Sunday, August 8, 2010

தங்க வளையல் அணியும் நங்கையரே! நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள்!

முஹம்மட் அர்ஷாத் அல்அதரி
பிரச்சாரகர்- தாருல் அதர் அத்தஅவிய்யா
‘வாரஉரைகல்’ பதிவு 114 இல் ‘தங்கத்தினாலான எல்லா நகைகளையும் பெண்கள் அணியலாம்’ என்கின்ற தலைப்பில் ‘அல்மின்ஹாஜ்’ மாதஇதழில் வெளிவந்த ஆக்கம் ஒன்று மீள்பிரசுரிக்கப்பட்டிருந்ததை வாசகர்களாகிய நீங்கள் அறிந்திரூப்பீர்கள். அவ்வாக்கத்தில் கூறப்பட்டுள்ள தவறான வாதங்களுக்கான தக்கபதில்கள்:
‘தங்கத்தினாலான எல்லா நகைகளையும் பெண்கள் அணியலாம்!’, ‘வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைள் அணிவது ஹராம்’  என்கின்ற சர்சைக்குள் நுழைவதற்கு முன்னர் சில அடிப்படையான விடயங்களை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின் சட்ட மூலாதாரம் அருள்மறைக்குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரமே. மாறாக, நபித்தோழர்களின் சொந்த செயற்பாடுகள், இஜ்மா, கியாஸ், இமாம்கள், பெரியார்களின் சொந்தக் கூற்றுக்கள் மார்க்க ஆதாரமெனக் கருதுவது ஈமானுக்கு மாற்றமான நிலையாகும். இது தொடர்பாக அருள்மறைக் குர்ஆன் குறிப்பிடுகையில்,

‘உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து  (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!’ (அல்குர்ஆன்- 07:03)

மேலும் பார்க்க அல்குர்ஆன்: 2:38, 2:170, 6:106, 10:15, 3:103, 33:02, 39:03,
10:109, 39:55, 46:09, 49:16

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில்,

‘நான் உங்களுக்கு மத்தியில் இரண்டு விடயங்களை விட்டுச் செல்கின்றேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடிக்கும் காலமெல்லாம் ஒரு போதும் வழிதவற மாட்டீர்கள். ஒன்று அழ்ழாஹ்வின் வேதம் மற்றையது எனது வழிமுறை என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஹாகிம்)

‘நான் உங்களிடையே கனமான இரண்டு பொருட்களை விட்டுச் செல்கின்றேன். அவற்றில் ஒன்று அழ்ழாஹ்வின் வேதமாகும். அதில் நல் வழியும் பேரொளியும் உள்ளது. எனவே அவ் வேதத்தை பலமாகப் பற்றிக் கொள்ளுங்கள்.’ (அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ரழி), நூல்: முஸ்லிம்-4782)
மேற்குறித்த அடிப்படையை மனதில் இறுத்தியவர்களாக, பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைள் அணிவது ஹலாலா? ஹராமா? என்கின்ற விடயத்தை அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்டையில் காய்தல், உவத்தல் இன்றி நடுநிலையுடன் இறையச்சத்தை மாத்திரம் முன்னிறுத்தி ஆயு;வுக்குட்படுத்துவோம்.

பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராமாகுமா?

குறித்த விடயம் தொடர்பான ஆய்வுக்குள் நுழைவதற்கு முன்னர், சில விடயங்களை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
ஒரு  ஆய்வு  முன்வைக்கப்படும் போது அது குறித்து முறையாக தெரிந்து கொள்வதும்,  சரியாக இருக்கும் பட்சத்தில் அதை பின்பற்றுவதுமே ஒரு முஸ்லிமுக்கு அழகாகும்.  இது பற்றி திருமறைக் குர்ஆன் குறிப்பிடுகையில்,
‘அழ்ழாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் ‘எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்’ என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? (அல்குர்ஆன்-02:170)

மேலும், ஒரு கருத்து அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் முன்வைக்கப்படும் போது ‘புதிய கருத்து’ ‘எங்களது முன்னோர்கள் செய்யவில்லை’ என்கின்ற போலிவாதங்களை கூறி புறந்தள்ளுவதை விடுத்து, குறித்த விடயத்தை அல்குர்ஆன் ஆதாரபூர்வமான நபிமொழிகள் என்கின்ற உரைகல்லில் உரசிப் பார்த்து சரியாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக் கொள்வதுதான் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களுக்கு அழகானதாகும். இதனை திருமறைக் குர்ஆன் பின்வருமாறு கூறிக் காட்டுகின்றது.

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அழ்ழாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அழ்ழாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அழ்ழாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.’  (அல்குர்ஆன்-4:59)

இன்று எமது இஸ்லாமிய சமுதாய மக்களில் பலர் அறியாத, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்த  ஒரு விடயம்தான் பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராம் என்பதாகும்.

இஸ்லாத்தின் பார்வையில் காப்பு, மாலை உள்ளடங்கலாக வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராமாகும். மாறாக, வளையல் அல்லாத தங்க நகைகளை தாரளமாக அணிந்து கொள்ளலாம்.
இது தொடர்பாக அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமான நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.

1
 
‘(உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு (மனைவி, சகோதரி, தாய், உறவு முறைப்பெண்) ஆகியோருக்கு நரக நெருப்பினால் ஒரு வளையத்தை அணிவிக்க  விரும்புகின்றாரோ அவர் தங்கத்தினால் ஒரு வளையலை அவளுக்கு அணிவிக்கட்டும். (உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் ஒரு கழுத்தணியை  அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்க மாலையை அவளுக்கு அணிவிக்கட்டும். உங்களில் யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் காப்பு அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கக் காப்பை அணிவித்துக் கொள்ளட்டும். என்றாலும் வெள்ளியை உங்களுக்கு நான் ஏவுகின்றேன். அவற்றை தாராளமாகப் பயன்படுத்துங்கள்! என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூற்கள்: முஸ்னத் அஹ்மத், ஸுனன் அபீதாவுத்-4236)

2
‘ஹுபைறா என்பவரின் மகள் (ஹிந்த்) அழ்ழாஹ்வின் தூதரிடத்தில் தங்க மோதிரம் அணிந்தவளாக வந்தாள். அப்பெண்னின் கையை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தட்டிவிட்டார்கள்.

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இச்செயலை அப்பெண் பாத்திமா (ரழி) அவர்களிடத்தில் முறைப்பட்டாள். உடனே, பாத்திமா (ரழி) அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழற்றி ‘இதனை ஹஸனின் தந்தை (அலி ரழி)  அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள்’ எனக் கூறினார். பாத்திமா (ரழி) அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள்.

பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா! எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள். உடனே பாத்திமா (ரழி) அவர்கள் அம்மாலையைக் கழற்றி கடையில் விற்று வருமாறு ஆளப்பினார்கள். மாலை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கி உரிமை இட்டார்கள். பாத்திமாவின் இச்செயல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த போது ‘நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அந்த அழ்ழாஹ்வுக்கே புகழ் அனைத்தும்’ எனக் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: தவ்பான் (ரழி), நூல்:ஸுனனுன் நஸாயீ-5140)

மேலுள்ள நபிமொழிகள் மூலம் கழுத்தணி உள்ளடங்கலாக வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராம் என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

மேற்படி ஆதாரபூர்வமான நபிமொழிகளுக்கு எதிராக சில அறிஞர்களால் சில வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. மாற்றுக் கருத்திலுள்ள சகோதரர்கள் முன்வைக்க கூடிய ஆதாரங்கள் வாதங்களை பரிசீலனைக்கு உட்படுத்துவோம்.

தங்கத்திலான எல்லா நகைகளையும் பெண்கள் அணியலாமா?

தங்கத்தினாலான எல்லா நகைகளையும் அணியலாம் என்று கூறக் கூடிய சகோதரர்களின் வாதங்களில் உள்ள தவறுகளை நோக்குவதற்கு முன்னர், நான் எனது ஆய்வின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட விடயத்தை மீண்டும் சகோதரர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின் சட்ட மூலாதாரம் அருள்மறைக்குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரமே. ஆனால், குறித்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போன்று,

‘பெண்களுக்கு தங்கம், வெள்ளி, முத்து, பவளம், வெண்முத்து, வைரம் போன்றவற்றைக் கொண்ட ஆபரணங்களை அணிவது ஹலாலாகும். இக்கருத்தை ஹனபி, மாலிகி, ஷாபிஈ, ஹன்பலி, ழாஹிரி ஆகிய மத்ஹபுகளை சேர்ந்த பெரும்பான்மையான அறிஞர்கள் கூறுகின்றார்கள்.’

என்று தமது வாதத்தை ஆரம்பிப்பதன் மூலம் என்னதான் குர்ஆன், ஹதீஸ் என்று கூறிக் கொண்டாலும் தாங்கள் இன்னும் மத்ஹப் மாயை, முன்னோர்கள் மீதான வரட்டு பக்தி போன்ற வழிகேடுகளில் இருந்து மீளவில்லை என்பதை மீண்டுமொரு முறை பறைசாற்றியிருக்கின்றார்கள்.
மேலும், குறித்த கட்டுரையானது முழுக்க, முழுக்க மத்ஹபு நூற்கள், மத்ஹபு சார் அறிஞர்களின் கூற்றுக்களை தழுவியதாகவே காணப்படுகின்றது. மத்ஹபுகள், பெரியார்கள், நாதாக்கள், ஷேகுமார்கள், பெரும்பான்மை மக்களைப் பின்பற்றுவது தொடர்பாக அருள்மறைக் குர்ஆன் பின்வருமாறு மிகக் கடுமையாக எச்சரிக்கின்றது.

‘அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ‘நாங்கள் அழ்ழாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?’ எனக் கூறுவார்கள். ‘எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்’ எனவும் கூறுவார்கள். ‘எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!’ எனவும் கூறுவார்கள்.’ (அல்குர்ஆன்-33:66-68)

‘உங்களுக்கு முன் சென்று விட்ட சமுதாயங்களான ஜின்கள் மற்றும் மனிதர்களுடன் நீங்களும் நரகத்தில் நுழையுங்கள்! என்று (அவன்) கூறுவான். ஒவ்வொரு சமுதாயமும் அதில் நுழையும் போது தம் சகோதர சமுதாயத்தைச் சபிப்பார்கள். முடிவில் அவர்கள் அனைவரும் நரகத்தை அடைந்தவுடன் ‘எங்கள் இறைவா! இவர்களே எங்களை வழி கெடுத்தனர். எனவே இவர்களுக்கு நரகமெனும் வேதனையை இரு மடங்கு அளிப்பாயாக!’ என்று அவர்களில் பிந்தியோர், முந்தியோரைப் பற்றிக் கூறுவார்கள். ‘ஒவ்வொருவருக்கும் இரு மடங்கு உள்ளது. எனினும் நீங்கள் அறிய மாட்டீர்கள்’ என்று (அவன்) கூறுவான். ‘எங்களை விட உங்களுக்கு எந்தச் சிறப்பும் கிடையாது. எனவே நீங்கள் செய்து வந்ததன் காரணமாக வேதனையைச் சுவையுங்கள்!’ என்று முந்தியோர், பிந்தியோரிடம் கூறுவார்கள்.’ (அல்குர்ஆன்-07:38,39)

‘அழ்ழாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் வாருங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் ‘எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்’ என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?’ (அல்குர்ஆன்-05:104),

‘அநீதி இழைத்தவன் தனது கைகளைக் கடிக்கும் நாளில், ‘இத்தூதருடன் நான் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருக்கலாமே’ என்று கூறுவான். இன்னாரை நான் உற்ற நண்பனாக ஆக்காமல் இருந்திருக்கக் கூடாதா? அறிவுரை எனக்குக் கிடைத்த பின்பும் அதை விட்டு என்னை அவன் கெடுத்து விட்டான். ஷைத்தான் மனிதனுக்குத் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான் (என்றும் கூறுவான்.) ‘என் இறைவா! எனது சமுதாயத்தினர் இந்தக் குர்ஆனைப் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கி விட்டனர்’ என்று இத்தூதர் கூறுவார்.’ (அல்குர்ஆன்-25:27-30)

மேலும் பார்க்க அல்குர்ஆன்: 02:170, 07:28, 10:78, 21:53, 31:21, 36:74, 43:22, 43:23,   53: 23
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில்,

‘நான் உங்களை தெட்டத்தெளிவான ஆதாரத்தின் மீது விட்டுச் செல்கின்றேன். அதன் இரவும் பகலைப் போன்றது. எனக்குப் பின்னால் அதைவிட்டும் திசை மாறுபவர் அழிந்தவர் ஆவார் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இர்பால் பின் ஸாரயா, ஆதாரம்: இப்னுமாஜா-42, முஸ்னத் அஹ்மத்-16813)

பெரும்பான்மையைப் பின்பற்றுவது தொடர்பாக அருள்மறைக் குர்ஆன் குறிப்பிடுகையில்,

‘பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அழ்ழாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.’     (அல்குர்ஆன்-06:116)

‘ஜின்களிலும் மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம்.’     (அல்குர்ஆன்-07:179)

‘நீர் பேராசைப் பட்டாலும் மக்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை.’ (அல்குர்ஆன் 12:103).

மேலும் பார்க்க அல்குர்ஆன்:  07:187, 12:21, 12:40, 12:68, 16,38, 25:50, 30:06, 30:30, 34:28, 34:36, 40:57, 45:27

மேலுள்ள திருமறை வசனங்கள், ஆதாரபூர்வமான நபிமொழிகள் மத்ஹபுகள், பெரியார்கள், முன்னோர்கள், நாதாக்களை பின்பற்றுவது கூடாது என தடை செய்வதுடன், அவ்வாறு பின்பற்றுபவர்களுக்கு நரகினைக் கொண்டும் எச்சரிக்கை செய்கின்றது.

எனவே, மத்ஹபு அறிஞர்களின் மனிதக் கருத்துக்களை விடுத்து, அவர்கள் தமது கருத்துக்கு ஆதாரமாக முன்வைத்த அருள்மறைக் குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள் என்பற்றை பரிசீலனைக்கு உட்படுத்துவோம்.

தவறான வாதம்:

‘ஆபரணத்திலும் (சிங்காரிப்பிலும்) வளர்க்கப்பட்டு தன் (சொந்த) விவகாரத்தில் (கூட தன்நிலையை) தெளிவாக எடுத்துக் கூறச் சக்தியற்ற ஒன்றையா (பெண்களையா) அவனுக்கு சந்ததிகள் என்று ஆக்குகிறார்கள்?’ (அல் ஸுஹ்ருப்: 18)

இந்த வசனம் பெண்களின் இயற்கையான சுபாவத்தைத் தெளிவுபடுத்துகின்றது. அவர்கள் சிறுபராயத்திலிருந்தே தங்கம், வெள்ளி, அலங்காரக் கற்களினாலான ஆபரணங்களைக் கொண்டு தம்மை அலங்கரிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.  எனவே, இந்த வசனம் மேற்குறித்த ஆபரணங்களை பெண்கள் அணிவது கூடும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது.

தக்க பதில்:

‘தங்கத்தினாலான எல்லா நகைகளையும் பெண்கள் அணியலாம்!’ என்று கூறக் கூடிய சகோதரர்கள் தமது  வாதத்திற்கு சான்றாக எடுத்து வைத்த அருள்மறை வசனத்தை அடைப்புக்குறிக்குள் இடப்பட்டுள்ள மொழிபெயர்ப்பாளரின் கருத்துக்களை விடுத்து, வல்லோன் அழ்ழாஹ்வின் வார்த்தையை நேரடியாக நோக்குவோம்.

3 

‘ஆபரணத்திலும் வளர்க்கப்பட்டு தன் விவகாரத்தில் தெளிவாக எடுத்துக் கூறச் சக்தியற்ற ஒன்றையா அவனுக்கு சந்ததிகள் என்று ஆக்குகிறார்கள்?’ (அஸ்ஸுக்ருஃப்: 18)

மாற்றுக் கருத்துள்ள சகோதரர்கள் இந்த அல்குர்ஆன் வசனத்தை வைத்துக் கொண்டு பெண்கள் தங்க வளையல் அணியலாம் என்று வாதிட முடியாது. இதனை மாற்றுக் கருத்துக் கொண்ட சகோதரர்கள் ஆதாரமாக முன் வைப்பதே பல அடிப்படைகளில் தவறானதாகும்.

√ குறித்த அல்குர்ஆன் வசனத்தில் வளையல் நகைகளோ அல்லது வளையல் அல்லாத நகைகளோ பற்றி கூறப்படவில்லை. மாறாக, ஆபரணங்கள் என்றே கூறப்படுகின்றது. அது தங்கம் அல்லாத ஆபரணங்களாக, வெள்ளி ஆபரணங்களாகக் கூட இருக்க முடியும்.
√ குறித்த வசனத்தில் ‘ஆபரணங்கள் அணியும் பெண்கள்’ அல்லது ‘பெண்கள்’  என்கின்ற வாசகம் அரபி மூலத்தில் கிடையாது. ஆனால், மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள் தமது மொழிபெயர்ப்பில் பெண் என்று அடைப்புக்குறிக்குள் இட்டு அதன் அடிப்படையிலேயே பெண்கள் ‘ஆபரணங்களைக் கொண்டு தம்மை அலங்கரிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்’ என்று தனது வாதத்தை தொடர்ந்துள்ளார்.  மாறாக,  இவ்விடத்தில் ‘தன் விவாகரத்தை தெளிவாக எடுத்துச் சொல்ல சக்தியற்றவை’ பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு வாதத்திற்காக பெண் என்றே வைத்துக் கொண்டாலும் அது மாற்றுமத பெண்களைக் கூட குறிப்பதற்கு சாத்தியம் இருக்கின்றது.
√ ஒரு வாதத்திற்கு இது முஸ்லிம் பெண்களைத் தான் குறிக்கின்றது என்று வைத்துக் கொண்டாலும் வளையல் அல்லாத நகைகளைக் குறிக்கின்றது என்று விளங்க முடியும்.
√ ஆகுமான ஒரு செயலும் தடைசெய்யப்பட்ட ஒன்றும் இடம்பெற்றால் தடைசெய்யப்பட்டதைத் தான் முதன்மைப் படுத்த வேண்டும். இது ஒரு சட்டக்கலை விதியாகும்.
இதனை அரபியில்              என்று கூறப்படும். இந்த விதியை மறுத்தால் நிறைய ஹதீத்களை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டிய நிலமைக்கு உட்படுவீர்கள்.
√ சமூகத்தில் நடக்கின்ற ஒன்றை உதாரணமாகக் குறிப்பிட்டால் அதை ஆதரிக்கின்றார்கள்; என்று புரிந்து கொள்ளக் கூடாது.

உதாரணமாக, சமூகத்தில் சிலர் விபச்சாரம் செய்கிறார்கள் என்று நாம் கூறினால் நாம் அதனை ஆதரிக்கின்றோம் என்று எவரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,  எனது சமூகம் 73 கூட்டமாகப் பிரியும் என்று கூறியதால் அவ்வாறு பிரிவதை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கீகரித்திருக்கின்றார்கள் என்று எவராவது புரிந்து கொண்டால் அவரை விவரமற்றவர் என்றே கூறுவோம். அதே போன்று அன்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அந்நிய பெண்களை காபிர்கள் கடவுளாக்கிய போது அதனை கண்டிக்கின்ற தொனியில் இறைவன் இவ்வசனத்தை இறக்கியிருக்கலாம். முந்திய வசனங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றது.

இதனை  எனக் கூறப்படும். பல விளக்கங்களுக்கும் சாத்தியமாகவுள்ள இவ்வசனத்தினை வளையல் நகை அணிவதை ஆதரிக்கின்றது என்று விளங்குவது அறிவுப்பூர்வமானதன்று.

√ அழ்ழாஹ் அல்குர்ஆனில் பொதுவாக குறிப்பிட்ட ஒன்றை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பொன்மொழியில் தெளிவுபடுத்துவார்கள். இதற்கு என்று சொல்லப்படும். இந்த நடைமுறையை அல்குர்ஆனில் அதிகமான இடங்களில் காணமுடியும். இந்த சட்டக்கலை விதியை மாற்றுக் கருத்திலுள்ள சகோதரர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றே நம்புகின்றோம். இந்த நடைமுறையின் பிரகாரம் இறைவன் பொதுவாகக் குறிப்பிட்ட ஆபரணங்கள் என்பதிலிருந்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்திய தங்க வளையல்கள் விதிவிலக்குப் பெறுகின்றது என்று விளங்க முடியும்.

ஆகவே, இவ்வசனத்தினை ஆதாரமாக முன் வைத்தால் பல கேள்விகளுக்கு பதில் இல்லாமல் போகிறது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

தவறான வாதம்:

‘நபியவர்கள் கூறினார்கள். எனது சமூகத்தில் ஆண்கள் பட்டாடையும், தங்கமும் அணிவது ஹராமானதாகும். பெண்களுக்கு ஹலாலானதாகும்.’ (அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரி (ரழி), நூல்: திர்மிதி)

ஆயினும் இந்த ஹதீஸின் தரம் பற்றி அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இமாம் அஹ்மது (ரஹ்) அவர்கள் கூறும் போது, ‘இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் வரக்கூடிய  ‘மைமூன் அல்கன்னாத்’ என்பவர் அறிமுகமானவரில்லை’ என்கிறார். இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் ‘மைமூன் அல்கன்னாத், ஸயீத் இப்னு முஸையிப்’ மற்றும் அபூகிலாபா ஆகியோரைத் தொட்டும் அறிவித்தால் அது முர்ஸலைச் சார்ந்ததாகும்’ என்கிறார். ராஸி அவர்கள் கூறும் போது ‘அபூகிலாபா, முஆவியாச் சந்தித்ததேயில்லை’ என்கிறார்.

ஆயினும் சில அறிஞர்கள் இந்த ஹதீஸின் கருத்தையொட்டி பல ஹதீஸ்கள் வந்துள்ளதால் அதனைக் கருத்திற் கொண்டு இச்செய்தியை ஸஹீஹ் எனும் தரத்தில் உள்ளடக்குகின்றார்கள். அவர்களில் அஷ்ஷேஹ் அல்பானி (ரஹ்) அவர்களும் ஒருவராகும் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பிலால் (ரழி) மற்றும் இப்னு அப்பாஸ் (ரழி) ஆகியோர் அறிவிக்கின்றார்கள். ‘நிச்சயமாக நபியவர்களின் காலத்தில் பெண்கள் மோதிரம், மெட்டி, மாலை போன்றவற்றை அணியக் கூடியவர்களாக இருந்தார்கள்.’ (ஜாமிஉல் உஸுல் 04:179)

‘ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். ‘(ஒரு முறை) நஜ்ஜாஸி மன்னனிடமிருந்து ஆபரணங்கள் நபியவர்களுக்கு அன்பளிப்புப் பொருட்களாக் கிடைத்தன. அவற்றிலே ஹபஷா நாட்டு முத்திரை குத்தப்பட்ட ஒரு தங்க மோதிரமும்  நபியவர்கள் அதனை ஒரு குச்சியின் மூலம்- வேறு ஓர் அறிவிப்பில்- தமது விரல்களால் எடுத்தார்கள். பின்னர் தனது மகளான ஸைனப் (ரழி) அவர்களின் மகள் உமாமா பிந்து அபுல் ஆஸ் (ரழி) அவர்களை அழைத்து அதனை அணிந்து கொள்ளுமாறு கொடுத்தார்கள்.’ (அபூதாவுத் 04:92)

‘நான் ஆயிஷா (ரழி) அவர்களை தங்க மோதிரங்களுடன் பார்த்திருக்கின்றேன்.’
(பார்க்க: புஹாரி07:54)

‘இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தனது நூலான பத்ஹுல் பாரியில், இப்னு ஸஅத் அவர்கள் அம்ரு இப்னு அபூஅம்ரைத் தொட்டும் வரும் அறிவிப்பிலே கூறும்பொழுது ‘நான் காஸிம் இப்னு முஹம்மதிடத்தில் இதைப் பற்றிக் கேட்ட போது, அவர் அழ்ழாஹ் மீது சத்தியமாக! ஆயிஷா (ரழி) அவர்களை (குங்குமமிடப்பட்ட) மஞ்சள் ஆடையையும், தங்க மோதிரங்களையும் அணியக் கண்டிருக்கின்றேன்’ என்று கூறினார்கள்.’

‘பாத்திமா (ரழி) அவர்கள் தங்கத்தினாலான ஒரு மாலையை தனது கழுத்திலிருந்து கழட்டி இதனை அபுல் ஹஸன் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார் எனக் கூறினார்கள்.’ என ஸப்வான் (ரழி) அவர்கள் கூறினார்கள்’ (நஸாயி-5140, அஹ்மத்21892)

மேற்கூறப்பட்ட செய்திகள் பெண்கள் தங்கத்தினாலான ஆபரணங்களை அணிய முடியும் என்பதை வலுப்படுத்துகின்றன.

தக்க பதில்:

‘எனது சமூகத்தில் ஆண்களுக்கு பட்டும் தங்கமும் அணிவது ஹராமாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அவ்விரண்டும் ஆகுமாக்கப்பட்டுள்ளது என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.’ (அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரி (ரழி), நூல்: திர்மிதி-1687)

மேற்குறித்த நபிமொழி ‘ஸஹீஹ் லிஹைரிஹி’ எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும். மாறாக, அண்மைக்காலத்தில் சில சகோதரர்கள் செய்வது போன்று, தமது மாற்றுக் கருத்திலுள்ள சகோதரர்கள் ஆதாரமாக முன்வைத்துள்ளார்கள் என்பதற்காக பலவீனப்படுத்துகின்ற நடைமுறை எம்மிடம் கிடையாது என்பதையும் சகோதரர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

‘நான் ஆயிஷா (ரழி) அவர்களை தங்க மோதிரங்களுடன் பார்த்திருக்கின்றேன்.’ (பார்க்க: புஹாரி 07:54)

என்பதை ஆதாரமாக முன்வைத்துள்ளார்கள். மதிப்பிற்குரிய சகோதரர் அவர்களே! நான் எனது ஆய்வின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று அருள்மறைக்குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளுமே சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின் சட்ட மூலாதாரமாகும். நபித்தோழர்களைப் பொறுத்த வரையில் இஸ்லாத்திற்காக அளப்பரிய தியாகம் செய்தவர்கள். அந்த உத்தமர்களைப் பற்றி அழ்ழாஹ் தனது திருமறையில் குறிப்பிடும் போது,  ‘அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அழ்ழாஹ்வைப் பொருந்திக் கொண்டனர்’ (அல்குர்ஆன்-58:22)

அதே வேளை மனிதர்களில் சிறந்தவர்கள் என்பதற்காக அவர்களின் சுய கருத்துக்கள், செயற்பாடுகள் ஒரு போதும் மார்க்க ஆதாரமாகாது. மாறாக, வஹியை மாத்திரமே நாம் பின்பற்ற வேண்டும். இதனையே  அருள்மறைக் குர்ஆன், ‘அழ்ழாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் ‘எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்’ என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?’ (அல்குர்ஆன்-02:170) என்று குறிப்பிடுகின்றது.

மனிதர்கள் என்கின்ற அடிப்படையில் நபித்தோழர்களுக்கும் பல்வேறு செய்திகள் தெரியாதிருந்துள்ளன. உதாரணமாக, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹா தொழுதுள்ளதாக பல்வேறு நபித்தோழர்கள் அறிவித்திருந்தும் நபிகளார் (ஸல்) அவர்கள் லுஹா தொழுததேயில்லை என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருமை மனைவி அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (பார்க்க: ஸஹீஹுல் புஹாரி-1177)

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹா தொழுததை அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறியாதிருந்திருககின்றார்கள்.  எனவே, வஹி அருளப்பெறாத மனிதர்கள் என்கின்ற அடிப்படையில் நபித்தோழர்களின் சுய கருத்துக்கள், செயற்பாடுகள் ஒரு போதும் மார்க்க ஆதாரமாக முடியாது.

‘பிலால் (ரழி) மற்றும் இப்னு அப்பாஸ் (ரழி) ஆகியோர் அறிவிக்கின்றார்கள். நிச்சயமாக நபியவர்களின் காலத்தில் பெண்கள் மோதிரம், மெட்டி, மாலை போன்றவற்றை அணியக் கூடியவர்களாக இருந்தார்கள்.’ (ஜாமிஉல் உஸுல் 04:179)

குறித்த செய்தி ஸஹீஹுல் புஹாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிமில் தெளிவாக இடம் பெற்றுள்ளது.

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் (மட்டுமே) தொழுதார்கள். அதற்கு முன்பும் (எதையும் கூடுதலாகத்) தொழவில்லை, அதற்குப் பின்பும் (எதையும் கூடுதலாகத்) தொழவில்லை. (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு தம்முடன் பிலால் (ரலி) அவர்கள் இருக்க பெண்கள் பகுதிக்கு வந்து (உபதேசம் புரிந்தார்கள். அப்போது) தர்மம் செய்யுமாறு அவர்களைப் பணித்தார்கள். உடனே பெண்கள் (தம்மிடம் இருந்ததை பிலால் அவர்களின் (கரத்திலிருந்த துணியில்) இடலாயினர். சில பெண்கள் தம் காதணிகளையும், தம் (கழுத்தில் அணிந்திருந்த) நறுமண மாலைகளையும் இட்டனர்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-964, ஸஹீஹ் முஸ்லிம்-1616)

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாளன்று இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)தார்கள். அதற்கு முன்பும், பின்பும் எதையும் தொழவில்லை. பிறகு பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்கு வந்தார்கள். பெண்களுக்கு உபதேசித்துவிட்டு, தர்மம் செய்யுமாறும் கட்டளையிட்டார்கள். உடனே, பெண்கள் தங்கள் காது வளையங்களையும் கை வளையல்களையும் (தர்மமாக) வழங்கலானார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி- 1431)

√ சகோதரர் அவர்களின் கருத்தை சரிகாணக்கூடிய சகோதரர்கள்; குறிப்பிட்டுள்ள நபிமொழியில் ‘தங்க வளையல்’ என்று இடம் பெற்றுள்ளதா என்பதனை பரிசீலிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

√ அடுத்து, ஒரு வாதத்திற்காக தங்கம் என்றுதான் வைத்துக் கொண்டாலும் பெண்களுக்கு ‘பொதுவாக ஆகும்’ என்ற காலப்பகுதியில் நடைபெற்ற சம்பவம் என்றும்,  ‘வளையல்தங்கம் அணியக் கூடாது’ என்ற சட்டம் அதன் பின் வந்தது என்றும் புரிந்து கொண்டால் எவ்வித முரண்பாடும் ஏற்பட மாட்டாது. இவ்வாறான அடிப்படையில், வணக்கம் இல்லாத அம்சங்கள் பொதுவாக ஆகும் என்ற தரத்திலேயே இருக்கும் இந்த விதியை அரபியில்  என்று சொல்லப்படும். எனவே, பெண்களுக்கு தங்க நகை அணிவது ஆகும் என்று ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் ‘வளையல் தங்கம் மட்டும்’ அணியக் கூடாது என்று பின்னர்  தடை செய்யப்பட்டது. தங்க நகைகள் தொடர்பான அறிப்புக்களை இவ்வாறு புரிந்து கொண்டால் எவ்வித முரண்பாடும் தோன்றமாட்டாது.

அடுத்து,          ‘ஹதீத் திறனாய்வுக்கலை’யோடு சம்பந்ப்பட்ட            ‘நாஸிஹ், மன்ஸுஹ்’   ‘மாற்றியது, மாற்றப்பட்டது’ சம்பந்தமாக உங்களது ஆய்வில் கூறியுள்ளீர்கள். பெண்கள் தங்க வளையல் அணிவது கூடும் என்று கூறக்கூடிய சகோதரர்கள் தங்க வளையல் அணிவதைத் தடை செய்து வருகின்ற செய்திகளை, தங்க வளையல் ஆகும் என்று வந்துள்ள செய்திகள் மாற்றிவிட்டது என வாதிடுகின்றனர்.  இது தொடர்பாக ஏலவே, விளக்கமளித்துள்ளேன்.

மேலும், ஒரு ஹதீஸ் மாற்றப்பட்டது எனக் கூறுவதாக இருந்தால் அதற்கு பல நிபந்தனைகளை இக்கலையோடு சம்பந்தப்பட்ட இமாம்கள் கூறியுள்ளனர். அதில் மிக முக்கியமான நிபந்தனைகள் இரண்டு.

1. ‘நாஸிஹ்’ – மாற்றக் கூடிய செய்தி, ‘மன்ஸுஹ்’ – மாற்றப்பட்ட செய்திக்கு பின் இடம்பெற    வேண்டும்.

2. முரண்பட்ட ஆதாரபூர்வமான இரண்டு செய்திகள் இடம்பெறும் போது முரண்பாடில்லாமல் இரண்டையும் சேர்த்து விளங்குவதற்கு இடம்பாடு இல்லாமல் இருக்க வேண்டும்.

பெண்கள் வளையத்தினாலான தங்க நகைகள் அணிவது கூடாது என்று இடம் பெறக் கூடிய  செய்திகளை மாற்;றப்பட்டது என்று கூறக் கூடிய சகோதரர்கள் இவ்விரண்டு நிபந்தனைகளையும் மீறியுள்ளனர். மன்ஸுஹ் என்பதற்கு வளைந்த தங்கம் ஆகும் என்ற செய்திகள் பிந்தித்தான் சொல்லப்பட்டது என்பதை உறுதி செய்யக் கூடிய எந்தவொரு ஆதாரத்தையும் மாற்றுக் கருத்திலுள்ள அன்புச் சகோதரர்கள் முன்வைக்கவில்லை.

அடுத்து, முரண்பட்ட ஆதாரபூர்வமான இரு செய்திகளையும்  இணைத்து முடிவெடுப்பதற்கு வாய்ப்பிருந்தும் அவ்வாறு செய்யவில்லை என்பதையும் உங்களது கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

எவ்வாறு இணைத்து விளங்கலாம்?

மேற்குறித்த செய்திகளில் ஒன்றை விட்டு, ஒன்றை எடுக்காமல் மொத்தமாக இணைத்து ‘ஜம்உ’ செய்து விளங்குவதன் மூலம், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அனைத்து செய்திகளையும் இலகுவாக அமுல்படுத்த முடியும். ‘ஆகும்’ என்று தரத்தில் கூறப்பட்ட செய்திகள் அனைத்தும் பொதுவானவை   என்றும் ‘ஆகாது’ என்ற தரத்தில் கூறப்பட்டசெய்திகள் வரையறைசெய்யபட்டவை   என்றும் இணைத்து விளங்குவதன் மூலம் எல்லா செய்திகளையும் அமுல்படுத்த முடியும். வளையல், மாலை, காப்பு, மோதிரம் போன்ற வரையறை செய்யப்பட்ட வளையல் நகைகள் ‘கூடாது’ என்றும் என்ற ஏனைய, தங்கத்திலான நகைகள் கூடும் என்றும் விளங்கிக் கொண்டால் எந்த  முரண்பாடும் கிடையாது. மாற்றப்பட்டது என்று கூறவும் முடியாது.

√ அடுத்து,    சட்டக்கலையில்   என்றறொரு விதி உண்டு.   என்றால் பொதுவானது.    என்றால் வரையறையுடன் குறிப்பாக்கப்பட்டது. இந்த விதியை அடிப்படையாகக் கொண்டே பல நபிமொழிகளை விளங்குகின்றோம். பொதுவாக ஆகுமாக்கப்பட்டு விட்ட ஒன்றை, குறிப்பாக்கப்பட்ட வரையறையுடன் தடைசெய்தால் அந்த வரையறையை உட்பொதிந்த காரியம் மாத்திரம்தான் உள்ளடங்கும் என்பதனை சட்டக்கலையும்,  எமது அறிவும் ஏற்றுக் கொள்கிறது.

உதாரணமாக,  நாம் ஒருவரைப் பார்த்து ‘நீங்கள் பாடசாலைக்கு செல்லுங்கள்’ என்று கூறுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். பின்னர், சிறிது காலத்தின் பின் அவரைப் பார்த்து, ‘நீங்கள் அழுக்காக இருந்தால் பாடசாலைக்கு செல்லாதீர்கள்’  எனக் கூறினால் ‘அழுக்காக இருக்கும் நிலையில்’ மாத்திரம் பாடசாலைக்கு செல்ல வேண்டாம் என்றே அவரும் புரிந்து கொள்வார். அதே போன்றுதான் தங்கம் பெண்களுக்கு ஆகுமாக்கப்பட்டது என்ற பொதுவான நிலைக்குப் பின்னால் வளையல் தங்கம் பிரேத்தியேகமாக தடை செய்யப்படுகின்றது.

√ ஆனால், மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள், ‘வளையல்களை அணியத் தடைசெய்கின்ற ஹதீஸ்கள் அணிய அனுமதிக்கின்ற ஹதீஸ்களால்  மாற்றப்பட்டுவிட்டன’ என வாதிடுகின்றார்கள்.

அதாவது,; சகோதரர் அவர்கள் தங்க வளையல் அணிவதைத் தடைசெய்யும் செய்தி ஆரம்பத்தில் வந்ததென்றும்,  தங்கம் ஆகுமாக்கப்பட்டது என்று வந்துள்ள செய்தி பின்னர் வந்தது என்றும் கூறுகின்றார்.

இவ்வாறு விளங்குவது அது தவறான விளக்கமாகும். ஏனெனில், வரையறையுடன் உள்ளது ஆரம்பத்தில் வருவதும் பொதுப்படையானது பின்னால் வருவதும் சட்டக் கலைக்கு முரணானதும்,  அறிவுக்கு ஒவ்வாததும் ஆகும். நாம் மேற்கூறிய அதே உதாரணத்தினை எடுத்துக் கொள்வோம்.

‘நீங்கள் அழுக்காக இருந்தால் பாடசாலைக்குச் செல்லாதீர்கள்!’ என்பதனை ஆரம்பத்தில் கூறியது என்றும், ‘நீங்கள் பாடசாலைக்கு செல்லுங்கள்’ என்பது பின்னர் கூறியது என்றும்  ஒருவர் விளங்குகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

ஆரம்பத்தில் கூறியதை எடுக்க முடியாது என்று விளங்கிக் கொண்டு ‘அழுக்காக இருந்தாலும் பாடசாலைக்கு செல்ல முடியும்’ என்று விளங்க முடியுமா? அவ்வாறு விளங்கினால் ‘நீங்கள் அழுக்காக இருந்தால் பாடசாலைக்கு செல்லாதீர்கள்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போகின்றதல்லவா?  இதற்கு மதிப்பிற்குரிய சகோதரர் அவர்களை அல்லது அவரது நிலைப்பாட்டை ஆதரிக்க கூடிய சகோதரர்களை விளக்கம் சொல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

√ அடுத்து,  பொதுவாக ஒரு தடை வருமென்றால் அதற்கு முன்பு அது ஆகுமாக்கப்பட்ட ஒரு நிலை இருந்திருக்கும். இது இரு முரண்பட்ட செய்திகளுக்கு மாத்திரமே என்பதனை இவ்விடத்தில் புரிந்து கொள்ள வேண்டும். ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சில நபித்தோழர்கள் நின்று கொண்டு நீர் அருந்தியுள்ளார்கள்.

ஏன் நபியவர்களே நின்று கொண்டு நீர் அருந்தியுள்ளார்கள். பின்னர் அதனை தடைசெய்கிறார்கள்.’ இதனைப் பார்க்கும் ஒருவர் ‘தடை’ தான் முந்தியது என்றும் ‘ஆகும்’ என்பது பிந்தியது என்றும் வாதிட்டால் அவரை நாம் என்னவென்று கூறுவோம்? முரண்பட்ட செய்திகளில் ஆகும் என்ற நிலைக்குப் பின்னர்தான் தடை வரும் என்பதனை அவருக்கு விளக்குவோம். அதே போன்றுதான் பெண்களுக்கு தங்கம் ஆகுமாக்கப்பட்டது என்ற ஆகுமான நிலைக்குப் பின்னர் அதில் ஒரு பகுதியான வளையல் நகை அணிவது தடுக்கப்படுகின்றது என்று நாம் ஹதீதினை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு வாதத்திற்கு நீங்கள் முன் வைத்த ஆதாரங்களின் அடிப்படையிலும், தடையும் அனுமதியும் வந்தால் தடையைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற சட்டக்கலை விதி தொடர்பாக மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள் அல்லது சகோதரரின் நிலைப்பாட்டினை ஆதரிக்க கூடிய சகோதரர்கள் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். அவ்விதியினை சகோதரர்கள்; மறுக்கும் பட்சத்தில் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டி வரும் என்பதனையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

அடுத்து, மிக முக்கியமானதொரு விடயத்தை மதிப்பிற்குரிய சகோதரர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். வளைந்த தங்க நகை அணிவது தொடர்பாக ஏலவே, ஒரு நிலைப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டு நபிமொழிகளை அணுகியதன் விளைவாக, ஹதீஸ்களில் திரித்தல், கூட்டல், குறைத்தல் செய்ய வேண்டிய நிலைக்கு அது உங்களை இட்டுச் சென்றுள்ளது. மிகத் தெளிவாக வளைந்த தங்கம் அணிவதைத் தடைசெய்து இடம் பெற்றுள்ள நபிமொழியை வளைந்த தங்கம் அணியலாம் என்பதற்கு ஆதாரமாக முன்வைத்துள்ளீர்கள்.

அன்புச் சகோதரர் அவர்கள் முன்வைத்த நபிமொழியில் உள்ள சில வார்த்தைகள்:

‘பாத்திமா (ரழி) அவர்கள் தங்கத்தினாலான ஒரு மாலையை தனது கழுத்திலிருந்து கழட்டி இதனை அபுல் ஹஸன் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார் எனக் கூறினார்கள்.’ என ஸப்வான் (ரழி) அவர்கள் கூறினார்கள்’ (நஸாயி-5140, அஹ்மத்21892)

குறித்த நபிமொழியின் முழுமையான வாசகங்கள்:

‘ஹுபைறா என்பவரின் மகள் (ஹிந்த்) அழ்ழாஹ்வின் தூதரிடத்தில் தங்க மோதிரம் அணிந்தவளாக வந்தாள். அப்பெண்னின் கையை அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் தட்டிவிட்டார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இச்செயலை அப்பெண் பாத்திமா (ரழி) அவர்களிடத்தில் முறைப்பட்டாள். உடனே, பாத்திமா (ரழி) அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழற்றி ‘இதனை ஹஸனின் தந்தை (அலி ரழி)  அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள்’ எனக் கூறினார்.

பாத்திமா (ரழி) அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா! எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள். உடனே பாத்திமா (ரழி) அவர்கள் அம்மாலையைக் கழற்றி கடையில் விற்று வருமாறு ஆளப்பினார்கள். மாலை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கி உரிமையிட்டார்கள்.

பாத்திமாவின் இச்செயல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த போது ‘நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அந்த அழ்ழாஹ்வுக்கே புகழ் அனைத்தும்’ எனக் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: தவ்பான்(ரலி), நூல்:ஸுனனுன் நஸாயீ-5140)

அன்புச் சகோதரர் அவர்களே! மாற்றுக் கருத்திலுள்ளவர்கள் ஆதாரமாக முன்வைக்கின்றார்கள் என்கின்ற காரணத்திற்காக நபிமொழியில் இவ்வாறு மோசடி செய்வது நியாயமானதா? மார்க்கத்தை கற்றறிந்த மார்க்க அறிஞர்கள் இவ்வாறு நடந்து கொள்ளலாமா?

இவ்வாறு வேதத்தில் கூட்டல், குறைத்தல், திரித்தல் செய்வதை அழ்ழாஹ் திருமறைக் குர்ஆனில் மிக கடுமையாகக் கண்டிக்கின்றான்.

‘வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. கியாமத் நாளில் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப் படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை. (அல்குர்ஆன்-02:85)

தவறான வாதம்:

இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள எச்சரிக்கையானது, எவர்களெல்லாம் தங்கத்திற்கு ஸகாத் கொடுக்காமல்  இருக்கின்றார்களோ அவர்களையே குறிக்கின்றது. இக்கருத்தைக் கூறக்கூடியவர்கள் ஆபரணங்களுக்கு ஸகாத் கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தக் கூடிய ஹதீஸ்களை ஆதாரமாக முன்வைக்கின்றனர். அவற்றுள் பின்வரும் அம்ருப்னு ஷுஅய்ப் (ரழி) அவர்களின் ஹதீஸ் குறிப்பிடத்தக்கது.

அவர்கள் கூறுகின்றார்கள்.

‘ஒரு பெண்மணி யமன் நாட்டிலிருந்து நபி அவர்களிடத்தில் வந்தார். அவருடன் அவரின் மகளும் இருந்தார். அவரின் மகளின் கையில் தங்கத்தினாலான இரு வளையல்கள் இருந்தன. அப்போது நபியவர்கள் அப்பெண்ணை நோக்கி ‘நீர் இதற்குரிய ஸகாத்தைக் கொடுத்து விட்டீரா?’ என வினவினார்கள். அதற்கவர் ‘இல்லை’ என பதிலளிக்க  நபியவர்கள் ‘அழ்ழாஹ் நெருப்பினாலான ஒரு காப்பை அணிவிப்பது உனக்கு சந்தோஷத்தை அளிக்கின்றதா?’ என வினவினார்கள். அதற்கவர் இரு காப்புக்களையும் கழற்றி நபியவர்களிடத்தில் கொடுத்து விட்டு ‘இந்த இரண்டும் அழ்ழாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உரியதாகும்.’ எனக் கூறினார். (அபூதாவுத் 02:95)

தக்க பதில்:

√ சகோதரர் அவர்கள் எடுத்து வைத்த நபிமொழியில்,  அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கனமான இரு தங்க வளையல்கள் அணிந்திருந்ததை வெறுக்கவில்லை. மாறாக, அவ்விரண்டுக்கும் ஸகாத் கொடுக்காததைத்தான் வெறுத்துள்ளார்கள்.


ஆனால், நாம் எடுத்து வைத்த அபூஹுரைரா (ரழி) அறிவிக்கும் நபிமொழியில் வளையல் நகை அணிவதனையே தடைசெய்துள்ளார்கள். அதில் ஸகாத் கொடுக்கப்பட்டதா? என்றெல்லாம்,  அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்கவில்லை. மேலும்,  தங்க வளையல் நகை அணிவது தடைசெய்யப்பட்டதுதான் என்பதை  அபூஹுரைரா (ரழி) அவர்கள் தமது மகளுக்கு தங்கம் அணியக் கூடாது என்று தடைசெய்தது உறுதிப்படுத்துகின்றது.
4‘
முஹம்மத் இப்னு ஸீரீன் அவர்கள், அபூஹுரைரா (ரழி) அவர்கள் தமது மகளுக்கு பின்வருமாறு கூற தான் கேட்டதாக அறிவிக்கின்றார்கள். ‘நீ தங்கத்தை அணிய வேண்டாம். ஏனெனில் உன் மீது கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பை நான் பயப்படுகின்றேன்.’ (நூல்: முஸன்னப் இப்னு ஷைபா- 19935)

குறித்த செய்தியை இவ்விடத்தில் நான் கூறுவதால் ஸஹாபியின் கூற்றை ஆதாரமாக முன்வைக்கின்றேன் எனத் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது மாறாக, பின்வரும் இரண்டு காரணங்களுக்காக குறித்த செய்தியை இங்கு மேற்கோள் காட்டியுள்ளேன்.

√ அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் அபூதாவுதில் இடம் பெற்றுள்ள செய்தியை, அவர்களே ‘தமது மகளை தங்க நகையை அணிய வேண்டாம்’ எனத் தடுத்த செய்தி, உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
√ குறித்த  செய்தியை அறிவிக்கும் நபித்தோழரே இவ்வாறு நடந்துள்ளதால், ‘ஒரு செய்தியை அறிவித்தவரே அதன் கருத்துக்களை மிகவும் அறிந்தவராக இருப்பார்’ என்பதும் அபூ{ஹரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் அபூதாவுதில் இடம் பெற்றுள்ள செய்தியை உறுதிப்படுத்துகின்றது.
இதற்கு உஸுலுல் ஹதீஸில்  என்று  கூறப்படும்.
√ ஒரு வாதத்திற்கு அன்புச் சகோதரர் அவர்கள் சொல்வது போன்று ஸகாத் கொடுக்கப்படாத தங்க வளையல் நகையதைதான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என வைத்துக் கொண்டாலும் நமது வாதம் வலுவிழந்துபோகாது.

ஏனெனில், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத்தை நிறைவேற்றச் சொன்ன காலம் ‘பெண்கள் பொதுவாக தங்கம் அணியலாம்’ என்ற நிலையில் இருந்த போது என்றும், தங்க வளையல்கள் அணியக் கூடாது என்று தடை செய்ததது அதற்குப் பிற்பட்ட காலம் என்றும் விளங்கினால் எவ்வித வியாக்கியானங்களும் சொல்ல வேண்டிய தேவை ஏற்படாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேலும்,  நபித்தோழர் தவ்பான் (ரழி) அவர்கள் அறிவிக்கும் நஸயீ இல் இடம்பெற்றுள்ள செய்தியும் ‘பொதுவாகவே’ அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்க வளையலை தடை செய்துள்ளார்கள் என்பதை உறுதி செய்கின்றது.
5

ஹுபைறா என்பவரின் மகள் (ஹிந்த்) அழ்ழாஹ்வின் தூதரிடத்தில் தங்க மோதிரம் அணிந்தவளாக வந்தாள். அப்பெண்னின் கையை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தட்டிவிட்டார்கள்.

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இச்செயலை அப்பெண் பாத்திமா (ரழி) அவர்களிடத்தில் முறைப்பட்டாள். உடனே, பாத்திமா (ரழி) அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழட்டி ‘இதனை ஹஸனின் தந்தை (அலி (ரழி) அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள்’ எனக் கூறினார்.

பாத்திமா (ரழி) அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா?  எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள்.

உடனே பாத்திமா (ரழி) அவர்கள் அம்மாலையைக் கழற்றி கடையில் விற்று வருமாறு ஆளப்பினார்கள். மாலை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கி உரிமையிட்டார்கள். பாத்திமாவின் இச்செயல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த போது ‘நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அந்த அழ்ழாஹ்வுக்கே புகழ் அனைத்தும்’ எனக் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: தவ்பான் (ரழி), ஆதாரம்:ஸுனனுன் நஸாயீ-5140)

குறித்த நபிமொழியில் பாத்திமா (ரழி) அவர்கள் தாம் அணிந்திருந்த தங்க மாலையை கழற்றி விற்பதற்காக அனுப்புகின்றார்கள். விற்ற அப்பணத்திற்கு ஒரு அடிமையை விலைக்கு வாங்கி உரிமையிட்டார்கள்.

மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள் கூறுவது போன்று ஸகாத் கொடுக்கப்படாத தங்க வளையல்களைத்தான் நபியவர்கள் தடுத்தார்கள் என்றிருந்தால் பாத்திமா (ரழி) அவர்கள் குறித்த தங்க மாலைக்கு ஸகாத் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், வளையல் விற்ற பணத்திலிருந்து ஸகாத் கொடுக்கவில்லை. மாறாக, அப்பணத்தினால் ஒரு அடிமையையே வாங்கி உரிமையிட்டார்கள். இதனை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அங்கீகரித்துள்ளார்கள்.

எனவே, நீங்கள் முன்வைத்த வாதம் நபித்தோழர் அபூஹுரைரா (ரழி) மற்றும் நபித்தோழர் தவ்பான் (ரழி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழிகள் மூலம் தவறானது என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேலும், காரணம் சொல்லப்படாத ஒன்றுக்கு நாமாகவே ‘காரணம்’  கற்பிப்பதும் இவ்வாறு இருக்கலாம் என கற்பனை பண்ணுவதும்  அறிவுடமையாகாது என்பதை நான் சொல்லிப் புரிய வேண்டுமென்பதில்லை.

தவறான வாதம்:

‘இந்த ஹதீஸில் வரக் கூடிய ‘ஹபீபஹு’ என்கின்ற சொல் ‘தனது நேசத்திற்குரியவர்’ என்ற கருத்தைத் தருகின்றது.  சிறுவர்களும் நேசத்திற்குரியவர்கள் பட்டியலில் அடங்குவர்’

தக்க பதில்:

மேற்படி நபிமொழியில்  எனும் அறபு வார்த்தை ‘நேசிக்கப்படும் ஆண்’ அல்லது சிறுவர்களைத்தான் குறிக்கும் என வாதிடுவது தவறானதாகும். காரணம் எனும் அமைப்பில் அமைந்திருக்கும் பெயர்ச்சொல் மாதிரிகள் ஆண்,பெண் இரு பாலருக்கும் பொதுவாகவே அறபு இலக்கணத்தில் பயன்படுத்தப்படும்.

பொதுவாக ‘ஹபீப்’ என்ற வார்த்தைக்கு நேசத்திற்குரிய ஆண் என்று மாத்திரம் அர்த்தம் இருந்தால் உங்கள் வாதப்படி அது நியாயமானதாகும். ஆனால் அறபு மொழி விதியின் பிரகாரம் இவ்வாறான வார்த்தைகளுக்கு நேசத்திற்குரிய ஆண் என்றும் மொழி பெயர்க்கலாம் நேசத்திற்குரிய பெண் என்றும் மொழி பெயர்க்கலாம் இரண்டு அர்த்தங்களை கொண்டிருக்கும் போது அது நேசத்திற்குரிய பெண் என்பதைத்தான் குறிக்கின்றது என்று நாம் கூறுவதற்கு பிரதானமாக இரண்டு காரணிகளைக் கூற முடியும்

√ அது ஆணைத்தான் குறிக்கின்றது என்றால் ஆண்களுக்கு தங்கம் ஏற்கனவே தடைசெய்யப்பட்டு விட்டது. தடை செய்யப்பட்டு விட்டதன் பின்னால் அழ்ழாஹ்வின் துதர் மீண்டும் அதனைக் கூறினால் அவ்வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுகின்றது.
√ அது பெண்களைத்தான் குறிக்கின்றது என்பதற்கு ஆதாரமாக இன்னுமொரு அறிவிப்பு முஸ்னத் அஹ்மத் என்ற கிரந்தத்தில் வருகின்றது. அந்த அறிவிப்பில் தான் நேசிக்கின்றவளுக்கு என்று இடம் பெற்றுள்ளது.   அந்த அறிவிப்பiயும் சிலர் பலவீனப்படுத்த முயற்சிக்கலாம். அதனால் அது பற்றிய விவரங்களையும் நாம் தருகின்றோம்.

இந்த அறிவிப்பில் இடம்பெறும் அறிவிப்பாளரான ‘அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹிப்னு தீனார்’ என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பற்றிக் கூறப்படும் கருத்துக்களைப் பார்ப்போம்.

இமாம் யஹ்யா பின் மயீன்:  என்னிடத்தில் இவரது ஹதீதில் சற்று பலவீனம் உண்டு
இமாம் இப்னு ஹஜர்:  தவறிழைக்கும் சாதாரன நம்பகத்தன்மை கொண்டவர்
இமாம் அபுஹாதம்: இவரது ஹதீத் எழுதப்படும் அவரை ஆதாரம் பிடிக்கப்பட மாட்டாது
இப்னு அதீ: இவர் அறிவிப்பவற்றில் மறுக்கப்பட வேண்டிய சிலதும் உண்டு. மேலும், இவர் அறிவிப்பவற்றை வழி மொழியும் துணை ஆதாரமும் கிடையாது ஆக மொத்தத்தில் இவரது ஹதீத் எழுதப்படும்.
இவை அனைத்தும் இவர் பற்றி கூறப்பட்ட சில குற்றச்சாட்டுக்கள்
இவர் பற்றி கூறப்பட்ட நல்ல கருத்துக்கள்:
இமாம் பகவீ: இவர் ஹதீதில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு தகுதியானவர்
இமாம் அலீ பின் மத்யனீ: இவர் சாதாரன நம்பகத்தன்மை கொண்டவர்
இமாம் ஹர்பீ: ஏனையோர் இவரை விட அதிக நம்பகத்தன்மை வாய்ந்தவர்கள்

மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள விமர்சனங்களையும் நியாயங்களையும் நோக்கும் போது இந்த அறிவிப்பாளருடைய குறை ஹதீதினை பலவீனப்படுத்துமளவிற்கு கிடையாது இவரை விட ஏனையோர் அதிக நம்பகத்தன்மை வாய்ந்தவர் என்று இமாம் ஹர்பீ கூறிய கூற்றிலிருந்தே இவர் சாதாரன நம்பகத்தன்மை கொண்டவர் என்பது தெளிவாக விளங்குகின்றது.

தவறான வாதம்:

இது போன்ற ஹதீஸ்கள் மக்கள் தங்கத்தைச் சேகரிக்கும் விடயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக கூறப்பட்டிருக்கலாம். ஏனெனில், இது விடயத்தில் மக்கள் அதிக ஈடுபாட்டைக் காட்டுவது அவர்களைச் செல்வங்களைச் சேகரிப்பதன்பால் திசைதிருப்பிவிடும். இதனால் சில சமயங்களில் ஸகாத் கடமையானதையும் பொருட்படுத்தாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுவிடும்.

தக்க பதில்:

மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள் முன்வைத்துள்ள வாதம் தவறான வாதமாகும் ஏனெனில்,வெள்ளியைப் பற்றி அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில்,

‘வெள்ளியை உங்களுக்கு நான் ஏவுகின்றேன். அவற்றை தாராளமாகப் பயன்படுத்துங்கள்! என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபிமொழியின் சுருக்கம்) (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூற்கள்: முஸ்னத் அஹ்மத், ஸுனன் அபீதாவுத்-4236)

மதிப்பிற்குரிய சகோதரர்கள் கூறுவதைப் போன்று தங்கத்தை சேகரிக்கும் விடயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றால் வெள்ளியைச் சேகரிக்கும் விடயத்தில் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லா?
அருள்மறைக் குர்ஆன் குறிப்பிடுகையில், ‘அழ்ழாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும்,வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு என்று எச்சரிப்பீராக!’ (அல்குர்ஆன்-09:34) எனக் கூறுகின்றது. எனவே, சகோதரர் அவர்களின் வாதம் தவறான வாதமாகும்.

தவறான வாதம்:

நபி அவர்களின் காலத்தைத் தொடர்ந்து இன்று வரைக்கும் பெண்களால் இவ்வகை நகைகள் அணியப்பட்டே வருகின்றன.

தக்க பதில்:

நபி அவர்களின் காலம் தொடக்கம் இன்று வரைக்கும் பெண்களால் இவ்வகை நகைகள் அணியப்பட்டு வருகின்றது என்கின்ற வாதம் அடிப்படையில் தவறானதாகும். மாறாக, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலம் தொடக்கம் இன்று வரை தங்க வளையல் ஹராம் என்கின்ற நிலைப்பாட்டில் பல முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். என்பதனை அன்புச் சகோதரர் அவர்களின் கவனத்திற்க கொண்டு வருகின்றேன்.

இது தவிர எவராவது பெண்கள் அனைத்து வகையான தங்க ஆபரணங்களையும் அணியலாம் என இஜ்மா உள்ளதாக வாதிடுவார்களாயின்  இவர்கள் இது தொடர்பாக முதலாவது ஒரு அடிப்படையான விடயத்தினைப் புரிந்து கொள்ள வேண்டும். சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின் சட்ட மூலாதாரம் அருள்மறைக்குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரமே. இதனை எமது ஆய்வின் ஆரம்பத்தில் விபரமாகவே நோக்கினோம்.

ஒரு வாதத்திற்காக இஜ்மா என்பது ஒரு சட்டம் மூலாதாரம்  என வைத்துக் கொண்டாலும் ஒரு ஸஹீஹான ஹதீஸுக்கு முரணாக எவ்வாறு இஜ்மா அமைய  முடியும் என்பதை நாம் கவனத்திற் கொள்ளவேண்டும். இது தொடர்பான மேலதிக சட்டக் கலைவிதிகளைப் பார்வையிட பின்வரும் நூற்களைப் பார்வையிடவும்.

6
இதனைத்தான் இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது, ‘குறித்த ஒரு விடயத்தில், ஒரு ஆதாரபூர்வமான நபிமொழிக்கு முரணாக இஜ்மா வந்துள்ளது என்று எவனாவது வாதிடுவானாயின் அவன் பொய்யன் ஆவான்’ எனக் குறிப்பிடுகின்றார்கள்.’
7
அத்துடன் பெண்களுக்கு எல்லாவகையான தங்கமும் ஹாலால் இல்லை என்ற கருத்தை வரலாறு நெடுகிலும் பல அறிஞர்கள் கொண்டிருந்துள்ளனர். உதாரணமாக நபித்தோழர் அபூஹுரைரா (ரழி) அவர்கள் உட்பட  இமாம் ஷவ்கானி, ஷாஹ் வலிய்யுல்லா திஹ்லவி, நாஸிருத்தீன் அல்பானி,  சித்தீக் ஹஸன்கான், இப்றாஹீம் ஷைபானி போன்ற அறிஞர்களைக் குறிப்பிடலாம்.

இறுதியாக அழ்ழாஹ்வும், அவனது தூதரும் தங்க வளையல் ஹராம் எனத் தீர்மானித்ததன் பின்னர் நம்பிக்கை கொண்டோரின் கூற்று எவ்வாறு அமையவேண்டும் என பின்வரும் அருள்மறை வசனம்தெளிவுபடுத்துகின்றது.

‘அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அழ்ழாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ‘செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்’ என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.’ (அல்குர்ஆன்-24:51)
குறிப்பு: தங்க வளையல் அணிவது ஹராம் என்கின்ற நிலைப்பாட்டில் மாற்றுக் கருத்துள்ள, சந்தேகம்  உள்ள சகோதரர்கள் தங்களது கருத்துக்களை தாராளமாக எழுதுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். குறித்த விடயம் தொடர்பாக இறையச்சத்தை மாத்திரம் முன்னிறுத்தி அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்டையில் மேற்கொள்ளப்பட்ட தெளிவான ஆய்வு எம்மிடம் உள்ளதால்  இன்ஷா அழ்ழாஹ் பதிலளிக்கப்படும்.

தவ்ஹீத் பிரச்சாரத்தில் தனிப்பெருந் தலைவர்…

தொடர்-2
முஹம்மட் அர்ஷாத் அல்அதரி

கடந்த தொடரில் தனிப்பெருந்தலைவர் இப்றாஹீம் (அலை) அவர்கள் மேற்கொண்ட தவ்ஹீத் பிரச்சாரம் தொடர்பாகவும் அதனால் அன்னாரும், அன்னாரின் குடும்பத்தினரும் அடைந்த சோதனைகள் குறித்து நோக்கினோம். அத்தோடு முடிந்து விடவில்லை சோதனைகள்.மீண்டும் தொடர் கதையாய் தொடர்கின்றது சோதனைகள் ஏகத்துவ ஏந்தல் இப்றாஹீம் (அலை) அவர்களை நோக்கி. மருந்துக்கு கூட மனிதர்கள் இல்லாத பாலைநிலத்தில் அன்பு மனைவியையும் அருமைப் பாலகனையும்  விட்டு  விடுமாறு இறை கட்டளை வருகின்றது. தளர்ந்து விடவில்லை தனிப்பெருந்தலைவர் அவர்கள்.

அருமை மகனின் பசிக்கொடுமை தாங்காது, தண்ணீருக்காக அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் அந்தப் பாலைநிலத்தில் அங்குமிங்கும்  அலைந்து திரிகின்றார்கள். அப்போது அருளாளன் அழ்ழாஹ்வின் உதவியை அருகாமையிலேயே காண்கின்றார்கள்.

“பெண்கள் முதன் முதலாக இடுப்புக் கச்சை அணிந்தது இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயார் ஹாஜர் (அலை) அவர்களின் தரப்பிலிருந்துதான். ஸாரா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மீது ஏற்பட்ட தனது பாதிப்பை நீக்குவதற்காக அவர்கள் ஓர் இடுப்புக் கச்சையை அணிந்து கொண்டார்கள். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள், ஹாஜர் (தம் மகன்) இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் காலக் கட்டத்தில் இருவரையும் கொண்டு வந்து அவர்களை கஅபாவின் மேல்பகுதியில் (இப்போதுள்ள) ‘ஸம்ஸம்’ கிணற்றிற்கு மேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்துவிட்டார்கள். அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்கவில்லை. அங்கு தண்ணீர் கூட கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அங்கே இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே பேரீச்சம்பழம் கொண்ட தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணீர்ப்பை ஒன்றையும் வைத்தார்கள்.

பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் (அவர்களை அங்கேயே விட்டு விட்டு தமது ஷாம் நாட்டிற்கு) திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் பின்தொடர்ந்து வந்து, இப்ராஹீமே! மனிதரோ வேறெந்த பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டு விட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று கேட்டார்கள். இப்படி பல முறை அவர்களிடம் கேட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அவரை திரும்பி பார்க்காமல் நடக்கலானார்கள்.

ஆகவே, அவர்களிடம் ஹாஜர் (அலை) அவர்கள், அழ்ழாஹ் தான் உங்களுக்கு இப்படி கட்டளையிட்டானா? என்று கேட்க, அவர்கள் ஆம் என்று சொன்னார்கள். அதற்கு ஹாஜர் (அலை) அவர்கள், அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான் என்று சொல்லிவிட்டு திரும்பிச் சென்று விட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் (சிறிது தூரம்) நடந்து சென்று மலைக் குன்றின் அருகே, அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்தபோது தம் முகத்தை இறையில்லம் கஅபாவை நோக்கி, பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி இந்த சொற்களால் பிரார்த்தித்தார்கள்.

‘எங்கள் இறைவா! (உன் ஆணைப்படி) நான் என் மக்களில் சிலரை இந்த வேளாண்மையில்லாத பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன் இல்லத்திற்கு அருகில் குடியமர்த்திவிட்டேன். எங்கள் இறைவா! இவர்கள் (இங்கு) தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்) எனவே, இவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும், இவர்களுக்கு உண்பதற்கான பொருள்களை வழங்குவாயாக! இவர்கள் நன்றியுடையவர்களாய் இருப்பார்கள் என்று இறைஞ்சினார்கள். (அல்குர்ஆன் 14-37)

இஸ்மாயீலின் அன்னை, இஸ்மாயீலுக்கு பாலூட்டும் அந்த தண்ணீரிலிருந்து (தாகத்திற்கு நீர்) அருந்தவும் தொடங்கினார்கள். தண்ணீர்ப் பையிலிருந்த தண்ணீர் தீர்ந்துவிட்ட போது அவளும் தாகத்திற்குள்ளானார். அவருடைய மகனும் தாகத்திற்குள்ளானார். தம் மகன் (தாகத்தில்) புரண்டு புரண்டு அழுவதை… அல்லது தரையில் காலை அடித்துக் கொண்டு அழுவதை…. அவர்கள் பார்க்கலானார்கள். அதைப் பார்க்கப் பிடிக்காமல் (சிறிது தூரம்) நடந்தார்கள். பூமியில் தமக்கு மிக அண்மையிலுள்ள மலையாக ஸஃபாவைக் கண்டார்கள். அதன் மீது (ஏறி) நின்று கொண்டு (மனிதர்கள்) யாராவது கண்ணுக்குத் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டபடி பள்ளத்தாக்கை நோக்கி பார்வையைச் செலுத்தினார்கள். எவரையும் அவர்கள் காணவில்லை.

ஆகவே, ஸஃபாவிலிருந்து இறங்கிவிட்டார்கள். இறுதியில் பள்ளத் தாக்கை அவர்கள் அடைந்த போது தம் மேலங்கியின் ஓரத்தை உயர்த்திக் கொண்டு சிரமப்பட்டு ஓடும் ஒரு மனிதனைப் போன்று ஓடிச்சென்று பள்ளத்தாக்கை கடந்தார்கள். பிறகு மர்வா மலைக் குன்றிற்கு வந்து அதன் மீது (ஏறி) நின்று யாராவது தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டார்கள். எவரையும் காணவில்லை. இவ்வாறே ஏழு முறை செய்தார்கள்.

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். இதுதான் (இன்று ஹஜ்ஜில்) மக்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே செய்கின்ற ஸஃயு (தொங்கோட்டம்) ஆகும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். பிறகு அவர்கள் மர்வாவின் மீது ஏறி நின்று கொண்டபோது ஒரு குரலைக் கேட்டார்கள். உடனே, சும்மாயிரு என்று தமக்கே கூறிக்கொண்டார்கள். பிறகு, காதைத் தீட்டிக் கொண்டு கேட்டார்கள். அப்போது (அதே போன்ற குரலைச்) செவியுற்றார்கள். உடனே, (அழ்ழாஹ்வின் அடியாரே!) நீங்கள் சொன்னதை நான் செவியுற்றேன். உங்களிடம் உதவியாளர் எவரேனும் இருந்தால் (என்னிடம் அனுப்பி என்னைக் காப்பாற்றுங்கள்) என்று சொன்னார்கள். அப்போது அங்கே தம் முன் வானவர் ஒருவரை (இப்போதுள்ள) ஸம்ஸம் (கிணற்றின் அருகே கண்டார்கள். அந்த வானவர் தம் குதிகாலால் (மண்ணில்) தோண்டினார். …அல்லது தமது இறக்கையினால் தோண்டினார்; என்று அறிவிப்பாளர் சொல்லியிருக்கலாம்… அதன் விளைவாக தண்ணீர் வெளிப்பட்டது.

உடனே ஹாஜர் (அலை) அவர்கள் அதை ஒரு தடாகம் போல் (கையால்) அமைக்கலானார்கள். அதை தம் கையால் இப்படி (ஓடிவிடாதே! நில் என்று சைகை செய்து) சொன்னார்கள். இந்த தண்ணீரிலிருந்து அள்ளித் தம் தண்ணீர்ப் பையில் போட்டுக்கொள்ளத் தொடங்கினார்கள். அவர்கள் அள்ளியெடுக்க எடுக்க அது பொங்கியபடியே இருந்தது. அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழ்ழாஹ் இஸ்மாயீல் (அலை) அவர்களின் அன்னைக்கு கருணைபுரிவானாக! ஸம்ஸம் நீரை அவர் அப்படியே விட்டுவிட்டிருந்தால்… அல்லது அந்த தண்ணீரிலிருந்து அள்ளியிருக்காவிட்டால்… ஸம்ஸம் நீர் பூமியில் ஓடும் நீர் ஊற்றாக மாறிவிட்டிருக்கும் என்று சொன்னார்கள் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்.

பிறகு, அன்னை ஹாஜர் அவர்கள் (ஸம்ஸம் தண்ணீரை) தாமும் அருந்தி தம் குழந்தைக்கும் ஊட்டினார்கள். அப்போது அந்த வானவர் அவர்களிடம் நீங்கள் (கேட்பாரற்று) வீணாக அழிந்து போய்விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டாம். ஏனெனில், இங்கு இந்தக் குழந்தையும் இவருடைய தந்தையும் சேர்ந்து (புதுப்பித்துக்) கட்டவிருக்கின்ற அழ்ழாஹ்வின் இல்லம் உள்ளது. அழ்ழாஹ் தன்னை சார்ந்தோரைக் கைவிடமாட்டான் என்று சொன்னார். இறையில்லமான கஅபா மேட்டைப் போன்று பூமியிலிருந்து உயர்ந்திருந்தது. வெள்ளங்கள் வந்து அதன் வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் (வழிந்து) சென்றுவிடும். இவ்வாறே அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் (தண்ணீர் குடித்துக்கொண்டும் பாலூட்டிக் கொண்டும்) இருந்தார்கள்.

இந்நிலையில் (யமன் நாட்டைச் சேர்ந்த) ஜுர்ஹும் குலத்தாரின் ஒரு குழுவினர்…. அல்லது ஜுர்ஹும் குலத்தாரில் ஒரு வீட்டார்… அவர்களைக் கடந்து சென்றார்கள். அவர்கள் கதா எனும் கணவாயின் வழியாக முன்னோக்கி வந்து மக்காவின் கீழ்ப்பகுதியில் தங்கினர். அப்போது தண்ணீரின் மீதே வட்டமடித்துப் பறக்கும் (வழக்கமுடைய) ஒருவகைப் பறவையைக் கண்டு, இந்தப் பறவை தண்ணீரின் மீது வட்டமடித்துக் கொண்டிருக்க வேண்டும். நாம் பள்ளத்தாக்கைப் பற்றி முன்பே அறிந்திருக்கின்றோம். அப்போது இதில் தண்ணீர் இருந்ததில்லையே என்று (வியப்புடன்) பேசிக்கொண்டார்கள். பிறகு அவர்கள் ஒரு தூதுவரை அல்லது இரு தூதுவர்களை செய்தி அறிந்து வர அனுப்பினார்கள். அவர்கள் (சென்று பார்த்தபோது) அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டார்கள்.

உடனே அவர்கள் (தம் குலத்தாரிடம்) திரும்பிச் சென்று அங்கே தண்ணீர் இருப்பதைத் தெரிவித்தார்கள். உடனே அக்குலத்தார் இஸ்மாயீலின் அன்னை தன் அருகே இருக்க முன்னே சென்று, நாங்கள் உங்களிடம் தங்கிக் கொள்ள எங்களுக்கு நீஙகள் அனுமதியளிப்பீர்களா என்று கேட்க, அவர்கள் ஆம் (அனுமதியளிக்கிறேன்) ஆனால் தண்ணீரில் உங்களுக்கு உரிமை ஏதும் இருக்காது என்று சொன்னார்கள். அவர்கள் சரி என்று சம்மதித்தனர். (ஜுர்ஹும் குலத்தார் தங்கிக்கொள்ள அனுமதி கேட்ட) அந்த சந்தர்ப்பம் இஸ்மாயீலின் தாயாருக்கு அவர்கள் (தனிமையால் துன்பமடைந்து) மக்களுடன் கலந்து வாழ்வதை விரும்பிக் கொண்டிருந்த வேளையில் வாய்த்தது என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்… என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்.

ஆகவே, அவர்கள் அங்கே தங்கினார்கள். தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லியனுப்ப அவர்களும் (வந்து) அவர்களுடன் தங்கினார்கள். அதன் விளைவாக அக்குலத்தைச் சோர்ந்த பல வீடுகள் மக்காவில் தோன்றிவிட்டன. குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார். ஜுர்ஹும்; குலத்தாரிடம் இருந்து அவர் அரபு மொழியை கற்றுக்கொண்டார். அவர் வாலிபரான போது அவர்களுக்கு பிரியமானவராகவும் அவர்களுக்கு மிக விருப்பமானவராகவும் ஆகிவிட்டார்.
பருவ வயதை அவர் அடைந்த போது அவருக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். இஸ்மாயீலின் தாயார் (ஹாஜர்) இறந்துவிட்டார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்து கொண்ட பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள், தாம் விட்டுச் சென்ற (தம் மனைவி மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துக் கொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை.

ஆகவே, இஸ்மாயீல் (அலை) அவர்களின் மனைவியிடம் இஸ்மாயீலை குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர் எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார். பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர் நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார்.

உடனே இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) ஸலாம். அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல் என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, எவரோ வந்து சென்றிருப்பது போல் உணர்ந்தார்கள். ஆகவே, எவரேனும் உங்களிடம் வந்தார்களா? என்று கேட்டார்கள். அவருடைய மனைவி, ‘ஆம்’ இப்படிப்பட்ட (அடையாளங்கள் கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார். எங்களிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன்.

என்னிடம் உங்கள் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் அவரிடம், நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று சொன்னேன் என்று பதிலளித்தார். அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா என்று கேட்க, அதற்கு அவர் ‘ஆம்’ உங்களுக்கு தன் சார்பாக ஸலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு, உன் நிலைப்படியே மாற்றிவிடு என்று (உங்களிடம் சொல்லச்) சொன்னார் என்று பதிலளித்தார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தைதான். உன்னைவிட்டு பிரிந்து விடும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார்.
ஆகவே, நீ உன் (தாய்) வீட்டாருடன் போய் சேர்ந்து கொள் என்று சொல்லிவிட்டு, உடனே அவரை விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார். பிறகு, இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவன் நாடிய காலம் வரை அவர்களை (ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார். அதன் பிறகு அவர்களிடம் சென்றார். ஆனால், இஸ்மாயீல் (அலை) அவர்களை (இந்த முறையும்) அவர் (அங்கு) காணவில்லை. ஆகவே, இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவர் எங்களுக்காக வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார்.

இப்ராஹீம் (அலை) அவர்கள், நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் (நலம்தானா?) என்று கேட்டார்கள். மேலும், அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார், நாங்கள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமாக அழ்ழாஹ்வைப் புகழ்ந்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள், உங்கள் உணவு எது? என்று கேட்க அவர், இறைச்சி என்று பதிலளித்தார். அவர்கள், உங்கள் பானம் எது? என்று கேட்க தண்ணீர் என்று பதிலளித்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும், தண்ணீரிலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள், அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தானியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள் வளம் தரும்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்திருப்பார்கள். ஆகவே தான் மக்காவைத் தவிர பிற இடங்களில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாக பயன்படுத்தி வருபவர்களுக்கு அவை ஒத்துக்கொள்வதே இல்லை என்று சொன்னார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) ஸலாம் உரை. அவரது (வீட்டு) நிலைப்படியை உறுதிப்படுத்தி வைக்கும்படி சொல் என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்த போது, உங்களிடம் எவரேனும் வந்தார்களா? என்று கேட்க, அவருடைய மனைவி, ‘ஆம்’ எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார் என்று (சொல்லிவிட்டு) அவரை புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் நாங்கள் நலமுடன் இருக்கிறோம் என்று தெரிவித்தேன் என்று பதில் சொன்னார். அவர் உனக்கு அறிவுரை ஏதேனும் சொன்னாரா? என்று இஸ்மாயீல் (அலை) கேட்டார்கள். அதற்கு அவர் ‘ஆம்’ உஙகளுக்கு ஸலாம் உரைக்கிறார். உங்கள் நிலைப்படியை உறுதிப்படுத்திக் கொள்ளும்படி உங்களுக்கு கட்டளையிடுகின்றார் என்று சொன்னார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தை. நீ தான் அந்த நிலைப்படி உன்னை (விவாகரத்து செய்யாமல்) அப்படியே மனைவியாக வைத்துக் கொள்ளும்படி எனக்கு உத்தரவிட்டுள்ளார்; என்று சொன்னார்கள். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் அழ்ழாஹ் நாடிய காலம் வரை அவர்களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்கள்.

அதன் பிறகு, ஒரு நாள் இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஸம்ஸம் கிணற்றின் அருகேயிருக்கும் பெரிய மரத்திற்கு கீழே தனது அம்பு ஒன்றைச் செதுக்கிக் கொண்டிருந்தபோது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டதும் இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர்களை நோக்கி எழுந்து சென்றார்கள். (நெடுநாட்கள் பிரிந்து மீண்டும் சந்திக்கும் போது) தந்தை மகனுடனும், மகன் தந்தையுடனும் எப்படி நடந்துக் கொள்வார்களோ அப்படி நடந்துக் கொண்டார்கள் (பாசத்தோடும் நெகிழ்வோடும் வரவேற்றார்கள்). பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள், இஸ்மாயீலே! அழ்ழாஹ் எனக்கு ஒரு விஷயத்தை (நிறைவேற்றும்படி) உத்தரவிட்டுள்ளான் என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் உங்கள் இறைவன் உங்களுக்கு கட்டளையிட்டதை நிறைவேற்றுங்கள் என்று சொன்னார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்கள், நீ எனக்கு அந்த விஷயத்தை நிறைவேற்றுதற்கு உதவுவாயா? என்று கேட்க இஸ்மாயீல் (அலை) அவர்கள், உங்களுக்கு நான் உதவுகிறேன் என்று பதிலளித்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அப்படியென்றால் நான் இந்த இடத்தில் ஓர் இறையில்லத்தை (புதுப்பித்து) கட்டவேண்டும் என்று எனக்கு அழ்ழாஹ் கட்டளையிட்டுள்ளான் என்று சொல்லிவிட்டு, சுற்றியிருந்த இடங்களை விட உயரமாக இருந்த ஒரு மேட்டைச் சைகையால் காட்டினார்கள். அப்போது இருவரும் இறையில்லம் கஅபாவின் அடித்தளங்களை உயர்த்திக் கட்டினார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களை கொண்டு வந்து கொடுக்கலானார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டலானார்கள். கட்டடம் உயர்ந்து விட்டபோது இஸ்மாயீல் (அலை) அவர்கள் (மகாமு இப்ராஹீம் என்று அழைக்கப்படும்) இந்தக் கல்லைக் கொண்டுவந்து இப்ராஹீம் (அலை) அவர்களுக்காக வைத்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அதன் மீது (ஏறி) நின்று கஅபாவை கட்டலானார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களை எடுத்து தரலானார்கள்.

அப்போது இருவருமே ‘இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக்கொள். நிச்சயம் நீயே நன்கு செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றாய்’ (அல்குர்ஆன் 2-127) என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள். இருவரும் அந்த ஆலயத்தைச் சுற்றிலும் வட்டமிட்டு நடந்தபடி ‘இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக் கொள்வாயாக!) நிச்சயம் நீயே நன்கு செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாவும் இருக்கின்றாய்’ (அல்குர்ஆன் 2-127) என்று பிரார்த்தித்தவாறு (கஅபாவை புதுப்பித்துக் கட்டத்) தொடங்கினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), ஸஹீஹுல் புஹாரி-3364)

சத்தியப் பிரச்சாரத்தில் இம்மியளவும் வளைந்து கொடுக்காத இப்றாஹீம் (அலை) அவர்கள் இரட்சகன் அழ்ழாஹ்விடம் ஒரு பிரார்த்தனை செய்கின்றார்கள்.

“எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!” (அல்குர்ஆன் 14:37)

விளைவு, மனித சஞ்சாரமில்லாத பாலைநிலமாக காட்சியளித்த இடத்தின் வரலாறே மாறுகின்றது.

இப்படியாக இருக்கையில் தொடர்கின்றது அடுத்த கட்டச்சோதனை.
பல்லாண்டு காலம் குழந்தைப் பாக்கியம் இல்லாதிருந்து, ஓரிறையிடம் பன்முறை வேண்டி ஈன்றெடுத்த அருமைச் செல்வனை அறுத்துப் பலியிடுமாறு, அகிலத்தின் இரட்சகனிடமிருந்து  கனவின் மூலம் ஆணை பிறப்பிக்கப்படுகின்றது.

அப்போதும் அசைந்து கொடுக்கவில்லை அருமைத் தூதரவர்கள். நபிமார்களின் கனவில் ஷைத்தான் வரமுடியாது என்பதற்கிணங்க, தனக்கு கனவு மூலம் பிறப்பிக்கப்பட்ட இறைகட்டளையை தனது அருமைச் செல்வன் இஸ்மாயீல் (அலை) அவர்களிடம் கூறுகின்றார்கள். அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்களோ அழகுற பின்வருமாறு பதிலளிக்கின்றார்கள்.

“அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது ”என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு” என்று கேட்டார். ”என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அழ்ழாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” என்று பதிலளித்தார்.” அல்குர்ஆன் 37:102

பின்னர் தந்தையும், தனையனும் இறைகட்டளையை சிரமேற் கொண்டு செய்ய முனைகையில் மீண்டும் வஹி வருகின்றது.

“இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, ”இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்” என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம்.” (அல்குர்ஆன் 37:103-107)

தன்னந்தனி மனிதராய் நின்று பகுத்தறிவுப் பகலவன் இமாம் இப்றாஹீம் (அலை) அவர்கள் சோதனைகள் மலையெனக் குவிந்த போதிலும் சத்தியக் கொள்கையாம் தவ்ஹீதில் சமரசம் செய்யாது வாழ்ந்து இறைதிருப்தியைப் பெற்றதன் விளைவு அகிலங்களின் இரட்சகன் அழ்ழாஹ் அருமைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை நோக்கி, தனிப்பெருந்தலைவர்  இமாம் இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு கட்டளையிடுவதோடு, இமாம் அவர்களை தனது உற்ற நண்பராக்கி கொண்டதாகவும், முழுமனித குலத்திற்கும் அவர்களே தலைவர் என்றும் குறிப்பிடுகின்றான்.

சிலைகளை நிறுத்தி வைத்தும், சமாதியை படுக்கையில் வைத்தும் வணங்கி வழிபடுவதன் மூலம் அழ்ழாஹ்வின் அதிகாரத்தில் பங்காளிகளாக ஆக்குவோருடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதில் இமாம் இப்றாஹீம் (அலை) அவர்களிடம் அழகிய முன்மாதி உள்ளதாக அழ்ழாஹ் குறிப்பிடுகின்றான்.

”உங்களை விட்டும், அழ்ழாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அழ்ழாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. ”உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அழ்ழாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.” அல்குர்ஆன் 60:04

எனவே, ஏகத்துவ ஏந்தல் இப்றாஹீம் (அலை) அவர்களின் வழியில் ‘ஷிர்க்’ எனும் இணைவைத்தலின் சாயல் கூட படாத, தூய ஈமானிய உறுதியுடையவர்களாக வாழ்ந்து மரணிப்பதற்கு அருளாளன் அழ்ழாஹ் நமக்கு அருள்பாலிப்பானாக!

நிரந்தர நரகத்தினைப் பெற்றுத் தரும் தற்கொலை

முஹம்மட் அர்ஷாத் அல் அதரி
arshathalathary@gmail.com

“ யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ, அவர் நரகத்திலும் தமது கழுத்தை நெறித்துக்கொண்டிருப்பார். யார் தம்மைத் தாம் (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்துகொள்கின்றாரோ அவர் நரகத்திலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக்கொண்டிருப்பார் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1365)

இன்றைய பத்திரிகைகள் மற்றும் உள்ள வெகுஜன ஊடகங்களில்…
‘பல்கலைக்கழக மாணவி தீக்குளித்து தற்கொலை’
‘சீதனக் கொடுமையால் இளம் பெண் தற்கொலை’
‘பெற்ற கடனுக்கு வட்டி கட்ட முடியாத விவசாயி தற்கொலை’
போன்ற செய்திகளே அதிகளவில் காணப்படுகின்றன.
இன்பமும், துன்பமும் இணைந்ததுதான் மனித வாழ்க்கை. இவ்வாழ்க்கைப் பயணத்தில் ஒரு சிலரின் வாழ்வு வசந்தம் வீசுகின்ற இன்பப் பூஞ்சோலையாக இருக்கின்றது.

சிலரின் வாழ்வோ சோதனைகளும், வேதனைகளும் நிறைந்த வரண்ட பாலைவனமாகக் காணப்படுகின்றது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் சோதனைகளும், வேதனைகளும் உண்டு. ஏனெனில், துன்பங்களும், துயரங்களும் மனித வாழ்வோடு பிண்ணிப் பிணைந்தது. மாத்திரமன்றி அதுவே இறைவனின் நியதியுமாகும்.

இதனையே அருள்மறைக் குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

“ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!” (அல்குர்ஆன் 2:155)

மேலுள்ள திருமறை வசனம் பயம், பஞ்சம், பசி, பட்டினி, உயிரிழப்புக்கள் மற்றும் சேதங்கள் போன்ற இன்னோரன்ன காரணிகளால் சோதனைகளை எதிர்நோக்கியே ஆகவேண்டும் எனவும், இவ்வாறான துன்பங்களும், துயரங்களும் நிறைந்த நேரத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு சுபசோபனமும் கூறுகின்றது.

இவ்வாறு சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் உள்ளாவோரில் முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர் என்ற பாகுபாடின்றி அனைவரும் சமமாகவே உள்ளனர். விசுவாசங் கொண்ட முஸ்லிம்கள் என்பதற்காக அவர்களை சோதனைகளும், வேதனைகளும் வந்தடையாதிருப்பதில்லை.
இதனைத் திருமறைக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

“நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா?”  (அல்குர்ஆன் 29:02)

இவ்வாறு துன்பங்களும், துயரங்களும், கஷ்டங்களும், கடினங்களும் எம்மை வந்தடைகையில் பலர் நிரந்தர நரகத்தினைப் பெற்றுத் தரக்கூடிய தற்கொலையையே தீர்வாக நினைக்கின்றனர். தனது உயிரினை மாய்த்துக் கொள்வதனால் தனது துன்பங்களுக்கும்,  துயரங்களுக்கும் தீர்வு கிடைத்து விட்டதாக எண்ணுகின்றனர்.

தற்கொலையைத் தீர்வாக நினைக்க கூடியவர்கள், தான் மாத்திரமே உலகில் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக கருதுகின்றனர். உலகில் யாருமே எதிர்நோக்காத பிரச்சினைகள் தனக்கு வந்துவிட்டதாக கருதியே நிரந்தர நரகவாதியாக்கும் தற்கொலைக் கலாசாரத்தினை கையில் எடுக்கின்றனர்.
ஏழைக்கு உண்பதற்கு உணவில்லை என்கின்ற பிரச்சினை என்றால் பணக்காரனுக்கு இருக்கின்ற உணவினை உண்ண முடியாத சூழ்நிலை. ஆக மொத்தத்தில் ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு வடிவங்களில் தினந்தோறும் சோதனைகளையும், வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டேயிருக்கின்றான்.

இதனை அருள்மறை குர்ஆன் குறிப்பிடுகையில், “உங்களையே கொன்று விடாதீர்கள்! அழ்ழாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.” (அல்குர்ஆன் 29:02)  என்று கூறுகின்றது.

உயிரை மாய்த்துக் கொள்வதன் மூலம் நமது கஷ்டங்களும், கடினங்களும் அகன்று விடும் என தற்கொலைக் கலாசாரத்தை கையிலெடுக்கக் கூடியவர்கள் நினைக்கின்றார்கள். ஆனால், மறுமையில் கிடைக்க கூடிய நிரந்தர நரகத்தினை மறந்து விடுகின்றார்கள்.

உலகில் வீர, தீரமாகப் பேசக் கூடிய சிலர் கூட தனது சொந்த வாழ்வு என வருகையில் தன்னுயிரை தானே மாய்த்துக் கொள்ளும் தடுக்கப்பட்ட செயலைச் செய்து விடுகின்றனர். இதற்குச் சிறந்த சான்றாக கொடுங்கோலன் ஹிட்லரின் வாழ்வு அமைந்துள்ளது. பல இலட்ச மனித உயிர்களை காவு கொண்ட கொடுங்கோலன் ஹிட்லர் தானியக் கிடங்கில் தூக்கிட்டு இறந்ததாக வரலாறு நமக்குச் சான்று பகர்கின்றது.

மேலும், அருள்மறைக் குர்ஆனையும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது உன்னதமான வழிகாட்டலினையும் அணுவணுவாகப் பின்பற்றக் கூடியவர்களானாலும் இவ்வுலகில் கஷ்டங்கள், சோதனைகளில் இருந்து விதிவிலக்களிக்கப்படமாட்டார்கள் என்பதனை திருமறைக் குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

“இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்.” (அல்குர்ஆன் 02:124) 

இவ்வாறான நேரங்களில் ஒரு விசுவாசி எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென அல்குர்ஆன் கற்றுத் தருகின்றது.

“நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நன்மையே உள்ளது. அழ்ழாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி கூலி வழங்கப்படும் என்று (இறைவன் கூறுவதைத்) தெரிவிப்பீராக!”  (அல்குர்ஆன் 39:10)

மேலும்,  எம்மை கஷ்டங்களும்,  சோதனைகளும் வந்தடைகையில் இறைவன் எம்மை இவ்வாறு சோதனைகளைத் தந்து சோதிக்கின்றான். இதன் மூலம் அவன் எம்மை நேசிக்கின்றான் என நாம் எண்ணுகையில் பிரச்சினைகள் மலையெனக் குவிந்த போதிலும் இறை நம்பிக்கைக்கு முன் பெரிதாகத் தோன்றாது.

இவ்வாறாக, எம்மை சோதிக்கின்ற இறைவன் இத்தகைய சோதனைகளுக்கு பகரமாக எம்மீது கொண்ட அளவிலா கருணையின் காரணமாக எமது பாவங்களையும் மன்னிக்கத் தவறுவதில்லை. 

“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். யாருக்கு அழ்ழாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகின்றான்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புஹாரி-5645)

மேலும்,  “அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அழ்ழாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.” (அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரி (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-5641)

நாம் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தற்கொலைதான் தீர்வு என்றால் இவ்வுலகினில் வீடுகளுக்கு பதிலாக மயான பூமிகளே மிகுதியாக காணப்படும். எமது உயிருக்கு சொந்தக்காரன் அழ்ழாஹ் மாத்திரமே. அதனை எடுக்கும் உரிமையும் அவனுக்கு மாத்திரமே உண்டு.

நாம் தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக் கொள்வது அழ்ழாஹ்வின் தனி அதிகாரத்தில் தலையிடுவதாகும். அதனால்தான் இறைவன் மிகப் பெரும் தண்டனையான நிரந்தர நரகத்தை இதற்கான தண்டனையாக நிர்ணயித்திருக்கின்றான்.

கொடிய நரகத்தினைப் பெற்றுத் தரும் இத்தற்கொலை கலாசாரமானது ஏனைய சமுதாயங்களுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம்களிடம் குறைவாயினும், அவ்வப்போது இவ்வாறான தற்கொலைச் சம்பவங்கள் எமது சமூகத்தில் இடம் பெறாமலுமில்லை.

தற்கொலையை தீர்வாக எடுப்பவர்களைப் பற்றி அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகையில்,

“யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ, அவர் நரகத்திலும் தமது கழுத்தை நெறித்துக்கொண்டிருப்பார். யார் தம்மைத்தாம் (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகத்திலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக்கொண்டிருப்பார்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி),  நூல்: ஸஹீஹுல் புஹாரி-1365)

“யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக்கொண்டேயிருப்பார்.

யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக்கொண்டேயிருப்பார்.

யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-5778)

“ஜுன்துப் (ரழி) அவர்கள் இந்த (பஸ்ராவின்) பள்ளிவாசலில் வைத்து எங்களிடம் (ஒரு ஹதீஸைக்) கூறினார்கள். அதை நாங்கள் மறக்கவில்லை. மேலும் ஜுன்துப் (ரழி) அவர்கள்,  நபி (ஸல்) அவர்கள் விஷயத்தில் பொய்யைக் கூறியிருப்பார் என்று நாங்கள் அஞ்சவுமில்லை. அவர்கள் கூறியதாவது: ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்துகொண்டார். உடனே அழ்ழாஹ், என் அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான்.  எனவே அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கிவிட்டேன்  எனக் கூறினான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: ஹஸன் அல்பஸரி (ரஹ்), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1364)

மேலுள்ள நபிமொழிகள் மூலம் தற்கொலைக் கலாசாரத்தை கையிலெடுப்பவர்கள் பெறக்கூடிய தண்டனையை அறிந்த முஸ்லிம்கள் நிரந்தர நரகத்தினைப் பெற்றுத் தரக்கூடிய இத் தற்கொலைக் கலாசாரத்தை கனவில் கூட நினைக்க மாட்டார்கள்.

ஜனாஸாத் தொழுகை கிடையாது.

நிரந்தர நரகத்தை ஈட்டித் தரக் கூடிய தற்கொலைக் கலாசாரத்தை கையிலெடுப்பவர்களுக்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடாத்தவில்லை.

“ஒரு மனிதர் நோயுற்ற போது அவர் திடுக்கத்துக்குள்ளானார். அவருடைய அண்டை வீட்டுக்காரர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து,
‘அவர் இறந்து விட்டார்’ என்று சொன்னார். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,  ‘அவர் இறந்தது உனக்குத் தெரியுமா?’  என்று கேட்டார்கள். ‘நான் அவரை (இறந்திருக்கக்) கண்டேன்’  என்று அம்மனிதர் கூறினார். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அவர் இறக்கவில்லை’ என்று சொன்னார்கள்.

பிறகு அம்மனிதர், (நோயாளியிடம்) வந்ததும் அவர் கூரான ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதைக் கண்டார். உடனே, அம்மனிதர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அவர் இறந்து விட்டார்’ என்று தெரிவித்தார். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அவர் இறந்தது உனக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அம்மனிதர், ‘அவர் தன்னிடமிருந்த கூரிய முனையுள்ள  ஈட்டியால் அறுத்துக் கொள்வதை நான் பார்த்தேன்.’  என்றார். ‘நீ  பார்த்தாயா?’ என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அவர் ஆம் என்றார்.

‘அப்படியானால் நான் அவருக்குத் தொழுவிக்கமாட்டேன்’ என்று சொன்னார்கள்.’  (அறிவிப்பவர்: ஜாபிர் பின் சமுரா (ரழி),  நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1779,  அபூதாவூத்-3185)

“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் கைபர் போரில் கலந்துகொண்டோம். அப்போரின்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களில் தம்மை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்ட ஒருவரைப் பற்றி இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று கூறினார்கள்.

போரிடும் நேரம் வந்தபோது அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டு அவரை உட்காரவைத்து விட்டன. அப்போது நபித்தோழர்களில் ஒருவர் வந்து அழ்ழாஹ்வின் தூதரே! தாங்கள் எவரைக் குறித்து அவர் நரகவாசி என்று சொன்னீர்களோ அவர் இறைவழியில் கடுமையாகப் போரிட்டு அதிகமான காயங்கள் அடைந்துள்ளார் என்று கூறினார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் அவர் நரகவாசிகளில் ஒருவர்தாம் என்றே கூறினார்கள்.

அப்போது முஸ்லிம்களில் சிலர் (நபி (ஸல்) அவர்களின் இச்சொல் குறித்து) சந்தேகப்படும் அளவுக்கு போய்விட்டார்கள். நிலைமை இவ்வாறு இருக்கும்போது, அந்த மனிதர் காயத்தின் வேதனையை உணரலானார். உடனே அவர் தமது கையை அம்புக்கூட்டுக்குள் நுழைத்து அதிலிருந்து ஓர் அம்பை உருவி அதன் மூலம் தற்கொலை செய்துகொண்டார். உடனே முஸ்லிம்களில் சிலர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விரைந்து வந்து அழ்ழாஹ்வின் தூதரே! தங்களின் அறிவிப்பை அழ்ழாஹ் உண்மையாக்கிவிட்டான். இன்ன மனிதர் தற்கொலை செய்து தம்மை மாய்த்துக் கொண்டார். (அதனால் அவர் நரகவாசிகளில் ஒருவராகிவிட்டார்) என்று கூறினர்.

அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலாலே! எழுந்து சென்று இறை நம்பிக்கையாளர் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது. மேலும், அழ்ழாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் மூலமாகவும் வலுவூட்டுகின்றான் என்று (மக்களிடையே) அறிவிப்புச் செய்யுங்கள் என்று கூறினார்கள்.” ( அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி),  நூல்: ஸஹீஹுல் புஹாரி-6606)

மேலுள்ள நபிமொழிகள் ஒருவர் இஸ்லாத்திற்காக அளப்பெரிய தியாகம் செய்தவராக இருந்தாலும், அவரின் இறுதி முடிவு தற்கொலையாக இருக்குமாயின் அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவராகவே மரணிக்கின்றார் என்பதையும், அவருக்கு ஜனாஸா தொழுகை நடாத்த முடியாது என்பதனையும் அறிந்து கொள்ளலாம். மனிதன் என்கின்ற வகையில் எம்மை பல்வேறு சோதனைகளும், வேதனைகளும் வந்தடையலாம்.

ஒருவர் நீண்டகாலமாக தாங்கொணா நோயினால் சிரமப்படலாம். இன்னும் சிலருக்கு தொடர்ச்சியாக மிக நெருங்கியவர்களின் மரணங்கள் சம்பவிக்கலாம்.

மிகச் செல்வந்தனாக வாழ்ந்த ஒருவர் எதிர்பாராத முறையில் தனது சொத்து, சுகங்கள் அனைத்தையும் இழக்க நேரிடலாம். இவ்வாறாக, எம்மை நோக்கி அடுக்கடுக்காக சோதனைகள் தொடர்ந்தாலும் மறுமையை நம்பிய விசுவாசிகளான நாம் ஒரு போதும் இத்தற்கொலைக் கலாசாரத்தினை தீர்வாக நினைக்க கூடாது.

மாறாக, ஒரு முஸ்லிம் இது இறைவனின் ‘கழாகத்ர்’ (விதி) அடிப்படையில் நிகழ்ந்தது என்று இறைவன் மீது முழுப் பொறுப்புச் சாட்டுவதுடன்,  எமது உள்ளங்கள் அமைதி இழந்து காணப்படுகின்ற நேரங்களில் இறைவனை நிiனைவு கூர்ந்து உள்ளத்தினை அமைதிப்படுத்த வேண்டும். இதனையே அருள்மறைக் குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

“நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அழ்ழாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அழ்ழாஹ்வின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.” (அல்குர்ஆன் 13:28)

தற்கொலைக் கலாசாரத்தை கையிலெடுப்பவருக்கு நிரந்தர நரகம் என எச்சரிக்கின்ற இஸ்லாம் இவ்வாறான சோதனைகளையும், வேதனைகளையும் தாங்க முடியாது எனக் கருதுகின்றவர்களை நோக்கி இறுதியாக, பிரார்த்தனை ஒன்றைக் கற்றுத் தருகின்றது.

“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த ஒரு துன்பத்தின் காரணத்தினால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித்தான் ஆக வேண்டும் என்றிருந்தால், ‘இறைவா! (நான்) உயிர்வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின்,  என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!’ என்று கேட்கட்டும்.” (அறிவிப்பவர்: அனஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-6351)

இறுதியாக, எம்மை நோக்கி எவ்வாறான சோதனைகள், வேதனைகள் ஏற்பட்ட போதிலும் கொடிய நரகத்தினைப் பெற்றுத் தரும் இத்தற்கொலைக் கலாசாரத்திலிருந்து எம்மனைவரையும் அழ்ழாஹ் காத்தருள்வானாக!

வன்முறைக் கலாசாரமும் வாழ்வியல் வழிகாட்டியின் அறிவுரையும்

முஹம்மட் அர்ஷாத் அல் அதரி
arshathalathary@gmail.com

இன்றைய செய்தித்தாள்கள் மற்றும் உள்ள ஊடகங்களில் மிக அதிகளவில் வெளிவருகின்ற செய்திகளில் வன்முறைகள் பற்றிய செய்திகளே முதலிடம் வகிக்கின்றன என்ற கூறுகின்ற அளவிற்கு வன்முறை பற்றிய செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இன்று மனித உயிர்கள் பெறுமதியற்றதாக ஆக்கப்பட்டு மனித நேயம் அற்றவர்களால் காவு கொள்ளப்படுகின்றன. இவ்வாறு வன்முறைகளின் காரணமாக அப்பாவி மக்களின் பெறுமதிமிக்க உயிர்கள் பறிக்கப்படுவதை எந்த மதமும் அனுமதிப்பதில்லை. இவ்வாறாக கொல்லப்படுவது ஒரு முஸ்லிமாக, கிறிஸ்த்தவனாக, இந்துவாக, பௌத்தனாக யாராக இருந்தாலும் அவனது உயிர் விலைமதிப்பற்றது. வலியும், வேதனையும் எல்லோருக்கும் பொதுவானதுதான்.

இத்தகைய மனித குலம் வெறுக்கின்ற வன்முறைக்கலாசாரம் தொடர்பாக கழிப்பறை ஒழுக்கம் முதல் அரசாட்சி நடாத்துவது வரை மிக உன்னதமான வழிகாட்டலினை வழங்குpன்ற சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின் நிலைப்பாடு குறித்து நோக்குவோம்.

இஸ்லாம் வன்முறைறைய ஆதரிக்கின்றதா?

அறிவுப்பூர்வமான சத்திய இஸ்லாமிய மார்க்கத்தினை நோக்கி உலக மாந்தர்கள் சாரை சாரையாக அணிதிரள்வதனைப் பார்த்து சகித்துக் கொள்ள முடியாத யூத,கிறிஸ்த்தவ, சியோனிஸவாதிகள் வன்முறைக் கலாசாரத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற விரும்புகின்ற இத்தூய கொள்கையினை நோக்கி ‘வன்முறை நிறைந்த மார்க்கம்’ என்கின்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை இன்றைய நவீன வெகுஜன ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் கூறுகையில் உண்மையாகும் என்கின்ற கோயபல்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் இவ்விஷக் கருத்தை விதைப்பதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளனர். இவ்வாறான விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு அவதூறை அள்ளி வீசுகின்றவர்களுக்கு இறைமறை பின்வருமாறு ஆணித்தரமாக பதிலளிக்கின்றது.

கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்’ (அல்குர்ஆன் 05:32)

வன்முறைக் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி இட்டு இந்த பூமியில் அமைதியையும், சமாதானத்தையம் நிலைநாட்ட விரும்புகின்ற சத்திய மார்க்கத்தை நோக்கி வன்முறை நிறைந்த மார்க்கம் என்கின்ற அபாண்டான குற்றச்சாட்டுக்களை சுமத்துபவர்கள் மேலுள்ள அருள்மறை வசனத்தை சிந்திக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

ஒரு தனிமனிதனை கொலை செய்தவன் முழு மனித சமுதாயத்தினையும் கொலை செய்தவன் போன்றவனாவான் என்ற மிகக் கடுமையான எச்சரிக்கையினூடாக கொலைக் கலாசாரத்திற்கும், வன்முறைக்கும் முற்றுப் புள்ளி இடுகின்றது. மேலும், அருள்மறைக் குர்ஆன் இணைவைத்தலுக்கு அடுத்த படியாக மிகப் பெருங்குற்;றம் மனிதக் கொலையாகும் எனக் குறிப்பிடுகின்றது.

அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான்.’ (அல்குர்ஆன் 25:68)

மேலும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அதே வேளை ஒவ்வொரு சமுதாயத்திலும் சிலர் மனித நேயத்திற்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவது போன்று இஸ்லாமிய சமுதாயத்திலும் சிலர் உள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் ஒரு கிறிஸ்த்தவன் வன்முறையில் ஈடுபடும் போது அவன் சார்ந்துள்ள மதத்தினை தொடர்புபடுத்தி கிறிஸ்த்தவ வன்முறையாளன் என்றோ,ஒரு இந்து வன்முறையில் ஈடுபடும் போது இந்து வன்முறையாளன் என்றோ, ஒரு பௌத்தன்  வன்முறையில் ஈடுபடும் போது பௌத்த வன்முறையாளன் என்றோ அழைக்காத இந்த பக்கச்சார்பான ஊடகங்கள் இஸ்லாத்தைப் பற்றி சரிவரப் புரிந்து கொள்ளாத, இஸ்லாமிய சமுதாயத்திலுள்ள ஒருவன் வன்முறையில் ஈடுபட்டு விட்டால் மாத்திரம் அதனை அவன் சார்ந்துள்ள மார்க்கத்தோடு தொடர்புபடுத்துவதற்காக வரிந்து கட்டிக் கொண்டு செயற்படுவதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
மேலும், பலஸ்தீன், ஆப்கானிஸ்த்தான், ஈராக் போன்ற நாடுகளில் எமது ஈமானிய உறவுகளுக்கு எதிராக கோரமுகம் கெண்ட யூத, கிறிஸ்தவ சியோனிஸ்டுகள் கட்டவிழ்து விடும் கெடூரமான வன்முறைத் தாக்குதல்கள் மனித உரிமை மீறல்களினால் தினம் தினம் எமது உறவுகள் பச்சிளம் பாலகர்கள் அனுபவிக்கின்ற சோதனைகள், வேதனைகள் மரண ஓலங்களெல்லாம் பூசி மறைக்கப்பட்டு விட்டு ஏதோ பொழுது போக்கிற்காக அம்மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது போன்று ஊடகங்கள் சித்தரிப்பதனையும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

மேலும் வன்முறைக் கலாசாரத்தை மார்க்க அடிப்படையிலும், மனித நேயத்தின் அடிப்படையிலும் எந்தவொரு முஸ்லிமும் அங்கீகரிப்பதில்லை.

இஸ்லாமும் மனித நேயமும்

வன்முறைக் கலாசாரத்திற்கெதிரான மனிதநேயத்தை உலகில் வேறு எந்த மதங்களோ, கொள்கைகளோ போதிக்காத அளவிற்கு சத்திய இஸ்லாமிய மார்க்கம் போதிக்கின்றது. இதனை திருமறைக் குர்ஆன் பின்வருமாறு எடுத்தியம்புகின்றது.

‘ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’ (அல்குர்ஆன் 05:32)

எந்த வியாக்கியானங்களோ, விளக்கங்களோ தேவையற்ற அளவிற்கு மிக அழகிய முறையில் மனித நேயம் என்பது பேச்சளவில் மாத்திரம் இருக்கக் கூடாது என்பதனையும் மனித நேயத்தின் அதீத முக்கியத்துவத்தினையும் அழகுற கற்றத் தருகின்றது. மேலும் மனித நேயத்தைப் பற்றி உலகப் பொதுமறை அல்குர்ஆன் குறிப்பிடுகையில் விசுவாசங் கொண்டோர், விசுவாசங் கொள்ளாதோர் எனக் குறிப்பிடாது மனிதர்கள் என்று குறிப்பிடுவதன் மூலம் இன, மத பேதங்களைக் கடந்து இஸ்லாம் மனித நேயத்தை எந்தளவிற்கு வலியுறுத்துகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

வன்முறைக் கலாசாரத்திற்கு நேர்எதிரான மனித நேயம் பற்றி தொடர்ந்து உலகப் பொதுமறை அல்குர்ஆன் குறிப்பிடுகையில், (5:2),(5:8),(4:135)

வன்முறைக் கலாசாரமும் முஸ்லிம்களும்

வன்முறைக் கலாசாரத்திற்கெதிரான மனித நேயமிக்க சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின் வழிகாட்டல் இவ்வளவு அழகாக வரையறுக்கப்பட்டிருக்க, இஸ்லாமிய சமுதாய மக்களில் சிலர் அறியாமையின் காரணமாக அல்லது அறிந்தும் இறைகட்டளைகளை உதாசீனப்படுத்திவிட்டு இவ்வன்முறைக் கலாசாரத்தினைக் கையிலெடுக்கின்றனர்.

குறிப்பாக, தேர்தல் காலம் வந்துவிட்டால் மார்க்கத்திற்கு முரணான வகையில் பல்வேறு வன்முறைகள் அரங்கேற்றப்படுகின்றன. மாற்றுக் கருத்துள்ள சகோதரர்களின் விடயத்தில் பல்வேறு அநீதிகள் இழைக்கப்படுகின்றன. அற்ப உலகாயுத நோக்கங்களுக்காக மாற்றுக் கருத்துள்ள தனது சகோதரனை கொலை செய்யக்கூட இவர்கள் தயங்குவதில்லை.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் பின்வரும் திருமறை வசனத்தை சிந்திக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

‘நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவனைச் சபிக்கிறான்.அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.’ (அல்குர்ஆன் 04:93)

மனித உயிரின் பெறுமதியைப் பற்றி மிக உயர்வாகப் பேசுகின்ற சத்திய இஸ்லாமிய மார்க்கம் வன்முறைக் கலாசாரத்தை, மனிதர்களைத் தாக்குவதை, சித்திரவதை செய்வதை, மிரட்டுவதை இன்னோரன்ன இது போன்ற மனித வாழ்விற்கு பங்கம் விளைவிக்க கூடிய அனைத்து அநாகரீகமான செயற்பாடுகளையும் கைவிடுமாறு கட்டளையிடுகின்றது.

மனித  நேயத்தைப் போதிக்கின்ற இஸ்லாம் வன்முறைக் கலாசாரத்தை கையிலெடுப்பதை ஒரு போதும் அனுமதிக்கவில்லை.

அண்மைக் காலத்தில் கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ளாத் திராணியற்றவர்களால் நமது சமூகத்தையே வெட்கித் தலைகுனிய வைக்க கூடிய வகையில், கண்ணிய மிக்க மார்க்க அறிஞர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதைக் காண்கின்றோம்.

இவர்கள் இறைவனைப் பயந்து கொள்வதுடன் இத்தகைய அநாகரீகமான செயற்பாடுகளை இத்துடன் விட்டொழிக்க முன்வர வேண்டும். மேலும், கண்ணிய மிக்க மார்க்க அறிஞர்களைத் தாக்குதல், வன்முறையைத் தூண்டக் கூடிய வகையில் ஜும்ஆ மற்றும் உரைகள் நிகழ்த்துதல், ஆய்வின் அடிப்படையில் எடுக்கப்ட்ட முடிவுகளினை விஷ்பரூபமாக்கி அதற்கெதிராக பள்ளிவாயல்களில் அறிக்கைகள் வாசிப்பதன் ஊடாக மக்களைத் தூண்ட முனைதல் போன்ற அனைத்து செயற்பாடுகளையும் நாம் விட்டொழிக்க முன் வர வேண்டும்.

இறுதியாக, வன்முறைக் கலாசாரத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற விழும்புகின்ற இஸ்லாமிய மார்க்கத்தின் கட்டளைகளை சிரமேற் கொண்டு நாம் அனைவரும் செயற்படுவதுடன்  எமக்குள் ஏற்படுகின்ற கருத்து வேறுபாடுகளுக்கு தடிகளால் தீர்வு காண்பதனை விடுத்து, ஆரோக்கியமான முறையில்  கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொண்டு பிற சமுதாயத்தவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழக் கூடிய வகையில் ஒரு நாகரீகமான சமுதாயம் உருவாவதற்கு எல்லாம் வல்ல அழ்ழாஹ் அருள் பாலிப்பானாக!

மீலாத் விழா நபி வழியா? புது வழியா?

முஹம்மட் அர்ஷாத் அல் அதரி
arshathalathary@gmail.com

உங்கள் மார்க்கத்தை அழ்ழாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அழ்ழாஹ் அறிவான். அழ்ழாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று(நபியே) கூறுவீராக! (அல்குர்ஆன் 49:16)

ரபீஉல் அவ்வல் மாதம் வந்துவிட்டால் எமது இஸ்லாமிய சமுதாய மக்களில் சிலர் மீலாத் விழாக் கொண்டாட்டங்கள் மூலம் அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள மீதான எமது அன்பை வெளிப்படுத்துகின்றோம் என்ற பெயரில் பல்வேறு அனாச்சாரங்களை அரங்கேற்று கின்றனர்.
அழ்ழாஹ்வின் பேருதவியால் தவ்ஹீத் எழுச்சியின் காரணமாக மீலாத் விழாவின் பெயரால் அரங்கேற்றப்படுகின்ற அனாச்சாரங்கள் பல ஊர்களில் வழக்கொழிந்து போனாலும் சில பிரதேசங்களில் இன்றும் இவை அரங்கேற்றப்பட்டு வருவதால் அது தொடர்பான தெளிவுக்காக இவ் ஆக்கம் வரையப்படுகின்றது.

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பதன் அவசியம்
 
அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை நேசிப்பது விசுவாசத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும். தூதர்(ஸல்) அவர்களை நேசிக்காத ஒருவர் ஒருபோதும் விசுவாசியாக இருக்க முடியாது. இதை அருள்மறை பின்வருமாறு கூறுகின்றது.

‘நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி(முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்’ (அல்குர்ஆன் 33:06)

மேலும், ஒரு மனிதனின் பெற்றோர், உற்றார், உறவினர், சொத்து, செல்வங்கள் அனைத்தையும் விட அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நேசத்திற்குரிய வர்களாக மாறாத வரை அவர் இறை நம்பிக்கையாளராக முடியாது என்பதை பின்வரும் நபிமொழி மிகத் தெளிவாக எடுத்தியம்புகின்றது.

‘நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் உமர் பின் அல்கத்தாப்(ரழி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், அழ்ழாஹ்வின் தூதரே! என்னைத் தவிரவுள்ள எல்லாவற்றையும்விட நீங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் என்று சொன்னார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், இல்லை என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக உம்மை விடவும் நானே உமக்கு மிகவும் பிரியமானவனாக ஆகும் வரை(நீர் உண்மையான இறை நம்பிக்கையாளர் ஆக முடியாது) என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்களை நோக்கி உமர்(ரழி) அவர்கள், இப்போது அழ்ழாஹ்வின் மீதாணையாக! என்னைவிடவும் தாங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்போதுதான் உமரே! (சரியாகச் சொன்னீர்கள்) என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஹிஷாம்(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-6632)

அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை எவ்வாறு நேசிக்க வேண்டும்?
 
அருள்மறையாம் திருமறை கூறுகின்றது. ‘நீங்கள் அழ்ழாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அழ்ழாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அழ்ழாஹ் மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையோன் என்று கூறுவீராக!’  (அல்குர்ஆன் 03:31)
அழ்ழாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் ஒரு விடயத்தை மார்க்கம் என்று தீர்மானித்து விட்டால் அதில் கூட்டல், குறைத்தல் செய்யாது சுன்னாக்களை சில்லறைகள் என்று கூறி அற்பமாகக் கருதாது வஹியை மாத்திரம் பின்பற்றுவதே அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை நேசிப்பதாக அமையும்.
மேலும், திருமறைக் குர்ஆன் கூறுகின்றது. ‘(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.’ (அல்குர்ஆன் 4:65)

மீலாது விழாவின் தோற்றம்
 
இஸ்லாமிய வரலாற்றில், அழ்ழாஹ்வின்; தூதர்(ஸல்) அவர்களின் காலம் முதல் ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டு வரை மீலாத் விழா கொண்டாடப்படவில்லை. ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் தாங்கள் பாத்திமா(ரழி) அவர்களின் பரம்பரையினர் எனப் போலியாக வாதிடக் கூடிய, அலி(ரழி) அவர்களே நபித்துவத்திற்கு தகுதியானவரர்கள் என்றும், விரல் விட்டு எண்ணக் கூடிய சில நபித்தோழர்களை விட ஏனைய நபித்தோழர்களை காபிர்கள் எனவும் வாதிடக்கூடிய ‘பாத்திமிய்யாக்களினால்’  எகிப்தில் ஆட்சி நிறுவப்படுகின்றது. ‘அப்துல்லாஹ் பின் மைமூன் அல்கதாஹ்’ என்கின்ற யூதனின் சந்ததியினரே இவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மக்களை தம்பக்கம் கவர்வதற்காகவும், தமது ஆட்சி, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் பாத்திமிய்யாக்களின் நான்காவது ஆட்சியாளனான ‘அல்முயிஸ் லிதீனில்லா ஹில் உபைதி’ என்பவனால் அழ்ழாஹ்வின்; தூதர்(ஸல்) அவர்களின் பெயரிலும், பாத்திமா (ரழி), அலி(ரழி), ஹுசைன்(ரழி), ஹஸன்(ரழி) ஆகியோரின் பெயரிலும், ஆட்சியாளர் ஹாழிர் (பாத்திமிய்யாக் களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஹிஜ்ரி 230ல் பிறந்து இன்று வரை மறைவாக உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்) என்பவர் பெயரிலும் மீலாத் விழா(பிறந்த நாள்) கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்படுகின்றது.

எனவே, இந்த மீலாத் விழாக் கொண்டாட்டங்கள், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகத்தான் தோற்றுவிக்கப் பட்டவையேயன்றி அழ்ழாஹ்வின்; தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறை அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

மார்க்கம் நிறைவு செய்யப்பட்டு விட்டது

‘அழ்ழாஹ்வின்; தூதர்(ஸல்) அவர்கள்(துல்ஹஜ் 10ஆம் நாளில் மக்காவில்) மக்களுக்கு உரை நிகழ்த்தி னார்கள். அப்போது இது எந்த நாள் என்பது உங்களுக்குத் தெரியாதா என்று கேட்டார்கள். மக்கள் அழ்ழாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்த வர்கள் என்று கூறினார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணினோம். (அந்த அளவிற்கு மௌனமாக இருந்தார்கள்) பிறகு இது நஹ்ர் உடைய(துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவா என்று கேட்டார்கள். நாங்கள் ஆம்! அழ்ழாஹ்வின் தூதரே என்று சொன்னோம். நபியவர்கள், இது எந்த ஊர் இது புனித நகரமல்லவா என்று கேட்டார்கள். நாங்கள் ஆம்! அழ்ழாஹ்வின் தூதரே! என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள், அவ்வாறாயின் (புனிதம் வாய்ந்த) உங்களது இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமான) இந்த மாதத்தில் இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் செல்வங்களும் உங்களது மானமும் உங்கள் உடல்களும் உங்களுக்குப் புனிதமானவையே என்று கூறிவிட்டு, ‘(நான் வாழ்ந்த இதுகாலம் வரை உங்களிடம் இறைச் செய்திகள் அனைத்தையும்) தெரிவித்துவிட்டேனா எனக் கேட்டார்கள். நாங்கள் ஆம்(தெரிவித்துவிட்டீர்கள்) என்று பதிலளித்தோம். பிறகு நபி(ஸல்) அவர்கள் இறைவா! நீயே சாட்சி என்று சொன்னார்கள்.’ பிறகு (மக்களிடம்) இங்கு வந்திருப்பவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள். ஏனெனில், இச்செய்தியை(ப் பிறருக்கு)த் தெரிவிப்பவர்களில் எத்தனையோ பேர் தம்மைவிட அதை நன்கு நினைவிலிருத்திக் கொள்பவரிடம் தெரிவிக்கலாம் என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூபக்ரா(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-7078)

மேலுள்ள நபிமொழி அழ்ழாஹ்வின்; தூதர்(ஸல்) அவர்கள்; மார்க்கத்தில் மிகச் சிறியதொரு விடயத்தைக் கூட விட்டு வைக்காது இறைச்செய்திகள் அனைத்தையும் எத்தி வைத்துவிட்டார்கள் எனக்கூறுகின்றது. மீலாத் விழா மார்க்கத்தில் உள்ளதுதான் என ஒருவர் வாதிடுவாராயின் அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தமது தூதுத்துவப் பணியை சரியாக நிறைவேற்றவில்லை எனவும், மீலாது விழா போன்ற மார்க்கத்தில் உள்ள விடயங்களை அழ்ழாஹ்வின்; தூதர்(ஸல்) அவர்கள் சொல்லாது விட்டுவிட்டார்கள் என்பதாகிவிடும். மேலும், அருளாளன் அழ்ழாஹ் தனது அருள்மறையில் கூறுகின்றான்.

‘இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக் காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன்.’ (அல்குர்ஆன் 05:03)

மீலாத் விழா மார்க்கத்தில் உள்ளதுதான் என வாதிடும் போது மேலுள்ள அருள்மறை வசனத்தை மறுத்தவர்களாக ஆவதோடு, மார்க்கம் முழுமைப்படுத்தப் படாதது என்று கூறுகின்ற பெரும்பாவத்தில் ஈடுபட்டவர்களா கின்றோம். (இவ்வாறு வாதிடுவதிலிருந்து அழ்ழாஹ் எம்மனைவரையும் காப்பாற்றுவானாக!)
மாற்று மதக் கலாசாரத்திற்கு ஒப்பாதல்
 
பிறந்த நாள் கொண்டாடுவது கிறிஸ்துவ சமுதாயத்தினரின் கலாசாரமாகும். ‘யார் பிற சமுதாய கலாசாரத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த சமுதாயத்தை சார்ந்தவரே என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி), நூல்: அபூதாவுத்-4033)

மேற்படி நபிமொழியைப் படித்த பின்பாவது மீலாத் விழாவினை ஆதரிக்கக் கூடிய சகோதரர்கள் கிறிஸ்த்தவர்களுக்கு ஒப்பாகக் கூடிய மீலாத் விழா கொண்டாட்டத்தை விட்டொழிக்க முன் வர வேண்டும்.

மீலாத் விழா புது வழியே!

மீலாத் விழாக் கொண்டாட்டங்கள் அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த நபிவழியல்ல. மாறாக, மனிதர்கள் தங்களது உலகாயுத நோக்கங்களுக்காக உருவாக்கிக் கொண்ட புது வழியே என்பதை அறிந்து கொண்டோம். இவ்வாறு மனிதர்களாக மார்க்கம் என்ற பெயரில் தூதரை கேலி செய்யும் விதமாக புதுவழிகளை தோற்றுவிப்பது தொடர்பாக அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் பின்வரும் நபிமொழி இவ்வாறு எடுத்தியம்பு கின்றது.

அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நம்முடைய இந்த(மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2697)

‘செய்திகளில் மிகவும் உண்மையானது அழ்ழாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது(மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில்  கொண்டு சேர்க்கும்.’ (அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி), நூல்: நஸயீ-1560)

மேலுள்ள நபிமொழி மீலாத் விழாவும் அது தொடர்பான நிகழ்வுகளும் எம்மை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் என எச்சரிக்கின்றது. இன்னும், நாம் மீலாத் விழாக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதானது இந்த மார்க்கத்தின் சொந்தக்காரனான அழ்ழாஹ்வுக்கே பாடம் கற்பிக்க முனைவதாகும். இதனையே திருமறை இவ்வாறு எடுத்தியம்புகின்றது.

‘உங்கள் மார்க்கத்தை அழ்ழாஹ் வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா?’ (அல்குர்ஆன் 49:16)

இன்று இம்மீலாத் விழாக் கொண்டாட்டங்கள் ஊர்மட்டங்களில் வழக்கொழிந்து போய்விட்டாலும் கூட பாடசாலை மட்டங்களில் இஸ்லாத்தின் இனிய போதனைகள் விதைக்கப்பட வேண்டிய மாணவப்பருவத்தினரின் பிஞ்சுநெஞ்சங்களில் இம்மீலாது எனும் அநாச்சாரமும், அந்நிய சமூகங்கள் மீது மோகத்தை ஏற்படுத்தும் இத்தீய கலாசாரமும் விதைக்கப்படுவதையிட்டு பொறுப்பாளர்களும், பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் மாணவ சமூகமும் விழிப்பாக இருக்க வேண்டும்.

இறுதியாக, மீலாத் விழாவை ஆதரிக்க கூடிய சகோதரர்களே! நீங்கள் உண்மையில் அழ்ழாஹ்வையும் அவனது தூதர்(ஸல்) அவர்களையும் நேசிக்க கூடியவர்களாயிருந்தால் இஸ்லாத்தின் எதிரிகளால் உருவாக்கப்பட்ட மீலாத் விழா போன்ற அனாச்சாரங்களை விட்டொழித்துவிட்டு, அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது தொழுகை முறை எவ்வாறு இருந்தது? நோன்பு மற்றும் பெருநாள் வணக்கங்களில்  தூதர்(ஸல்) அவர்களது வழிமுறை எவ்வாறு இருந்தது? பிரார்த்தனையின் போது தூதரின் வழிமுறை எவ்வாறு இருந்தது? அன்றாட நடவடிக்கைகளில்  தூதர்(ஸல்) அவர்களது வழிமுறை எவ்வாறு இருந்தது? என வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அற்பமானது, சிறியது, பெரியது எனக்கருதாது அருள்மறைக் குர்ஆன், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் மூலம் அறிந்து பின்பற்றுவதனூடாக தூதர்(ஸல்) அவர்கள் மீதான உண்மையான நேசத்தை வெளிப்படுத்துவோமாக!

ஆடைஅணிந்த நிர்வாணிகள்

முஹம்மட் அர்ஷாத் அல் அதரி
arshathalathary@gmail.com
‘விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக் கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கின்றது.’ (அல்குர்ஆன் 17:32)

இஸ்லாம் கூறும் பெண்களின் ஆடை அணி கலன்கள் தொடர்பாக நோக்குவதற்கு முன்னர் ஏனைய சமுதாயங்களில் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை சற்று ஆராய்வோம். கிரேக்கர்கள் பெண்களை வியாபாரப் பொருளாகக்கருத, ரோமானியர்களோ பெண்களை உயிரற்ற ஒரு பொருளாகவே கருதிவந்தனர். மேலும், பிரெஞ்சுக்காரார்கள் கி.பி. 586ல் பெண் மனித இனத்தைச் சார்ந்தவளா? இல்லையா? என முடிவெடுக்க ஒரு ஆய்வு சபையை அமைத்தனர். இவ்வாறாக, பிறசமுதாயங்களில் பெண்கள் மிகவும் இழிநிலைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.

ஆனால், சத்திய இஸ்லாமிய மார்க்கமோ பெண்களுக்குரிய உரிமையையும் அந்தஸ்த்தையும் வழங்கி சமுதாயத்தில்  பெண்கள் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதற்கு வழிவகுத்தது. இது பற்றி அருள்மறையாம் திருமறை குறிப்பிடுகையில்,

‘சிலரை விட மற்றும்சிலரை அழ்ழாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளா தீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அழ்ழாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அழ்ழாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கின்றான்’ (அல்குர்ஆன் 04:32)

‘குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. அப்பங்கீடு கட்டாயக் கடமை.’ (அல்குர்ஆன் 04:07) என்று கூறுகின்றது. பெண்ணின் பெருமைகளைப் போற்றி, பெண்ணுக்குரிய கண்ணியத்தினை வழங்கிய வாழ்வியல் வழிகாட்டியான இஸ்லாமிய மார்க்கத்தின் ஆடை அணிகலன்கள் தொடர்பான வழிகாட்டலும் மிக உன்னத மானதாகும். ஆடை அணிவதன் நோக்கம் அதன் பயன்கள் தொடர்பாக அருள்மறை இவ்வாறு எடுத்தியம்புகின்றது.

‘ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.’ (அல்குர்ஆன் 07:26)

இஸ்லாத்தின் எதிரிகள் நமக்கு எதிராக செய்த சதி முயற்சிகளில் ஒன்றுதான் நாகரீக ஆடைகள் (ஆழனநசn னுசநளள) என்ற பெயரில் பெண்களின் உடல் அவயங்கள் தெரியக்கூடிய வகையில் மிக மெல்லிய, இறுக்கமான ஆடைகளை எம் பெண்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி, அதில் அவர்களை ஆர்வம் கொள்ளச்செய்ததாகும். அவ்வாறான ஆடைகளில் பெரும்பாலான ஆடைகள் தமது வீடுகளில், சக பெண்களுக்கு மத்தியில் கூட அணிய முடியாதவைகளாகும்.

உத்தம நபித்தோழியரின் வாழ்வினை படிப்பினை யாகக் கொண்டு செயற்பட வேண்டிய எம்பெண்கள் சீரழிந்த கலாசாரத்தின் சொந்தக்காரர்களான மேற்கத்தேயர் களையும், ஒழுக்க வாழ்வில் நெறிபிறழ்ந்த சினிமா நடிகையர்களையும் முன்மாதிரியாகக் கொண்டு செயற்படு கின்றார்கள். இவர்களைப் பார்த்து அனுதாபம் கொள்வதா? ஆத்திரப்படுவதா?

மேலும், மாலை நேர பிரத்தியேக வகுப்புக் களுக்குச் செல்லக்கூடிய எமது மாணவிகள் முகத்தை மூடி, மார்க்கம் மறைக்கச் சொன்ன முழங்கையை வெளிப்படுத்துவதுடன்; மிக மெல்லிய, இறுக்கமான ஆடைகளை அணிந்துகொண்டு செல்கின்றனர். அதுமாத்திர மன்றி, நாகரீக ஆடை என்ற பெயரில் தமது கால்பகுதியில் வெட்டு வைத்த ஆடைகளை அணிந்து செல்கின்றனர். இவ்வாறு ஆடை அணிபவர்களைப் பற்றி அழ்ழாஹ்வின் திருத்தூதர்(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்கையில்:

‘இரண்டு கூட்டத்தினர் நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களை இதுவரை நான் பார்த்ததில்லை. அவர்களில் ஒருசாரார் மாட்டு வால்களைப் போயன்ற சாட்டைகளைக் கையில் வைத்திருப்பார்கள். அவற்றால் மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் பெண்கள். அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். அவர்கள் ஒய்யாரமாக நடப்பார்கள். மற்றவர்களைத் தம் பக்கம் ஈர்ப்பார்கள். அவர்களுடைய தலை ஒட்டகத்தின் திமில் களைப் போன்று இருக்கும். அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்லமாட்டார்கள். சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகரமாட்டார்கள் என்று அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்-4316)

இந்த நபிமொழியைப் படித்த பின்பாவது மெல்லிய, இறுக்கமான ஆடை அணியக் கூடிய எமது சகோதரிகள் தங்களைத் திருத்திக் கொள்வார்களா?  அதுமாத்திரமன்றி, நாகரீகம் (குயளாழைn) என்று மேற்கத்தேய கலாசாரத்தில் மூழ்கிப் போயிருக்கின்ற சகோதரிகள் கீழ்வரும் நபிமொழியையும் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றார்கள்.

‘யார் பிற சமுதாய கலாசாரத்திற்கு ஒப்பாக நடக்கின் றாரோ அவர் அந்த சமுதாயத்தை சார்ந்தவரே’ என்று அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி), நூல்: அபூதாவுத்-4033)

இறுதியாக, ஒழுக்கம் மிக்க ஆடையாக திகழ்வதுடன் மிகச்சிறந்த நாகரீக ஆடையாகவும் விளங்குகின்ற ‘ஹிஜாபை’ பேணுவதன் மூலம் நாம் கொடிய நரக நெருப்பில் இருந்து காப்பாற்றப்பட்டு, அருளாளன் அழ்ழாஹ்வின் திருப்தியைப் பெறுவோமாக!

உயர்ந்தவனான இரட்சகன் உருவமற்றவனா?

முஹம்மட் அர்ஷாத் அல்அதரி

அகில உலகங்களையும், அண்ட சராசரங்களையும் படைத்துப் பரிபாலிக்க கூடிய அருளாளன் அழ்ழாஹ்வை எவ்வாறு நம்ப வேண்டுமென அழ்ழாஹ்வும், அவனது அருமைத் தூதர் (ஸல்) அவர்களும் நமக்கு கற்றுத் தந்தார்களோ அவ்வாறு நம்பாத வரை நமது இறை நம்பிக்கை பரிபூரணமடையாது. அந்த வகையில் அகிலத்தின் இரட்சகன் அழ்ழாஹ்வுக்கு உருவம் உண்டா? இல்லையா? என்பதில் நமது சமுதாய மக்களில் ஒரு சாரார் தொடர்ந்தும் தெளிவற்றவர்களாகவே இருந்து வருகின்றனர்.

இவற்றைத் தெளிவுபடுத்த வேண்டிய மார்க்க அறிஞர்களோ ‘ஸுன்னாக்களை சில்லறைகள்’ என சிறுபிள்ளைத்தனமாக விமர்சிப்பதற்கும், சத்திய இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் கூட்டல், குறைத்தல் செய்யாது எடுத்துரைப்பவர்களை சமூக ஒற்றுமைக்கு(?) எதிரானவர்களாக சித்தரிப்பதற்கும் மிம்பர் மேடைகளைப் பயன்படுத்தி பாழ்படுத்துகின்றனர்.

எனவே, சத்திய மார்க்கத்தின் தூய மூலாதாரங்களான அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் ஒளியில் அருளாளன் அழ்ழாஹ்வுக்கு உருவம் உண்டா? இல்லையா? என்பது பற்றி நோக்குவோம்.

வல்லமைமிக்கவனின் இருகைகள்

‘எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?’ என்று (இறைவன்) கேட்டான். (அல்குர்ஆன் 38:75)

‘அழ்ழாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது’ என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக, அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான். (அல்குர்ஆன் 05:64)

கண்ணியமிக்கவனின் மகத்துவம் நிறைந்த முகம்

‘இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும்’ (அல்குர்ஆன் 55:26,27)

சிரிக்கும் அளவற்ற அருளாளன்

அழ்ழாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கின்றான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிடுகின்றார். இருவருமே சொர்க்கத்தில் நுழைகின்றார்கள். இவர் அழ்ழாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்படுகின்றார். பிறகு (அவரைக்) கொன்றவர் பாவமன்னிப்புக் கோர, அதை ஏற்று அவரை அழ்ழாஹ் மன்னித்து விடுகின்றான். பிறகு, அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர்த் தியாகியாகி விடுகின்றார்கள் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)  நூல்: ஸஹீஹுல் புஹாரி-2826)
பேசுகின்ற நிகரற்ற அன்புடையோன்
(முஹம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை. அழ்ழாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான். (அல்குர்ஆன் 04:164)

செவியுறும் அகிலத்தின் இரட்சகன்

‘தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அழ்ழாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அழ்ழாஹ் செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அழ்ழாஹ் செவியுறுகிறான். அழ்ழாஹ் செவியுறுபவன் பார்ப்பவன்’ (அல்குர்ஆன் 58:01)

‘இறைவா! என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன். அது (உனக்காக) முழுமையாக அர்ப்பணிக்கப்படும். (இதை) என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன், அறிந்தவன்’ என்று இம்ரானின் மனைவி கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 03:35)

‘அந்த ஆலயத்தின் அடித்தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது ‘எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன், அறிந்தவன்’ (என்றனர்.)’ (அல்குர்ஆன் 02:127)

‘நீங்கள் நம்பிக்கை கொண்டது போல் அவர்களும் நம்பிக்கை கொண்டால் நேர் வழி பெறுவர். புறக்கணிப்பார்களாயின் அவர்கள் எதிரிகளே. அவர்கள் விடயத்தில் அழ்ழாஹ் உமக்குப் போதுமானவன் அவன் செவியுறுபவன், அறிந்தவன்.’ (அல்குர்ஆன் 02:137)

ஒற்றைக் கண்ணன் அல்லன்

….. பிறகு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அழ்ழாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்து சொன்னார்கள். நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கின்றேன். எந்த இறைத் தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தன் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு விபரத்தை உஙகளுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும் அழ்ழாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுஙகள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-3057, 3337)

திறக்கப்படும் கெண்டைக்கால்

கெண்டைக் கால் திறக்கப்பட்டு ஸஜ்தாச் செய்ய அழைக்கப்படும் நாளில் அவர்களுக்கு அது இயலாது.  (அல்குர்ஆன் 68:42)

அருளாளனின் அழகிய பாதம்

(நரகவாசிகள்) நரகத்தில் போடப்படுவார்கள். நரகம், (வயிறு நிரம்பாத காரணத்தால்) இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று கேட்கும். இறுதியில் அழ்ழாஹ் தனது பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, போதும்! போதும்! என்று கூறும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-4848)
நரகத்திடம் உனக்கு வயிறு நிரம்பிவிட்டதா? என்று கேட்கப்படும். அது இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று கேட்கும். அப்போது அருள் வளமிக்கவனும், உயர்ந்தோனுமான அழ்ழாஹ் தனது பாதத்தை அதன்மீது வைப்பான். உடனே அது போதும்! போதும்! என்று கூறும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-4849)

மேலுள்ள அருள்மறை வசனங்களும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகளும் அகிலத்தின் இரட்சகன் அழ்ழாஹ்வுக்கு தன்னிகரில்லா, தனி உருவம் உண்டு எனப் பறைசாற்றி நிற்கின்றன. மேற்கூறப்பட்ட அழ்ழாஹ்வின் பண்புகளை, படைப்புக்களின் பண்புகளுக்கு நிகராக்கி விடாது, நாமாக உருவம் கற்பிக்காது, வலிந்துரை செய்யாது நம்புதல் வேண்டும்.
உதாரணமாக, பார்வை என்கின்ற பண்பைப் பொறுத்தவரை மனிதப் பார்வையானது பல்வேறு குறைபாடுகளை உள்ளடக்கியது. ஆனால், அகிலத்தின் இரட்சகனின் பார்வையானது குறைபாடுகளுக்கு அப்பாற்பட்ட தூய்மையான, பரிபூரணமான பார்வையாகும். குறைபாடுள்ள மனிதப் பார்வையினால் மின்சாரத்தையோ, காற்றையோ, ஒளியினால் படைக்கப்பட்ட ஜின்களையோ, பகல் வேளையிலும் வான்வெளியில் பரந்துபட்டு காணப்படும் பல்லாயிரக் கணக்கான நட்சத்திரங்களையோ காண முடியாது. ஆனால், இறைவனின் பார்வையோ இதற்கு முற்றிலும் மாறுபட்டது. இதனைப் போன்று அருளாளன் அழ்ழாஹ்வின் ஒவ்வொரு பண்புகளும் பலவீனங்களுக்குற்பட்ட மனிதப் பண்புகளுக்கு முரணனான தூய்மையானதாகும்.

இதனையே திருமறைக்குர்ஆன் பின்வருமாறு கூறிக்காட்டுகின்றது.

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன், பார்ப்பவன் (அல்குர்ஆன் 42:11)

‘அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன், நன்கறிந்தவன்’ (அல்குர்ஆன் 06:103)

‘அழ்ழாஹ் ஒருவன்’ என (முஹம்மதே!) கூறுவீராக! அழ்ழாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:01-04)

மிஃராஜின் போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அழ்ழாஹ்வைப் பார்த்தார்களா?

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது அழ்ழாஹ்வைப் பார்த்ததாகவே இஸ்லாமிய சமுதாய மக்களில் பலர் நம்பியுள்ளனர். இதன் உண்மை நிலை தொடர்பாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்கள்.

‘நான் (அன்னை) ஆயிஷா (ரழி) அவர்களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்) அபூ ஆயிஷா, ‘மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அழ்ழாஹ்வின் மீது மிகப் பெரும் பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார்’ என்று கூறினார்கள். நான், ‘அவை எவை? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘யார் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அழ்ழாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டி விட்டார்’ என்று சொன்னார்கள்.

உடனே சாய்ந்து அமர்ந்து (ஓய்வு எடுத்துக்) கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து, ‘இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கூறுங்கள்! அவசரப்படாதீர்கள். வலிவும் மாண்புமிக்க அழ்ழாஹ், ‘அவரை தெளிவான அடிவானத்தில் பார்த்தார்’ (அல்குர்ஆன் 81:23) என்றும், ‘ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்’ (அல்குர்ஆன் 53:13) என்றும் கூறவில்லையா?’ என்று கேட்டேன்.

அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள். இந்த சமுதாயத்தாரில் இது தொடர்பாக அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) ‘அது, (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை, அவர் படைக்கப் பெற்றுள்ள (நிஜத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக்கொண்டிருந்தது. என்று கூறினார்கள்.

மேலும், ஆயிஷா (ரழி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) அழ்ழாஹ் (பின்வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார்கள். ‘அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்;. நன்கறிந்தவன்.’ (அல்குர்ஆன் 6:103)

அல்லது (பின்வருமாறு) அழ்ழாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? ‘எந்த மனிதருடனும் அழ்ழாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும், வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அழ்ழாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.’ (அல்குர்ஆன் 42:51) (தொடர்ந்து) ஆயிஷா (ரழி) அவர்கள் மீதமுள்ள இரண்டு விஷயங்களையும் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-287)

‘நான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அவன் ஒளியாயிற்றே நான் எப்படி பார்க்க முடியும்?’ என்று கேட்டார்கள்.’ (அறிவிப்பவர்: அபூதர்(ரழி), நூல்:ஸஹீஹ் முஸ்லிம்-291)

மேலுள்ள நபிமொழிகள் மூலம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் அழ்ழாஹ்வைப் பார்க்கவில்லை. மாறாக, இவ்வுலகில் பார்க்கவும் முடியாது என்பதை தெளிவுபடுத்துகின்றது.

நபி மூஸா (அலை) அவர்கள் அழ்ழாஹ்வைப் பார்த்தார்களா?

நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது ‘என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்’ எனக் கூறினார். அதற்கு (இறைவன்) ‘என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்’ என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது, ‘நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்’ எனக் கூறினார். (அல்குர்ஆன் 07:143)

மேலுள்ள அருள்மறை வசனத்தில் அழ்ழாஹ் மூஸா (அலை) அவர்களைப் பார்த்து, ‘என்னை நீர் பார்க்கவே முடியாது’  என்று கூறுவதன் மூலம் நபி மூஸா (அலை) அவர்கள் அழ்ழாஹ்வைப் பார்க்கவில்லை என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

மறுமையில் காட்சி தரும் நியாயத்தீர்ப்பு நாளின் அதிபதி

‘முழு நிலவுள்ள ஓர் இரவில் நாங்கள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் நிலவைக் கூர்ந்து பார்த்தபடி, அறிந்துகொள்ளுங்கள்! இந்த நிலவை நீங்கள் நெரிசல் இல்லாமல், அல்லது குழப்பமடையாமல் காண்பது போன்று உங்கள் இறைவனையும் நீங்கள் நிச்சயம் காண்பீர்கள்… (அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-573)
‘நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வெரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள் (ஆனால்) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும். (அறிவிப்பவர்: அபூசயீத் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-4919)
‘மக்கள் (அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), அழ்ழாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா? என்று வினவினர். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பௌர்ணமி இரவில் கீழே மேகம் சூழாத (வானில்) சந்திரனைக் காண்பதில் நீங்கள் ஐயம் கொள்வீர்களா? என்று கேட்டார்கள். மக்கள், இல்லை (ஐயம் கொள்ள மாட்டோம்) அழ்ழாஹ்வின் தூதரே! என்றார்கள். மீண்டும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கீழே மேகம் சூழாத சூரியனைக் காண்பதில் நீஙகள் ஐயம்கொள்வீர்களா? எனக் கேட்டார்கள். அதற்கும் மக்கள், இல்லை என்று பதிலளித்தனர். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவ்வாறுதான் உறுதியாக நீங்கள் இறைவனைக் காண்பீர்கள் என்று கூறிவிட்டு (பின்வருமாறும்) கூறினார்கள்:
மறுமை நாளில் மக்கள் அனைவரும் ஒன்று குவிக்கப்படுவார்கள். அப்போது, (உலகத்தில்) யார் எதனை வணங்கிக்கொண்டிருந்தார்களோ அதனைப் பின்பற்றிச் செல்லட்டும் என்பான் (இறைவன்). ஆகவே, சிலர் சூரியனைப் பின்பற்றிச் செல்வர். இன்னும் சிலர் சந்திரனைப் பின்பற்றிச் செல்வர். வேறு சிலர் தீய சக்தி(களான ஷைத்தான்கள், சிலைகள், மந்திரவாதிகள் போன்ற வழிகேடர்)களைப் பின்பற்றிச் செல்வர். இறுதியில் (எனது) இந்த சமுதாயம் மட்டும் தங்களிடையே நயவஞ்சகர்கள் இருக்கும் நிலையில் எஞ்சியிருக்கும்.
அப்போது வலிவும் மாண்பும் உடைய இறைவன் (அவர்கள் அறியாத தோற்றத்தில்) அவர்களிடம் வந்து, நான் உங்கள் இறைவன் என்பான். உடனே அவர்கள், எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம். எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம், என்று கூறுவார்கள். அப்போது அழ்ழாஹ் (அவர்கள் அறிந்த தோற்றத்தில்) அவர்களிடம் வந்து, நானே உங்கள் இறைவன் என்பான். அப்போது அவர்கள், நீ எங்கள் இறைவன்தான் என்பார்கள். பிறகு அவர்களை இறைவன் அழைப்பான். நரகத்தின் மேற்பரப்பில் பாலம் அமைக்கப்படும். (இறைத்தூதர்கள். தத்தம் சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள். நானே அ(ந்தப் பாலத்)தை முதலாவதாகக் கடப்பவன் ஆவேன்.
அன்றைய தினத்தில் இறைத் தூதர்களைத் தவிர வேறுயாரும் பேசமாட்டார்கள். அன்றைய தினத்தில், இறைவா! காப்பாற்று! காப்பாற்று!, என்பதே இறைத் தூதர்களின் பிரார்த்தனையாகும். தொடர்ந்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்நரகத்தி(ன் பாலத்தி)ல் கொக்கிகள் அமைந்திருக்கும். அவை (ஊமத்தங்காயின் முள்வடிவில்) சஅதான் செடியின் முள்ளைப் போன்றிருக்கும் என்று கூறிவிட்டு, சஅதான், செடியின் முள்ளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டார்கள். மக்கள், ஆம் (பார்த்திருக்கிறோம்) என்று பதிலளித்தார்கள். தொடர்ந்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அந்தக் கொக்கிகள் சஅதான் செடியின் முள்ளைப் போன்றிருந்தாலும் அதன் பருமனை அழ்ழாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அப்போது அந்த கொக்கி மக்களை அவர்களின் (தீய) செயல்களுக்கேற்ப பற்றிப் பிடிக்கும். அவர்களிடம் தம் (தீய) செயல்களை முன்னிட்டு பேரழிவுக்கு உள்ளாபவர்களும் உண்டு. (அந்தப் பாலத்தில்) தட்டுத்தடுமாறிய பின் தப்புபவர்களும் உண்டு.
இறுதியாக இறைவன் நரகத்திற்குரியவர்களில் தான் நாடிய சிலர் மீது கருனை காட்ட நினைக்கும்போது வானவர்களிடம், அழ்ழாஹ்வை வணங்கிக்கொண்டிருந்தவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுமாறு கட்டளையிடுவான். அவ்வாறே வானவர்கள் அவர்களை வெளியேற்றுவார்கள். சஜ்தாச் செய்த அடையாளங்களை வைத்து இவர்களை வானவர்கள் அடையாளம் காண்பார்கள். சஜ்தா செய்ததனால் (ஏற்பட்ட) அடையாளங்களைப் புசிக்கக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துவிட்டான். ஆகவே (அழ்ழாஹ்வை வணங்கியவர்கள்) நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். சஜ்தா செய்த(தால் ஏற்பட்ட) வடுக்களைத் தவிர ஆதமின் மைந்த(னான மனித)ர்களுடைய முழு உடம்பையும் நரகம் புசித்துவிடும்.

இந்த நிலையில் அவர்கள் கருகிப் போனநிலையில் நரகத்திலிருந்து வெளியேறுவார்கள். அப்போது அவர்கள் மீது (மாஉல் ஹயாத் எனும்) ஜீவநீரை ஊற்றப்படும். உடனே அவர்கள் வெள்ளச் சேற்றில் முளைத்துவிடும் தானிய வித்தைப் போன்று செழிப்புடன் எழுவார்கள். பின்னர் அழ்ழாஹ் அடியார்களிடையே தீர்ப்பளித்து முடிப்பான்.
இறுதியாக ஒரே ஒரு மனிதன் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே எஞ்சி நிற்பான். அவன்தான் நரகவாசிகளில் கடைசியாக சொர்க்கத்திற்கு செல்பவன். அவன் நரகத்தை முன்னோக்கியபடி, இறைவா! நரகத்தை விட்டும் என் முகத்தை திருப்புவாயாக! அதன் நச்சுக் காற்று என்னை அழித்துவிட்டது. அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது என்று கூறுவான். அப்போது அழ்ழாஹ், (உனது கோரிக்கைப்படி) இவ்வாறு உனக்கு செய்து கொடுக்கப்பட்டால் வேறு எதனையும் நீ கேட்காதிருப்பாயா? என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், இல்லை, உன் கண்ணியத்தின் மீதாணையாக! (வேறெதையும் கேட்கமாட்டேன்) என்பான்.
அந்தமனிதன் அழ்ழாஹ்விடம் தான் நாடிய உறுதிமொழியையும் வாக்குறுதிகளையும் வழங்குவான். அழ்ழாஹ் நரகத்தைவிட்டும் அம்மனிதனுடைய முகத்தை திருப்பிவிடுவான். சொர்க்கத்தை நோக்கி அவனுடைய முகத்தை திருப்பியதும் அம்மனிதன் சொர்க்கத்தின் செழிப்பைப் பார்த்துக்கொண்டு அழ்ழாஹ் நாடிய அளவு நேரம் அமைதியாக இருப்பான். பிறகு, இறைவா! என்னைச் சொர்க்கத்தின் வாசலருகே செல்லவைப்பாயாக! என்று கேட்பான். அதற்கு இறைவன், முன்பு கேட்டதைத் தவிர வேறெதையும் நீ என்னிடம் கேட்கமாட்டேன் என்று கூறி உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித்தாயே என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், இறைவா! என்னை உன் படைப்புக்களிலேயே நற்கதியற்றவனாய் ஆகிவிடக்கூடாது!’ என்று கூறுவான். அதற்கு இறைவன் “(நீ கேட்டது) உனக்கு வழங்கப்பட்டால் வேறு எதையும் நீ கேட்காமலிருப்பாயா” என்பான். அம்மனிதன் “இல்லை உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதல்லாத வேறெதையும் நான் கேட்கமாட்டேன்” என்பான்.
இதுகுறித்து இறைவனிடம் உறுதிமொழியும் வாக்குறுதியும் அந்த மனிதன் அளிப்பான். உடனே இறைவன் அந்த மனிதனை சொர்க்கத்தின் வாசல் வரை செல்லவைப்பான். அதன் வாசலை அவன் அடைந்ததும் அதன் ரம்மியத்தைக் காண்பான் அதிலுள்ள செழுமையையும் (மனதிற்கு) மகிழ்ச்சி (தரத் தக்கவை)யையும் காண்பான். பிறகு அழ்ழாஹ் நாடிய அளவுக்கு அவன் அமைதியாக இருப்பான். அதன்பின் அந்த மனிதன் “இறைவா! என்னை சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிப்பாயாக!” என்று கூறுவான். அதற்கு உன்னதனாகிய அழ்ழாஹ் “ஆதமின் மகனே! உனக்கு என்ன கேடு! ஏன் வாக்கைக் காப்பாற்றத் தவறிவிட்டாய் முன்பு வழஙகப்பட்டதைத் தவிர வேறெதையும் நான் கேட்கமாட்டேன் என உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித்தாயே!” என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், இறைவா! உன் படைப்புகளிலேயே என்னை நிற்கதியற்றவனாய் ஆக்கிவிடாதே! என்பான். இம்மனிதனின் நிலை இறைவன் கண்டு சிரிப்பான். பிறகு அவனுக்கு சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதியளித்துவிடுவான்.
அதன் பின் இறைவன் அம்மனிதனிடம், நீ ஆசைப்படுவதைக் கேள்! என்று கூறுவான். அம்மனிதனும் தான் ஆசைப்படுவதை கூறுவான். இறுதியில் அவன் தன் ஆசைகள் யாவும் முற்றுப்பெறும் போது (அவனிடம்) இறைவன், இதைவிட அதிகத்தை நீ ஆசைப்படு! என்று சொல்லிக் கொடுப்பான். இறுதியில் ஆசைகள் முற்றுப் பெற்றுவிடும் போது உன்னதமானவனாகிய அழ்ழாஹ், உனக்கு இதுவும் உண்டு. இதைப்போன்று இன்னொரு மடங்கும் உண்டு என்பான்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-806)

இறுதியாக, அருள்மறை வசனங்களும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகளும் போதிக்கும் அடிப்படையில் அகிலத்தின் இரட்சகன் அழ்ழாஹ்வுக்கு தன்னிகரில்லா, தனி உருவம் உண்டு எனவும், அகிலத்தின் இரட்சகனை இவ்வுலகில் ஒருபோதும் பார்க்கவே முடியாது எனவும், நம்புவதுடன் அழ்ழாஹ்வின் பண்புகளை, படைப்புக்களின் பண்புகளுக்கு நிகராக்கி விடாது, நாமாக உருவம் கற்பிக்காது, வலிந்துரை செய்யாது நம்புதல் வேண்டும்.