரிப்பாளனின்….. அல்லது தீயவனின்…… சூழ்ச்சியை முறியடித்து அவன் மீதே திருப்பி விட்டான். ஹாஜரைப் பணிப்பெண்ணாக அளித்தான் என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்) வான் மழை (பிரதேச) மக்களே! அவர் (ஹாஜர்) தான் உங்கள் தாயார்- (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஸஹீஹுல் புஹாரி-3358)

மேலும், அழ்ழாஹ் தனது திருமறைக் குர்ஆனில் இமாம் இப்றாஹீம் (அலை) அவர்களை தனது உற்ற தோழராக்கிக் கொண்டதாகவும் குறிப்பிடுகின்றான்.இன்னும் இப்றாஹீம் நபி அவர்களை முழுமனித சமுதாயத்திற்கும் தலைவர் என்று உலகப்பொதுமறை திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது. இவ்வாறு அகிலத்தின் இரட்சகன் அழ்ழாஹ் இமாம் இப்றாஹீம் (அலை) அவர்களை மிக அதிகளவில் கண்ணியப்படுத்திப் பேசுவதற்குக் காரணம்தான் என்ன? இதோ திருமறைக் குர்ஆன் பதிலளிக்கின்றது.தவ்ஹீதின் தனிப்பெருந் தலைவர் இமாம் இப்றாஹீம் (அலை) அவர்கள் சோதனைகள் மலையெனக் குவிந்த போதிலும், சத்தியக் கொள்கையாம் தவ்ஹீதில் தடம் புரண்டுவிடாது, சமரசம் செய்யாது, துவண்டு ஒதுங்கிவிடாது தவ்ஹீதுக்கு நேர் எதிரான இணை வைப்புக் கொள்கைக்கு எரிமலையாய் இருந்ததன் விளைவே இறைவன் தனது திருமறையில் மிக அதிகளவில் சிலாகித்துக் கூறுகின்றான். தியாகச் செம்மல், பகுத்தறிவுப் பகலவன் இமாம் இப்றாஹீம் நபியவர்களின் ஓரிறைக் கொள்கைப் பிரச்சாரம் இதோ!அழ்ழாஹ்வின் சாபத்திற்குரிய சமாதி வழிபாட்டில் ஈடுபடுவோர் பகுத்தறிவுப் பகலவன் இப்றாஹீம் நபியின் அறிவுப்பூர்வமான கேள்விகளை சிந்திக்க கடமைப்பட்டுள்ளார்கள்.சமூகப் பகிஷ்காரத்தால் தவித்துக் கொண்டிருக்கையில் சொந்த வீட்டிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றார்கள் தனிப்பெருந்தலைவர் அவர்கள். இப்போதும் சளைத்துவிடவில்லை சன்மார்க்கப் போதகர் இப்றாஹீம் (அலை) அவர்கள்.கொடுங்கோல் மன்னனிடம் சென்று தவ்ஹீதை தயவு தாட்சண்யமின்றி எடுத்தியம்புகின்றார்கள். விளைவு நெருப்புக் குண்டத்தில் தூக்கி வீசப்படுகின்றார்கள்.
“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றின் இரண்டு அழ்ழாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தைச் சொன்னவையாகும். அவை 1. (அவரை இணை வைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்த போது), நான் நோயுற்றியிருக்கின்றேன் என்று (அதில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியதும், 2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடாரியை மாட்டிவிட்டு மக்கள், இப்படிச் செய்தது யார் என்று கேட்ட போது), ஆயினும், இவர்களில் பெரியதான இந்தச் சிலை தான் இதைச் செய்தது என்று கூறியதுமாகும் 3. (மூன்றாவது முறையாகப் பொய் சொன்ன சூழ்நிலை வருமாறு) ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா (அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள் அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) இங்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார். அவருடன் அவரது அழகான மனைவியும் இருக்கிறாள் என்று கூறப்பட்டது. உடனே, இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் ஆள் அனுப்பினான். (அவர்கள் வந்தவுடன்) அவர்களிடம் சாராவைப் பற்றி, இவர் யார் என்று விசாரித்தான். இப்ராஹீம் (அலை) அவர்கள், என் சகோதரி என்று பதிலளித்தார்கள். பிறகு சாரா (அலை) அவர்களிடம் சென்று, சாராவே! பூமியின் மீது உன்னையும் என்னையும் தவிர இறை நம்பிக்கை உடையவர் (தற்போது) எவரும் இல்லை. இவனோ என்னிடம் உன்னைப் பற்றிக் கேட்டு விட்டான். நான் நீ என் சகோதரி என்று அவனுக்குத் தெரிவித்து விட்டேன். ஆகவே, நீ (உண்மையைச் சொல்லி) என்னைப் பொய்யனாக்கி விடாதே என்று கூறினார்கள். அந்த மன்னன் சாரா (அலை) அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா (அலை) அவர்கள் அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே, அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். அவன் (சாரா (அலை) அவர்களிடம்) அழ்ழாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய்! நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன் என்று சொன்னான். உடனே, சாரா (அலை) அவர்கள் அழ்ழாஹ்விடம் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாவது முறையாக அவர்களை அணைக்க முயன்றான். முன்பு போலவே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதை விடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதும், எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அழ்ழாஹ்விடம் பிரார்த்தனை செய்! நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன் என்று சொன்னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை. ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள் என்று சொன்னான். பிறகு, ஹாஜர் அவர்களை சாரா (அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சாரா (அலை) அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து, என்ன நடந்தது என்று கேட்டார்கள். அவர் அழ்ழாஹ் நிராகரிப்பாளனின்….. அல்லது தீயவனின்…… சூழ்ச்சியை முறியடித்து அவன் மீதே திருப்பி விட்டான். ஹாஜரைப் பணிப்பெண்ணாக அளித்தான் என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்) வான் மழை (பிரதேச) மக்களே! அவர் (ஹாஜர்) தான் உங்கள் தாயார்- (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஸஹீஹுல் புஹாரி-3358)

இன்ஷா அழ்ழாஹ் வளரும்…

Sunday, March 21, 2010

நபித்தோழியர் நமக்கோர் முன்மாதிரி

முஹம்மட் அர்ஷாத் அல் அதரி
arshathalathary@gmail.com
ஏக இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கவேண்டிய இன்றைய இஸ்லாமிய சமுதாயம் அதிலும் குறிப்பாக எமது பெண்கள் தங்களுடைய வாழ்நாளை வீண்வேடிக்கைகளிலும் சினிமா, சீரியல்களிலும் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இறைவனை நினைத்து அழவேண்டிய கண்கள் கற்பனையான கதாபாத்திரங்களைப் பார்த்து கண்ணீர் வடிக்கின்றது. இறைதியானத்தில் உருக வேண்டிய உள்ளங்கள் சினிமா நடிகர், நடிகைகளைப் பார்த்து உருகுகின்றது.ஆனால் எமது முன்னோர்களான நபித்தோழியர் தங்களுடைய வாழ்நாளை முழுக்க முழுக்க இறைவன் விரும்பக்கூடிய வழியிலேயே கழித்தார்கள். மேலும், மார்க்கத்தைக் கற்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக, கற்றதை செயல்முறைப்படுத்தக் கூடியவர்களாகத் திகழ்ந்தார்கள்.
நபித்தோழர் அபுஸயீதில் குத்ரி (ரழி) அவர்கள் கூறியதாவது,  (நாங்கள் உங்களை அணுகி மார்க்க விட‌யங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் எப்போதும் ஆண்களே மிகைத்து நிற்கிறார்கள். எனவே தாங்களாகவே எங்களுக்கு ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள் என்று பெண்கள் நபி (ஸல்)அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கு என ஒரு நாளை ஏற்பாடு செய்ய வாக்களித்து அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (மார்க்க கட்டளைகளை) ஏவினார்கள்.
நூல்:ஸஹீஹுல் புஹாரி  101
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஆண்கள் தொடர்பாகவே அல்குர்ஆன் வசனங்கள் இறங்குகின்றது. பெண்கள் தொடர்பாக எந்த வசனமும், இறங்கவில்லையே என்று கேட்ட போது, அல்லாஹூத்தஆலா, நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், முஸ்லிம்களான பெண்களும், விசுவாசிகளான ஆண்களும், விசுவாசிகளான பெண்களும் (அல்லாஹ்விற்கு) வழிபாடு செய்பவர்களான ஆண்களும், வழிபாடு செய்பவர்களான பெண்களும், உண்மையாளர்களான ஆண்களும், உண்மையாளர்களான பெண்களும், பொறுமையாளர்களான ஆண்களும், பொறுமையாளர்களான பெண்களும், உள்ளச்சத்தோடு (அல்லாஹ்விற்குப்) பயந்து நடக்கும் ஆண்களும், உள்ளச்சத்தோடு (அல்லாஹ்விற்கு) பயந்து நடக்கும் பெண்களும், தானம் செய்பவர்களான ஆண்களும், தானம் செய்பவர்களான பெண்களும், நோன்பு நோற்பவர்களான ஆண்களும் நோன்பு நோற்பவர்களான பெண்களும் தங்கள் மர்மஸ்தானங்களைக் காத்துக்கொள்பவர்களான ஆண்களும், தங்கள் மர்மஸ்தானங்களைக் காத்துக்கொள்பவர்களான பெண்களும், அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுபவர்களான ஆண்களும் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுபவர்களான பெண்களும், (ஆகிய) இவர்களுக்கு, அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான (நற்) கூலியையும் தயார் செய்து வைத்திருக்கிறான்.
(அல்குர்ஆன் 33: 35)
என்கின்ற வசனத்தை அருளினான். இந்த வசனத்தில் அல்லாஹூத்தஆலா பெண்களுக்குரிய பல்வேறு பண்புகளை எடுத்துரைக்கின்றான். அந்தப் பண்புகளின் அடிப்படையில் நபித்தோழியர்கள் தங்களின் வாழ்நாளை அமைத்துக் கொண்டார்கள். ஆதலால்தான் இறைவனின் பாராட்டையும் வெற்றியையும் பெற்றவர்களானார்கள் மேற்கூறிய அருள்மறை வசனத்திற்கேற்ப தங்களது வாழ்வை அமைத்துக்கொண்ட நபித் தோழியரின் வாழ்வை கவனிப்போம்

எழுந்து நின்று மரியாதை செய்தல்

முஹம்மட் அர்ஷாத் அல் அதரி
arshathalathary@gmail.com

அரசியல் தலைவர்களோ, பெற்றோரோ, ஆசிரியர்களோ வருகை தரும்போது எழுந்து நின்று மரியாதை செய்வது மாற்று மத கலாச்சாரமாகும். இப்பழக்கம் தற்போது முஸ்லிம்களிடமும் ஊடுருவி இருக்கிறது. இப்படி ஒருவரை மரியாதை செய்வதற்கு எழலாமா? நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்துள்ளார்களா? தடுத்துள்ளார்களா? எனும் வினாக்களுக்கு கீழ் காணும் ஹதீஸ் பதிலளிக்கின்றது.

நபித்தோழர்களுக்கு நபி(ஸல்) அவர்களை விட எந்த மனிதரும் விருப்பமுடையவராக இருந்ததில்லை (அப்படிப்பட்ட அன்னலாரை) நபித்தோழர்கள் பார்த்தால் எழமாட்டார்கள். ஏனெனில் இப்படி எழுந்து மரியாதை செய்வதை அவர்கள் வெறுப்பார்கள் என்பதை அறிந்திருந்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரழி)

ஆதாரம்: திர்மிதீ

மரியாதை செய்வதற்கு அதிகம் தகுதியுடையவர்கள் நபி (ஸல்) அவர்களை விட இவ்வுலகில் யாருமில்லை. அப்படிப்பட்ட நபி(ஸல்) அவர்களை உயிரிலும் மேலாக மதித்த நபித்தோழர்கள் எழுந்து மரியாதை செய்யவுமில்லை, அதை நபியவர்கள் விரும்பவுமில்லை.

இவ்வாறாக அன்னலார் வெறுத்த, நபித்தோழர்கள் செய்யாத ஒன்றை நாம் செய்யலாமா? எழுந்து நிற்பதை விரும்புவர்கள் நபி(ஸல்) அவர்களை விட தகுதியில் உயர்ந்துவிட்டார்களா?

முஆவியா (ரழி) அவர்கள் வந்த போது அவரைப்பார்த்த இரு தோழர்கள் எழுந்து நின்றார்கள். (அதற்கு முஆவியா (ரழி) நீங்கள் இருவரும் அமருங்கள். மனிதர்கள் எழுந்து நிற்பது எவருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தனது தங்குமிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மிஜ்லஸ் (ரஹ்)

பாருங்கள் சகோதரர்களே!

எவ்வளவு பெரிய எச்சரிக்கை!

தண்டனைகளில் பெரிய தண்டனையான நரகம் கிடைக்கும் இச்செயலுக்கு நாம் ஆசைப்படலாமா? விரும்பலாமா? ஏனையோரை எழுந்து நிற்குமாறு நிர்ப்பந்திப் பவர்கள் இந்த எச்சரிக்கை பற்றி சிந்திப்பார்களா?

கீழ்க்காணும் ஹதீஸும் ஒருவருக்கு எழுந்து நிற்பது கூடாது என்பதை தெளிவு படுத்துகிறது.

ஜாபிர் (ரழி) அறிவிக்கின்றார்கள்:

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது நாங்கள் அவர்கலுக்கு பின்னல் நின்று தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் அமர்ந்தவாரே எங்களுக்கு தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் தக்பீர் கூற அதை அபூபக்கர் (ரழி) அவர்கள் மக்களுக்கு கேற்கும் வண்ணம் (உரத்த குரலில்) கூறிக்கொண்டிருந்தார்கள். அல்லஹ்வின் தூதர் அவர்கள் எங்களை திரும்பி பார்த்து நாங்கள் நின்று கொண்டு தொழுதுகொண்டிருப்பதைக் கண்டு உட்கார்ந்து தொழுமாறு சைகை செய்தார்கள். உடனே நாங்கள் உட்கார்ந்தவாறே அவர்களை பின்பற்றி தொழுதோம். அவர்கள் ஸலாம் கொடுத்ததும்,

“நீங்கள் சிரிது நேரத்திற்கு முன் பாரசீகர்கள் மற்றும் ரோமர்களைப் போன்று நடந்து கொள்ளப் பார்த்தீர்கள். அவர்கள்தாம் தம்மன்னர் அமர்ந்து கொண்டிருக்கும் போது நின்று கொண்டிருப்பவர்கள். நீங்கள் அவ்வாறு செய்யாதீர்கள், உங்களுக்கு தலைமை தாங்கி தொழுவிப்பவர்களை பின்பற்றுங்கள். அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள் அவர் அமர்ந்து தொழுதால் நீங்களும் அமர்ந்து தொழுங்கள்.”

ஆதாரம்: புஹாரி

மேற்படி ஹதீஸ் ஒருவருக்கு எழுந்து நின்று மரியாதை செய்வது கூடாது என்பதையும் அவ்வாறு செய்வது மாற்று மத கலாச்சாரம் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

இவ்விடத்தில் கீழ்வரும் நபிமொழியையும் ஞாபகமூட்ட விரும்புகிறோம்.

” உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த) வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாக பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் ஓர் உடும்புப்பொந்துக்குள் புகுந்தாலும் கூட அதிலும் நீங்கள் புகுவீர்கள்”

அறிவித்தவர்: அபூ ஸயீத் அல் குத்ரீ

ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்

எனவே அல்குர்ஆன் அஸ்ஸுன்னாஹ் அடிப்படையில் எழுந்து நின்று மரியாதை செய்வது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட விடயம் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

Monday, March 15, 2010

இயற்கைத் தேர்வுக் கொள்கையின் வீழ்ச்சிப் பயணம்

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரில் இருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையை படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்’ (04:01)

இயற்கைத் தேர்வுக் கொள்கை அல்லது பரிணாம வளர்ச்சித் தத்துவம் என்கின்ற, படைப்பாளனான இறைவனை மறுக்கின்ற நாத்திக சிந்தனையானது இன்று பாட நூற்களில் புகுத்தப்பட்டு எமது பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சாக இக்கருத்து விதைக்கப்பட்டு வருவதனால் இப்போலி வாதம் தொடர்பான தெளிவுக்காக இவ் வாக்கம் வரையப்படுகின்றது.

தோற்றம்.

இயற்கைத் தேர்வுக் கொள்கை என்கின்ற போலி தத்துவமானது, ஆரம்பத்தில் கிரேக்க தேசங்களில் தோற்றம் பெற்றிருந்ததாயினும், இதனை உயிர்ப்பித்து முதன் முதலில் கோட்பாட்டு வடிவம் கொடுத்தவர் பிரெஞ்சு தேசத்து உயிரியல் ஆராய்ச்சியாளர் ‘ஜீன் பேட்டிஸ் லாமார்க்’ என்பவராவார். உயிரினங்கள் தாம் பெற்றுக் கொண்ட இயல்புகளை தங்களது சந்ததிகளுக்கு வழங்கிவிட்டுச் செல்கின்றன என்பது இவரது வாதமாகும். மேலும், ஒரு உடற் பாகத்தினை தொடர்ச்சியாக பயன்படுத்துகையில் அப்பாகம் வலிமை அடைய, பயன்படுத்தப்படாத பாகம் வலிமை குறைவடையும் என்று கூறுகின்ற ஜீன் பேட்டிஸ் லாமார்க் ஒட்டகச் சிவிங்கி உணவுக்காக தனது கழுத்தை தொடர்ச்சியாக நீட்டிக் கொண்டே சென்றதன் காரணமாக அதனது கழுத்து நீண்டது என்கிறார். ஆனால், அறிவியலின் அபரிதமான வளர்ச்சியின் காரணமாக ஜீன் பேட்டிஸ் லாமார்க்கின் இவ்வாதமானது தவிடு பொடியாக் கப்பட்டது.

‘வைஸ்மேன்’ என்கின்ற அறிவியல் அறிஞர், எலிகளின் வால்களைத் தொடர்ச்சியாக எண்பது தலைமுறைகளுக்கு அகற்றிய பிற்பாடும், பிறக்கின்ற எலிகளுக்கு தமது முன்னோர்களினைப் போன்று நன்கு செயற்பாடுடைய வால் இருந்ததை கண்டறிந்தார். ஜீன் பேட்டிஸ் லாமார்க்கின் வாதத்தின் அடிப்படையில் பிறக்க கூடிய எலிகளுக்கு வால் இல்லாமல் இருந்திருக்க வேண்டும். (ஒரு எலியின் சராசரியான ஆயுட்காலம் இரண்டு தொடக்கம் மூன்று வருடங்களாகையால், எண்பது தலைமுறை எலிகளை ஆய்வுக்கு உட்படுத்தமுடியும்)

இயற்கைத் தேர்வுக் கொள்கையின் தந்தை சார்ள்ஸ் டார்வின்!
ஜீன் பேட்டிஸ் லாமார்க்கிற்கு பின்னர், இயற்கைத் தேர்வுக் கொள்கையை நிலை நிறுத்துவதில் பெரும் பங்காற்றியவர் ‘சார்ள்ஸ் ரொபர்ட் டார்வின்’ (Charles Robet Darwin) என்கின்ற இயற்கையியல் அறிஞராவார். இவர் இங்கிலாந்தில் 1809ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12ம் நாள் பிறந்தார். இயற்கை விஞ்ஞானியான இவர் H.M.S.Beagle என்கின்ற அரசு கப்பலில் 1832ம் ஆண்டு தொடக்கம் 1836ம் ஆண்டு வரை கடமையாற்றினார்.

கடல் வழியே இக்கப்பலில் உலகின் பல பாகங்களுக்கும் குறிப்பாக ‘காலாபாகசு’த் தீவுகளுக்கும் பயணித்து புதிய தாவரங்கள், விலங்கினங்கள் தொடர்பான தகவல்களினையும், புதைபொருள் தொடர்பான தகவல்களினையும் சேகரித்துக் கொண்டு இங்கிலாந்து திரும்பினார். சிறிது காலத்தின் பின்னர், தான் சேகரித்த தகவல்கள் பார்த்த காட்சிகளின் அடிப்படையிலும், இங்கிலாந்து நாட்டு இயற்கை விஞ்ஞானியான ‘அல்பிரட் ரசல் வொல்ஸ்’ (1823-1913) என்பவரால் சார்ள்ஸ் டார்வினுக்கு வரையப்பட்ட கடிதத்தை அடிப்படையாகக் கொண்டும், 1856ல் ‘இயற்கைத் தேர்வின் காரணமாய் ஏற்பட்ட உயிரினங்களின் தோற்றம்’ (The Origin of Species by Means of Natural Selection) எனும் நூலை வெளியிட்டு பெரும் பரபரப்பை தோற்றுவித்ததுடன் நன்கு பிரசித்தமானார்.

எனினும் விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்படாத எடுகோல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட தனது நூலில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களில் அவருக்கே பலத்த சந்தேகம் தோன்றியது என்பதை ‘தத்துவங்களில் உள்ள இடர்கள்’ என்கின்ற அத்தியாயத்தில் அவரே, பல வினாக்களுக்கு தன்னால் சரியான பதிலை அளிக்க முடியாது என தனது இயலாமையை ஒப்புக் கொள்கின்ற அதேவேளை விஞ்ஞானம் அபரிமிதமான வளர்ச்சியடையும் போது தன்னை நோக்கி வீசப்படும் கேள்விக் கணைகளுக்கு பதிலளிக்கப்படும் என சார்ள்ஸ் டார்வின் பெரிதும் நம்பினார். ஆனால் அவரது நம்பிக்கைக்கு மாற்றமாக விஞ்ஞானம் அவரது கருத்துக்களை தொடர்ச்சியாக புதைகுழிக்குள் அனுப்பிக் கொண்டே வருகின்றது.

சார்ள்ஸ் டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கை
இவ்வுலகில் உயிர் வாழக் கூடிய அனைத்து உயிரினங்களும் ஒரே மாதிரியாகக் காணப்பட முடியாது. மாறாக தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்ற சூழல் மற்றும் கால மாற்றத்தில் தன்னை தக்க வைத்துக் கொள்ளக் கூடிய குணாதிசயங்களைத் தன்னகத்தே கொண்ட உயிரினங்கள் தொடர்ந்து உயிர் வாழவும், இம்மாற்றங்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத, வாழ்க்கைப் போராட்டத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத உயிரினங்கள் எல்லாம் அழிந்தும் விடுகின்றன. ஊர்ந்து செல்லக் கூடிய உயிரினங்களிலிருந்து குட்டி போட்டு பாலூட்டி வளர்க்கும் உயிரினங்களும் பறவைகளும் தோன்றின. மேலும் குட்டி போட்டு பாலூட்டும் இனத்திலிருந்து வாலில்லாக் குரங்குகளும் (Chimpanzees), வாலில்லாக் குரங்கிலிருந்து மனிதனும் தோன்றினான் என்பதுவே உயிரினங்களின் படைப்பு தொடர்பாக பரிணாம வாதிகள் தரும் விளக்கமாகும்.

உலக மனிதர்கள் ஒரு தாய், தந்தையிலிருந்து தோன்றியவர்களே!
சார்ள்ஸ் டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கையை முற்றிலும் நிராகரிக்கின்றார் உயிரியல் துறை விஞ்ஞானியான ‘ஸ்பென்ஸர் வெல்ஸ்’ என்பவர். எந்த மனிதனின் மரபணுவை எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்துகின்ற போதிலும் அவனது ஆரம்பம் ஒரு ஆபிரிக்க தாய், தந்தையரிலேயே போய் முடிவடைகின்றது. எனவே, மனித குலத்தின் மூதாதையர் நிச்சயமாக ஆபிரிக்கப் பிரதேசத்திலேயே வாழ்ந்துள்ளனர். மேலும் சுமார் அறுபது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்காவில் இடம் பெற்ற குடிபெயர்வொன்றே உலகளாவிய குடியேற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

ஆரம்ப கால மனிதன் கற்கள் மற்றும் எலும்புகளால் செய்யப்பட்ட ஆயுதங்களை வேட்டையாடுவதற்காகப் பயன்படுத்தினான். ஆபிரிக்காவில் பனியுகத்தின் உருவாக்கத்தின் காரணமாகப் பாலைவனங்கள் பரவின. இதனால் ஆரம்ப கால மனிதனுக்கு உணவினைப் பெற்றுக் கொள்வது பாரிய பிரச்சினையாக உருவெடுக்க, உணவிற்காகக் கரையோரம் நோக்கி நகரத் தொடங்கிய மனிதன் தொடர்ந்து நகர்ந்து கொண்டே சென்றான். பூமியின் பெரும் பங்கு நீரானது மலைகளின் மீது உறைந்த நிலையில் காணப்பட்டதனால் கடல் மட்டம் தற்போது காணப்படுவதனை விட 100m ஆழம் குறைவாகக் காணப்பட்டது. ஆரம்பத்தில் சிங்கப்பூர், பர்மா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஒரே தொடர் பூமியாகக் காட்சிதந்தன.

இன்றைய இலங்கையானது ஆரம்பத்தில் இந்தியாவுடன் இணைந்திருந்தது. இந்தியாவின் மேற்குக்கரை தற்போது காணப்படுவதனை விட 200 km மேற்குப் பக்கமாக தூரத்தே காணப்பட்டது. மேலும், அவுஸ்திரேலியாவிலிருந்து ஆபிரிக்கா நோக்கி ஒரு கூட்டம் இடம்பெயர மற்றொரு கூட்டம் எகிப்து மேற்காசியாவின் ஊடாக மத்திய ஆசியா நோக்கிப்படை யெடுத்தனர். சிலர் சைபீரியா மற்றும் சீனா நோக்கி நகர்ந்து சென்றனர். இதுவே உலகளாவிய குடியேற்ற வரலாறு ஆகும் என தனது ஆய்வறிக்கையினை “The Journey Of Man – ‘மனிதனின் பயணம்’ எனும் நூலில் குறிப்பிடுவதன் ஊடாக சார்ள்ஸ் டார்வினின் வாலில்லா குரங்கிலிருந்து தோன்றியவனே மனிதன் என்கின்ற இயற்கைத்தேர்வுக் கொள்கையினைப் புதைகுழிக்குள் அனுப்புகிறார் உயிரியல் விஞ்ஞானி ஸ்பென்ஸர் வெல்ஸ்.

குறிப்பு: மனித குலத்தின் ஆரம்பம் ஆபிரிக்க மூதாதையர் என்பது அல்குர்ஆனிலோ, அண்ணலாரின் பொன் மொழியிலோ கூறப்பட்ட உண்மை அன்று. மாறாக, உயிரியல் விஞ்ஞானி ‘ஸ்பென்ஸர் வெல்ஸின் ‘ ஆய்வின் முடிவே என்பதை வாசகர்கள் கவனத்திற் கொள்ளவும்.

முதல் உயிரினத்தின் தோற்றம்
இயற்கைத் தேர்வு வாதத்தை முன்வைப்பவர்களின் விளக்கத்தின் அடிப்படையில் எந்த உயிரினத்திலிருந்தும் மற்றொரு புதிய உயிரினம் தோன்ற முடியும். மேலும் ஒரு உயிரினம் கால மாற்றத்தில் முற்று முழுவதுமாக மாறுபட்ட புதிய ஒரு உயிரினமாக மாற்றமுற முடியும். ஆனால் அந்தோ பரிதாபம்! இயற்கைத் தேர்வுக் கொள்கையை முன்வைப்ப வர்களின் வாதத்தை உறுதிப்படுத்தக் கூடிய விதத்தில் விஞ்ஞான ரீதியான எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை.

மேலும் முதல் உயிரினத்தின் தோற்றத்திற்கு அவர்கள் தருகின்ற விளக்கம், உயிரற்ற பொருட்களான மண், பாறைகள், வாயுக்கள் இவ்வுலகினில் காணப்படுகையில் காற்று, மழை மற்றும் மின்னலின் விளைவாக முதல் உயிரணு தோன்றியது என இயற்கைத் தேர்வுக் கொள்கை வாதிக்கின்றது. ஆனால் இது உயிரியலின் மிக அடிப்படையான விதிக்கு முற்றிலும் மாறுபட்ட வாதமாகும். இத்தத்துவம் முன்வைக்கப்பட்ட போது இறைச்சியிலிருந்து தானாக பூச்சி புழுக்களும், கோதுமை யிலிருந்து எலியும் தோன்றின என நம்பப்பட்டது.

புதைகுழிக்கு அனுப்பப்படும் இயற்கைத் தேர்வுக் கொள்கை
பிரான்ஸ் நாட்டின் உயிரியல் விஞ்ஞானியான ‘லூயிபாஸ்டர்’ என்கின்ற அறிஞர் தனது ஆய்வினைப் பற்றி குறிப்பிடுகையில், உயிருள்ளவைதான் புதிய உயிரினங்களைத் தோற்றுவிக்க முடியும் எனவும் தனது கண்டுபிடிப்பினூடாக, உயிரற்ற பொருட்களாலும் உயிரினங்களை உற்பத்தி செய்ய முடியும் என்கின்ற மூட நம்பிக்கை வரலாறு என்பது புதைகுழிக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் கூறுகின்றார்.

பரிணாமவாதிகளே! சிந்தியுங்கள்!
நீங்கள் தூக்கி நிலை நிறுத்துவதற்காகப் பெரும் பாடுபடுகின்ற இயற்கைத்தேர்வுக் கொள்கையில் உண்மை இருக்குமாக இருந்தால் மனிதக் குரங்குகளையும் (Gorillas), ஆபிரிக்காவில் வாழ்கின்ற வாலில்லாக் குரங்குகளையும் (Chimpanzees) இயற்கைத் தேர்வுக் கொள்கையினூடாக மனிதர்களாக மாறாது தடுத்தது எது? இயற்கைத் தேர்வுக் கொள்கையின் அடிப்படையில், மனிதனாக மாறுவதற்கு போதிய காலம் அவை இந்த பூமியில் வாழ்ந்துள்ளன.

பல இலட்ச ஆண்டுகள் அவை வாழ்ந்து விட்டனவே? பல இலட்ச வருடங் களுக்கு முன்னர் வாழ்ந்த வாலில்லாக் குரங்குகள் நமது வாழ்காலத்தில் ஏன் மனிதனாக மாற்றமடையவில்லை? எமது முன்னோர்களின் வாழ்காலத்திலாவது இவ்வாறு மாற்றம் அடைந்ததாக வரலாறு இல்லையே? பசுவின் நல்ல ரகம் வேண்டும் என விரும்புபவர்கள் ஒரு குறிப்பிட்ட வகை பசுவை இன்னுமொரு வகை பசுவோடு புணரச் செய்து நல்ல ரக பசுவைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதனை அவர்கள் பல வருடங் களாகவே செய்து வருகின்றார்கள். இவ்வாறு பிறக்கின்ற பசுக்கள் சில நேரங்களில் நிறத்திலும், தன்மையிலும் மாறுபடுகின்றன. ஆனாலும் அவை பசுக்களாகவே உள்ளன. அவை ஒருபோதும் பசு இனத்திலிருந்து மாறுபட்ட மற்றொரு புதிய வகை இனமாக மாறியதில்லை. கால மற்றும் சூழல் மாற்றத்தில் பசு இனம் ஆடுகளாகவோ மற்றொரு இனமாகவோ மாறியதில்லை. கழுதை காலங்கடந்ததால் குதிரையாகவோ, குதிரை நாள்கடந்ததால் ஒட்டகமாகவோ மாறியதாக வரலாறு இல்லை.

அருள்மறையின் ஒளியில்

இறுதியாக, உயிரியலின் அடிப்படை விதியின் அடிப்படையில், உயிருள்ளவைகளில் இருந்துதான் உயிரினங்கள் பிறக்கின்றன. இதனை இன்னும் தெளிவாகக் கூறுவதானால், உயிரினங்களை இறைவனான அல்லாஹ்வே படைத்தான். இதோ உலகப் பொது மறையாம் அருள் மறை எடுத்தியம்பு கின்றது.

அவன் ஒவ்வொரு பொருளின் படைப்பையும் அழகுபடுத் தினான். மனிதனின் படைப்பைக் களி மண்ணிலிருந்து துவக்கினான். பிறகு அவனது சந்ததிகளை அற்பமான நீரின் சத்திலிருந்து உருவாக்கினான். பின்னர் அவனைச் சீரமைத்து, தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.பூமிக்குள் மறைந்த பின் புதுப் படைப்பை நாங்கள் பெறுவோமா?’ என்று அவர்கள் கேட்கின்றனர். அவ்வாறில்லை! அவர்கள் தமது இறைவனின் சந்திப்பை மறுக்கின்றனா’ (உலகப் பொது மறை அல்குர்ஆன் 32:7-10).

அவனே, உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். அவர் அவளுடன் இணைந்த போது அவள் இலேசான சுமையைச் சுமந்தாள். அதனுடன் அவள் நடமாடினாள் அவள்(வயிறு) கணத்த போது (அங்கத்தில்) குறைகளற்றவனை நீ எங்களுக்கு வழங்கினால் நன்றி செலுத்துவோராவோம்’. என்று அவ்விருவரும் தமது இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்;தனர். (உலகப் பொது மறை அல்குர்ஆன் 7:189)

* Reference:- OTTRUMAI