நாம் சொல்வதென்ன?


  • வணக்கத்திற்கு தகுதியானவன் அழ்ழாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அறுத்துப் பலியிடுதல், பிரார்த்தித்தல், நேர்ச்சை போன்ற அனைத்து வழிபாடுகளும் அழ்ழாஹ்வுக்கு மாத்திரமே செய்யப்பட வேண்டும்.
  • முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அழ்ழாஹ்வின் இறுதித் தூதராவார்கள். அவர்களுக்கு முன்னர் பல இறைத்தூதர்கள் வந்து சென்றுள்ளனர்
  • வானவர்கள் என்ற ஒளியினால் படைக்கப்பட்ட, பல்லுருவம் எடுக்ககூடிய, இறைகட்டளைக்கு மாற்றம் செய்யாத ஒரு படைப்பினம் உண்டு.
  • திருமறைக் குர்ஆன் இறுதி இறை வேதமாகும். இதற்கு முன்னர் வருகை தந்த இறை தூதர்களுக்கும் வேதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • நியாயத் தீர்ப்பு நாள் என்று ஒன்று உண்டு. அந்நாளில் அழ்ழாஹ்வுடன் வணக்கத்தில் பங்காளிகளை ஏற்படுத்தியோருக்கு மன்னிப்பே கிடையாது.
  • இறைவனது விதி என்று ஒன்று உண்டு. அந்த விதிப்படியே உலகில் சகல காரியங்களும் நடை பெறுகின்றன. அதேவேளை மனிதன் முழுமையான சுதந்திரத்துடன் படைக்கப்பட்டிருக்கின்றான்.
  • சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின் சட்ட மூலாதாரம் அருள்மறைக்குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரமே. மாறாக, நபித்தோழர்களின் சொந்த செயற்பாடுகள், இஜ்மா, கியாஸ், இமாம்கள், பெரியார்களின் சொந்தக் கூற்றுக்கள் மார்க்க ஆதாரமெனக் கருதுவது ஈமானுக்கு மாற்றமான நிலையாகும்.
  • மீலாது, மௌலூது, கத்தம், பாத்திஹாக்கள், கந்தூரிகள், தரீக்காக்கள், தட்டு, தகடுகள், தாயத்து, கூட்டுதுஆ, குனூத் போன்ற அநாச்சாரங்கள் எம்மை நரகிற்கு இட்டுச் செல்லும் -சத்திய இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் முஸ்லிமல்லாத அன்பர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். -முஸ்லிம் தாய், தந்தையருக்கு பிறந்து விட்டதற்காக முஸ்லிமாக வாழாது இஸ்லாத்தின் தூய மூலாதாரங்களான அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் விளங்கிச் செயற்பட முன்வரவேண்டும். ""சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழிந்தே தீரும்." (அல்குர்ஆன் 17:81)